ஜோசப் கேம்ப்பெல் மற்றும் The Power of Myth –
‘நாயகனின் சாகசம்’
பில் மோயர்ஸ்
மற்றும் தொன்மவியலாளர் ஜோசப் கேம்ப்பெல் இருவரும் இலக்கியத்திலும், நிஜ வாழ்விலும்,
மேலும் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலும் நிலையான, தொடர்ச்சியான நாயக வடிவமைப்பு உட்பட
செவ்வியல் நாயகச் சுழற்சியை ஆய்வு செய்கின்ற, அடிப்படைகளைத் தகர்க்கின்ற முடிவற்ற உரையாடலைத்
துவக்கினர். பார்வையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வின் பகுதிகளை நாயகப் பயணங்களாகக் காணும்
போக்கை கேம்ப்பெல் உற்சாகப்படுத்துகிறார். முதல் அத்தியாயத்தின் ஒரு காட்சியில், பார்வையாளர்கள்
தங்களை எது கிளர்ச்சியடைச் செய்கிறது என்பதைக் கண்டறியத் தூண்டுவதோடு, தங்கள் சொந்தப்
பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குவதையும் கேம்ப்பெல் ஊக்கப்படுத்துகிறார்.
1988-ல் வெளியான,
The Power of Myth
தொலைக்காட்சி வரலாற்றில் மிக அதிகமாகப் பிரபலமடைந்த தொடர்களில் ஒன்று. அது தொடர்ந்து
புதிய பார்வையாளர்களையும் ஈர்த்த வண்ணம் உள்ளது.
பதிவுப் பிரதி
ஜோசப் கேம்ப்பெல்: நம்முன் கடந்து
செல்லும் அனைத்து காலகட்ட நாயகர்களுக்காக, சாகசங்களை இடர்ப்பாடுகளாகக் கருத வேண்டியதில்லை.
புதிர்வழிப்பாதை என்பது முற்றிலும் அறிந்த ஒன்று; நாம் அந்த நாயகப் பாதையின் ஒரு கண்ணியை
மட்டும் பின்தொடர வேண்டும். நாம் ஒரு வெறுப்புணர்வைக் காண நினைத்தால், ஒரு கடவுளைக்
காண்கிறோம். மற்றவர்களைச் சிதைத்துவிட நினைத்தால், நம்மை நாமே சிதைத்துக் கொள்கிறோம்.
ஒரு பரந்த வெளியில் பயணிக்க நினைத்தால், நமது சுய இருப்பின் மையத்திற்குள் வந்து விடுகிறோம்.
தனிமையில் இருக்க நினைத்தால், உலகில் அனைவரோடும் கூடி இருக்கிறோம்.
பில் மோயர்ஸ்: ஒவ்வொரு விசயமும் ஒரு கதையுடன்
தொடங்குவதாக ஜோசப் கேம்ப்பெல் நம்பினார். எனவே நாமும் ஜோசப் கேம்ப்பெல்லுடன் அவருக்குப்
பிடித்தமான ஒன்றுடன் இந்தத் தொடரைத் துவங்கலாம். மதம் பற்றிய ஒரு கருத்தரங்கத்திற்காக
அவர் ஜப்பான் சென்றிருந்தார். நியூ யார்க்கிலிருந்து வந்த ஒரு தத்துவவியல் அறிஞரான
மற்றொரு அமெரிக்கப் பிரதிநிதி ஒரு ஜப்பான் துறவியுடன் பேசிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்க
நேர்ந்தது: “சிறந்த பல சம்பிரதாயங்களை இப்போது நாங்கள் அடைந்திருக்கிறோம், உங்கள் புண்ணியத்
தலங்களின் ஒரு சில சம்பிரதாயங்களையும் இங்கே காண முடிகிறது. ஆனால், உங்கள் கருத்தியலை
நான் பெறவில்லை, உங்கள் இறையியலை நான் பெறவில்லை.” அந்த ஜப்பானியர் ஆழ்ந்த சிந்தனையில்
இருந்த போதிலும் சற்று இடைவெளிவிட்டு, தலையை மெதுவாக அசைத்தபடி கூறினார்: “நாங்கள்
எந்தக் கருத்தியலையும் பெறவில்லை என நினைக்கிறேன், எந்த இறையியலையும் நாங்கள் பெறவில்லை.
நாங்கள் நாட்டியம் ஆடுகிறோம்.”
கேம்ப்பெல் இதைத் தனது சொந்த வாழ்வு பற்றியது எனக் கூறியிருக்க வேண்டும். 1987-ல் அவர் தனது 83-வது வயதில் காலமான
பொழுது, ஆதிகாலம் முதல் மனிதர்களால் கூறப்பட்ட கதைகளும் புராணங்களும் பிரபஞ்சத்தையும்
அதனுள் அவற்றின் நிலைப்பாட்டையும் விவரிப்பதற்காகத் தோன்றிய தொன்மங்கள் பற்றிய உலகின்
முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவர் எழுதிய, தொகுக்கப்பட்ட 20 புத்தகங்கள்
அறிஞர்களையும் மாணவர்களையும் போல கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் மீதும் அதிகத் தாக்கம்
செலுத்தின. அவர் இறக்கும் பொழுது, சிறப்பு வாய்ந்த Historical
Atlas of World Mythology நூலைத் தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். ஒரு முழு வாழ்நாளின்
ஆன்மிக, அறிவார்த்த மெய்ஞானத்தை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் அவருடைய முயற்சி அது.
அவருடைய புத்தகங்களில்
சில செவ்வியல்கள்: 40 வருடங்களுக்கு முன்னரே அவருடைய அடையாளத்தை நிறுவிய The Hero
with a Thousand Faces; தொன்மம் பற்றிய நான்கு தொகுதி ஆய்வான The Masks of God. நான்
சந்தித்த முக்கியமான ஆன்மிகவாதிகளில் ஜோசப் கேம்ப்பெல் ஒருவர். ஆனால் அவர் ஒரு கருத்தியலையோ
அல்லது இறையியலையோ பெற்றிருக்கவில்லை. அவருக்குத் தொன்மம் என்பது பிரபஞ்சப் பாடல்,
நமது ஒன்றிணைந்த உணர்வற்ற நிலையின் ஆழத்தில் வேர் கொண்ட இசை, நம்மால் அந்தத் தாளத்திற்குப்
பெயரிட முடியாத போதும் கூட, அதற்குத் தகுந்தவாறு நாம் நடனமாடுகிறோம். அவருடைய வாழ்வின் கடைசி இரண்டு கோடைகாலங்களில் கலிபோர்னியாவில்
உள்ள அவருடைய நண்பரின் ஸ்கைவாக்கர் ரேன்ச் வீட்டில் இந்த உரையாடல்களைப் பதிவு செய்தோம்.
அந்த நண்பர் ஜார்ஜ் லூகாஸ். சாகசங்கள் நிரம்பிய அவருடைய திரைப்படம் ஸ்டார் வார்ஸ் கேம்ப்பெல்லின்
படைப்புகளின் தாக்கம் பெற்றது. தொன்மங்கள் கூறும் செய்தி மற்றும் அர்த்தங்கள் பற்றி
நாங்கள் பேசினோம், முதல் கதை சொல்லிகள் பற்றிப் பேசினோம், காதல் மற்றும் திருமணம் பற்றி,
கடவுள் மற்றும் பெண்கடவுள்கள் பற்றி, மதம், சடங்குகள், கலை மற்றும் உளவியல் பற்றிப்
பேசினோம். ஆயினும் அவருக்குப் பிடித்தமான உள்ளீட்டுப் பொருளான ஓராயிரம் முகங்கள் கொண்ட
நாயகனையே அடிக்கடி சுற்றி வந்தோம். ஓராயிரம் முகங்கள் கொண்ட நாயகன் எதற்கு?
ஜோசப் கேம்ப்பெல்: அருமை, ஏனெனில்,
நிகழ்வுகளின் குறிப்பிட்ட வகை நாயகத் தோற்ற வரிசை இருக்கிறது. அனைத்து உலகங்களின்,
வரலாற்றின் பலப் பல காலகட்டங்களின் கதைகளில் அதைக் காண முடியும். அது சாராம்சரீதியாக
பல்வேறு வகையான மக்களால் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வென நினைக்கிறேன்.
பில் மோயர்ஸ்: தொன்மங்களில்
நாயகரைப் பற்றி அல்லது நாயகர்களைப் பற்றி பல கதைகள் ஏன் இருக்கின்றன?
ஜோசப் கேம்ப்பெல்:
நல்லது, ஏனெனில் அதைப் பற்றி எழுதுவதன் மதிப்பு சார்ந்தது அது. அதாவது, புகழ்பெற்ற
நாவல் எழுத்தில் கூட, இந்த முதன்மைப் பாத்திரம் சாதித்தல் அல்லது உணர்தலின் வழக்கமான
எல்லைகளுக்கு அப்பால் காணப்படுகின்ற, சாதிக்கின்ற அல்லது நிகழ்த்துகின்ற நாயகன் அல்லது
நாயகி, யாராவது ஒருவர் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரு நாயகன் என்பவர் தன்னைவிடப் பெரியதாக
உள்ள ஏதேனும் ஒன்றிற்கு அல்லது பிறருக்குப் பொருத்தமாகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவராக
இருக்கிறார்.
பில் மோயர்ஸ்: எனவே, இந்த அனைத்துக் கலாச்சாரங்களிலும்,
எந்த வகையான பாத்திரங்களையும் நாயகன் ஏற்றிருக்கலாம், அது என்னவிதமான செயல்?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், இரண்டு
வகையான செயல்கள் இருக்கின்றன. ஒன்று பெளதீகச் செயல்; ஒரு போர்ச் செயலை அல்லது ஒரு வாழ்வைக்
காக்கின்ற நாயகத்தனம்மிக்க பெளதீகச் செயலை நிகழ்த்துகின்ற நாயகன், அதுதான் ஒரு நாயகச்
செயல். தன்னையே தருதல், தன்னை மற்றவருக்கு அர்ப்பணித்தல். மற்றொரு வகை ஆன்மிக நாயகன்.
மானுட ஆன்மிக வாழ்வின் வழக்கத்துக்கு மீறிய அதீத வரம்பை உணரக்கூடிய வடிவத்தைக் கற்றுக்
கொண்டு அல்லது கண்டடைந்து, திரும்ப வந்து அதை அறிவிக்கின்ற ஆன்மிக நாயகன். இது ஒரு
சுழற்சி, இது போகும், வரும், இது நாயகச் சுழற்சியைக் குறிக்கிறது.
இதை ஒரு சம்பிரதாயமான
எளிய முனைப்பில்கூட காணலாம். ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவத்தைத் துறந்து, முதியவனாக
மாற வேண்டும், தனது குழந்தைத்தனமான ஆளுமையையும் விழிப்பு நிலையையும் இழந்து, பொறுப்புமிக்க
மனிதனாகத் திரும்ப வேண்டும். இது அனைவரும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு அடிப்படை அனுபவம்,
அதில் நமது குழந்தைப் பருவம் என்பது குறைந்த பட்சம் 14 வருடங்கள். பின்னர் அந்தச் சார்பு
நிலையிலிருந்து, உளவியல்ரீதியான சார்பு நிலையிலிருந்து வெளியேறி, உளவியல்ரீதியான சுய-பொறுப்பினுள்
வீழ்வதற்கு ஒரு மரணமும் உயிர்த்தெழுதலும் தேவைப்படுகிறது. ஒரு நிலைப்பாட்டை விட்டு
விலகி, ஒரு செழிப்பான அல்லது மேலும் அதிகமாக முதிர்ந்த அல்லது வேறு நிலைப்பாட்டினுள்
உங்களைக் கொண்டு வருவதற்கான வாழ்வாதாரத்தைக் கண்டடைதல் என்பது தான் ஒரு நாயகப் பயணத்தின்
அடிப்படை வடிவம்.
பில் மோயர்ஸ்: எனவே மீண்டெழும்
சமூகத்தின் பிரம்மாண்ட அர்த்தத்தில் நாம் நாயகர்களாக இல்லாது போனால், அந்தப் பயணங்களை
நமக்குள்ளே ஆன்மிகரீதியாக, உளவியல்ரீதியாக நமக்கு நாமே உள்வாங்க வேண்டும்.
ஜோசப் கேம்ப்பெல்: சரிதான். ஓட்டோ
ரேங்க் அவருடைய அற்புதமான, The Myth of the Birth of the Hero எனும் சிறு நூலில், ஒவ்வொரும்
அவரவருடைய பிறப்பைப் பொறுத்தவரை ஒரு நாயகன் தான் என்று கூறுகிறார். ஒரு சிறிய நீர்
உயிரினத்திலிருந்து ஒரு மிகப் பெரிய உருமாற்றத்தை அவர் மேற்கொள்கிறார் என்று கூற முடியும்.
அமினோ அமிலத்தின் ஒரு எல்லையில் வசிப்பது, பின்னர் வெளியேறுதல், இறுதியாகச் சுய-நிலைப்பாடாக
இருக்கக்கூடிய ஒரு சுவாசப் பாலூட்டியாக உருமாறுவது என்பது ஒரு பரந்த உருமாற்றம், அது
ஒரு நாயகச் செயல்பாடு. அதைச் சுமந்து வருவதற்கான ஒரு தாயின் பங்களிப்பு மீதான ஒரு நாயகச்
செயல்பாடு. ஒரு முதன்மை நாயகன், நாயக வடிவம் எனக் கூறலாம்.
பில் மோயர்ஸ்: அதன் பிறகும்
மேற்கொள்ளப்பட வேண்டிய பயணம் இருக்கிறது.
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். மேற்கொள்ளப்பட
வேண்டிய பெரும் பயணம்.
பில் மோயர்ஸ்: மேலும் அந்தப்
பயணம் உள்ளார்ந்த உணர்வுடன் மேற்கொள்ளப்படவில்லை. நாயகர்கள் தங்கள் சுய முனைப்புடன்
செல்கிறார்களா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆமாம், அதில்
இரண்டு வகை உண்டு. மிகப் பொதுவான ஒன்று செல்டிக் தொன்மத்தில் உள்ளது. அது ஒரு மான்
அல்லது ஒரு விலங்கின் கவர்ச்சியைப் பின் தொடர்கிறவரைப் பற்றியது. அவர் அதைப் பின் தொடர்ந்து
செல்கிறார். பின்னர் அது அவரைச் சுமந்து கொண்டு, அவர் இதற்கு முன் கண்டிராத ஒரு கானகத்தில்
அல்லது ஒரு நிலப்பரப்பில் விட்டு விடுகிறது. அதன் பின், அந்த விலங்கு ஒரு உருமாற்றத்தை
மேற்கொண்டு, The Fairy Hills-ன் ராணியாகவோ, அவ்வாறான ஏதாவது ஒன்றாகவோ மாற்றம் அடைகிறது.
அது நீங்கள் செயல்படுவதைப் பற்றி அறியாத ஒன்று, ஆனால் அங்கு ஒரு சாகசச் செயலைத் திடீரென
நீங்கள் காண்பீர்கள்.
மற்றொன்று,
செயல்பாட்டை நிறைவேற்றுவதற்காகப் பொறுப்புணர்வோடும் உள்நோக்கத்தோடும் கட்டமைப்பது.
உதாரணமாக, “உமது தந்தையைப் போய்த் தேடு” என ஆதினா யுலிசஸின் மகன் டெலிமச்சூஸை அழைத்த
போது, தந்தையரைத் தேடல் என்பது இளையோருக்கு ஒரு பெரிய நாயகச் சாகசம். அதாவது, உமது
பணி, உமது இயல்பு, உமது ஆதாரம் அனைத்தும் தேடல் எனும் சாகசம். அவர் அதை உள்நோக்கத்தோடு
மேற்கொள்கிறார்.
பின்னர் நீங்கள்
ஒதுக்கப்படுவதற்கும், சார்ந்திருக்கவும் வேண்டியுள்ளது, உதாரணத்திற்கு, போர்வீரனாக
மாறுவது போல. நீங்கள் அதைத் திட்டமிடவில்லை, நீங்கள் அதனுள்தான் இருக்கிறீர்கள். நீங்கள்
மற்றொரு உருமாற்றத்தில் இருக்கிறீர்கள். ஒரு மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் சீருடையில் இருக்கிறீர்கள். நீங்கள் மற்றொரு உயிரினம்.
பில் மோயர்ஸ்: ஆகவே நாயகத்
தன்மை என்பது ஒரு அறநெறி சார்ந்த நோக்கத்தைப் பெற்றுள்ளதா?
ஜோசப் கேம்ப்பெல்:
அறநெறி
சார்ந்த நோக்கம் என்பது ஒரு மானுட இனத்தைக் காப்பது, அல்லது ஒரு தனிமனிதனைக் காப்பது,
அல்லது ஒரு கருத்தியலைக் காப்பது. அவன் ஏதோ ஒன்றிற்காகத் தன்னையே தியாகம் செய்கிறான்,
அதுதான் அதன் அறநெறி. இப்போது நீங்கள் மற்றொரு கோணத்திலிருந்து சொல்ல முடியும், அதாவது
உணர்த்தப்பட வேண்டியிராத ஏதோ ஒன்றாக அந்த ஏதோ ஒன்று இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
அதுதான் மற்றொரு பக்கத்தின் தீர்ப்பு. ஆயினும் நிகழ்த்தப்பட்ட நாயகத் தன்மையை அது சிதைக்கவில்லை,
முற்றிலும் இல்லை.
பில் மோயர்ஸ்:
நல்லது, அது நாயகர்கள் மீதான ஒரு வேறுபட்ட கோணம், நெருப்போடு இயைந்து, அதைத் திரும்பக்
கொண்டு வந்து, மானுட இனத்திற்கு நலன் தந்து, அதற்காகத் துன்பத்தில் உழல்கிற பிராமெத்யூஸ்
கதையை ஒரு இளைஞனாக நான் வாசித்துக் கொண்டிருந்த போது நான் பார்த்த கோணத்தைவிட வேறுபட்டது.
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், பிராமெத்யூஸ் மானுட இனத்திற்கு நெருப்பைக் கொண்டு வருகிறார், அதன் தொடர்ச்சியாக
நாகரிகத்தைக் கொண்டு வருகிறார். அதுதான் பிரபஞ்சக் கருத்துரு.
பில் மோயர்ஸ்:
ஓ, அப்படியா?
ஜோசப் கேம்ப்பெல்: அதன் பிறகான
ஒரு தொடர் ஓட்டத்தில் அந்த நாயகனான அந்த நெருப்பு அந்தக் கருத்துருவைக் களவாடியது.
பெரும்பாலும் அது ஒரு நீலப் பறவை அல்லது மரங்கொத்தி அல்லது அதைப் போல ஏதோ ஒன்று, அது
நெருப்பைத் திருடுகிறது, பின்னர் ஏதோ ஒன்றிடம் மேலும் ஏதோ ஒன்றிடம் என அதைக் கடத்துகிறது,
ஒரு விலங்கு பின்னர் மற்றொன்று. அதைச் சுமந்துச் செல்வதால் அவை அந்த நெருப்பால் சாம்பலாக்கப்படுகின்றன.
ஆம், விலங்குகளின் வேறுபட்ட வண்ணங்களுக்காகவும் மேலும் கவனம் கொள்கிறது. இது உலகளாவிய
தொன்மம், நெருப்புத் திருட்டு.
பில் மோயர்ஸ்:
இந்த நாயகக் கதைகள் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபடுகிறதா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், இது ஒளிர்வுக்
கோணம், அல்லது செயல், அவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. குறிப்பிடத்தக்க ஆதிகாலக்
கலாச்சார நாயகன் ஒருவன் இருக்கிறான், அவன் சிதிலப்படுத்தும் இயற்கை மாறுபாடுகளைச் சுற்றிக்
கொண்டிருக்கிறான். இப்போது ஒரு வனாந்திர, காட்டுமிராண்டித்தன, வடிவமற்ற உலகத்திலிருந்து
அவனுடைய உலகை வடிவமைக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிறான். ஆம், இது மற்றொரு
வடிவம். ஆனால் இது மனிதனுக்கான வடிவம் அல்ல. அவன் கொலைகாரப் பேய்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
பில் மோயர்ஸ்: ஆகவே ஒரு நாயகன்
என்பவன் காலப் போக்கில் தோன்றுகிறான், பெரும்பாலான பிற கோட்பாடுகள், கருத்தியல்கள்,
சாகசங்கள் போல.
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். கலாச்சாரம்
வளர வளர அவனும் வளர்கிறான். இப்போது மோசஸ் அவனுடைய மலைப் பாதையிலும், மலையுச்சியில்
யாஹ்வே-உடனான சந்திப்பிலும், ஒரு முழுமையான, புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான விதிமுறைகளுடன்
திரும்ப வருவதிலும் ஒரு நாயகப் பிம்பம். அதுதான் ஒரு நாயகச் செயல்பாடு. வெளியேறுதல்,
நிறைவுறுதல், திரும்புதல். மேலும் அந்த வழிகளில் பிற மரபுகளிலும் இணையாக இருக்கக்கூடிய
சாகசங்களும் இருக்கின்றன.
புத்த பிம்பம்
கிறிஸ்துவத்தைப் போன்றதுதான்; உண்மையில் 500 வருடங்கள் பழமையானது. நீங்கள் அந்த இரண்டு
மரபுகளையும் ஒரே நேர்கோட்டில் பொருத்திப் பார்க்கலாம், அவர்களுடைய திருத்தூதர்களின்,
துறவிகளின் பாத்திரங்களுடனும் பொருத்திப் பார்க்கலாம். கிறித்துவத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்
ஒரு பொருத்தமான சிறந்த நாயகச் செயல்பாடு இருக்கிறது. அவர் மூன்று தூண்டுதல்களை மேற்கொள்கிறார்:
பொருளாதாரத் தூண்டுதல், அங்கு அந்தச் சாத்தான் கூறுகிறது, “நீங்கள் மிகவும் பசியோடு
இருக்கும் ஒரு இளைஞன்; அந்தக் கற்களை ரொட்டிகளாக மாற்றுங்கள்”. இயேசு கூறினார், “மனிதன்
ரொட்டியால் மட்டும் வாழ்ந்து விடுவதில்லை, கடவுளின் ஒவ்வொரு சொற்களாலும் வாழ்கிறான்.”
அடுத்தது அரசியல் தூண்டுதல்: அவனை மலையுச்சிக்கு அழைத்துச் சென்று, உலகத் தேசங்களைக்
காண்பித்துக் கூறுகிறார், “என் முன் மண்டியிடுவதாக இருந்தால், இவை அனைத்தின் கட்டுபாட்டினுள்
வா.” பிறகு, “இப்போது நீ மிகவும் ஆன்மிகரீதியானவன், ஹெராத்தின் ஆலய உச்சிக்குச் சென்று,
உன்னை நீயே கீழே வீசுவதைக் காண், கடவுள் உன்னை உயரத் தூக்கித் தாங்கிக் கொள்வார், உம்மால்
உனது பாதங்களைக் கூட அடித்து நொறுக்க முடியாது.” எனினும் அவன் கூறுகிறான், “உங்களால்
உங்கள் கடவுளைத் தூண்ட முடியாது.” இவை கிறித்துவத்தின் மூன்று தூண்டுதல்கள்.
புத்தரும் வனத்தினுள்
செல்கிறார், அன்றையக் காலகட்ட முன்னணித் துறவிகளுடன் சொற்பொழிவாற்றுகிறார். அவர்களை
வழி நடத்திச் செல்கிறார், ஒளியூட்டும் மரம், போதி மரத்தின் கீழ் வருகிறார், மூன்று
தூண்டுதல்களை மேற்கொள்கிறார். அவை அதே தூண்டுதல்கள் அல்ல, அவை வேறுவிதமான மூன்று தூண்டுதல்கள்.
அவற்றில் ஒன்று காமம் பற்றியது, மற்றொன்று அச்சம் பற்றியது, மற்றொன்று சமூகக் கடமை
பற்றியது, உமக்கு என்ன சொல்லப்பட்டதோ, அதைச் செய்யும் கடமை. பின்னர் அவர்கள் திரும்பினர்,
சீடர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் கண்டடைந்த வரையறைகளின்படி ஒரு விழிப்புணர்வுப்
பாதையை அமைக்க சீடர்களுக்கு உதவினர். இவை ஒரே மாதிரியான நாயகச் செயல்பாடுகள்; இவை மோசஸ்,
புத்தர், கிறிஸ்து, முகமது அனைவரிடத்திலிருந்தும் வெளிப்படும் ஆன்மிக நாயகச் செயல்பாடுகள்.
முகமது பற்றி
இலக்கியப்பூர்வமாக நமக்குத் தெரியும். அவர் ஒரு ஒட்டகப் பயணியர் குழுவின் தலைவராக இருந்தார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறி, அவர் கண்டடைந்த ஒரு சிறு மலைக் குகையினுள் சென்று, தியானித்தார்,
தியானித்தார், மேலும் தியானித்தார், மேலும் தியானித்தார். ஒரு நாள் ஒரு குரல் கூறுகிறது,
“எழுது”, அதனால் நமக்கு குரான் கிடைத்தது உங்களுக்குத் தெரியும். இது ஒரு பழைய கதை.
பில் மோயர்ஸ்: சில வேளைகளில்
மெச்சுவதற்கு மாறாக நாயகனுக்காக நாம் சற்று இரக்கப்பட வேண்டியுள்ளதாகத் தோன்றுகிறது.
எனவே அவர்களில் பலர் தங்கள் சொந்தத் தேவைகளையும் தியாகம் செய்துள்ளனர்.
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், அவர்கள் அனைவரும்.
பில் மோயர்ஸ்: அவ்வப்போது
அவர்கள் சாதித்தவை சீடர்களின் புரிதல் திறன் இன்மையால் சிதைக்கப்பட்டுள்ளன.
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். அவர்கள்
பொற்குவியல்களுடன் கானகத்திலிருந்து வந்தார்கள், அவை சாம்பலாகி விட்டன. அது மற்றொரு
வடிவமைப்பு, அது நிகழ்கிறது.
பில் மோயர்ஸ்:
தர்க்கரீதியாகச் சாதிக்கக்கூடிய எளிமையான மதக்
கலாச்சாரத்தில், மூன்று மதங்களும் போதித்தவற்றை நாம் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது.
அதாவது நாயகப் பயணங்களை மதிப்பிடுதல் அதன் குறிப்பிடத்தக்க பகுதி என்பதையும், மறுதலித்தல்
இல்லாமல், மதிப்பு இல்லாமல் எவ்வித வெகுமதியும் இல்லை என்பதையும். குரான் கூறுகிறது,
“உங்களுக்கு முன் கடந்து சென்றவர்களுக்கு வாய்த்தது போல, அத்தகைய மதிப்பிடுதல்கள் இல்லாமல்
பேரின்பத் தோட்டத்தில் நுழையலாம் என்று எண்ணுகிறீர்களா?”
ஜோசப் கேம்ப்பெல்: நல்லது. உண்மையான
சிக்கல் என்னவென்று நீங்கள் உணர்ந்தால், முதன்மையாக அது உங்கள் சுயம் பற்றிய, உங்கள்
சொந்தச் சுய-பாதுகாப்பு பற்றிய முதன்மையான எண்ணத்தை இழப்பது பற்றியதாகும். உங்கள் சுயத்தை
இழத்தல், உங்களை மற்றவர்களுக்கு அர்ப்பணித்தல், அதனுள் அதை மதிப்பிடுதல், இல்லையா?
அதில் ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வு உருமாற்றம் உள்ளது, அது கவனிக்கத்தக்கது. அனைத்துத்
தொன்மங்களும் எதை ஆய்வு செய்கின்றன என்றால், அது விழிப்புணர்வின் உருமாற்றம். அதைத்தான்
நீங்கள் இந்தப் போக்கில் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இப்போது அந்த வழியில்
சிந்திக்க வேண்டும்.
பில் மோயர்ஸ்:
நல்லது, விழிப்புணர்வு எவ்வாறு உருமாற்றம் அடைகிறது?
ஜோசப் கேம்ப்பெல்: மதிப்பிடுதல்கள்
வாயிலாக.
பில் மோயர்ஸ்: நாயகன் மேற்கொள்ளும்
அந்த மதிப்பிடுதல்கள்.
ஜோசப் கேம்ப்பெல்: மதிப்பிடுதல்கள்
அல்லது சில குறிப்பிட்ட புரியச் செய்யும் வெளிப்பாடுகள். மதிப்பிடுதல்களும் வெளிப்பாடுகளும்
அனைத்தையும் பற்றிக் கூறுபவை.
பில் மோயர்ஸ்:
நல்லது. இன்றைய சமூகத்தில் நமக்காக ஒரு நாயகரீதியிலான தொன்மத்தைக் கட்டமைப்பது யார்?
திரைப்படங்கள் இதைச் செய்கின்றனவா, திரைப்படங்கள் நாயகத் தொன்மத்தை உருவாக்குகின்றனவா?
ஜோசப் கேம்ப்பெல்: எனக்குத் தெரியாது.
இப்போது திரைப்படங்கள் பற்றிய எனது அனுபவம், அதாவது திரைப்படங்கள் சார்ந்து நான் பெற்றிருக்கும்
குறிப்பிடத்தக்க அனுபவம் நான் சிறுவனாக இருந்த பொழுது பெற்றது, அவை அனைத்தும் உண்மையிலேயே
திரைப்படங்கள், அவை வெறுமனே பேசும் சித்திரங்கள் அல்ல, அவை கருப்பு, வெள்ளைத் திரைப்படங்கள்.
நான் ஒரு நாயகப் பிம்பத்தையும் பெற்றிருந்தேன், அது எனக்குச் சிலவற்றை அர்த்தப்படுத்தியது,
எனது பெளதிகப் பாத்திரத்தில் எனக்கான ஒரு வகை முன்மாதிரியாகச் செயலாற்றியது, அது டக்ளஸ்
ஃபேர்பேங்க்ஸ். நான் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் லியானர்டோ டா வின்ஸியின் கூட்டிணைப்பாக
மாற விரும்பினேன். அதுதான் எனது நோக்கம். ஆனால் அவை முன்மாதிரிகள், பாத்திரங்கள், அவைதான்
எனக்கு வாய்த்தன.
பில் மோயர்ஸ்:
ஸ்டார் வார்ஸ் போன்ற ஒரு திரைப்படம் ஆன்மிகச் சாகசத்திற்கான தேவையை, நாயகனுக்கான தேவையைப்
பூர்த்தி செய்யுமா?
ஜோசப் கேம்ப்பெல்: ஓ, நிச்சயமாக,
அந்தச் சுழற்சியை அது நேர்த்தியாகச் செய்யும். அது ஒன்றும் எளிமையான அறநெறி நாடகம்
அல்ல. வாழ்வின் ஆற்றல் வாயிலான மற்றும் மானுடச் செயல்பாடுகளின் வாயிலான தமது வகைமைகளுடன்
செயலாற்ற வேண்டும். இந்த அண்டவெளிச் சாகசம் பற்றிய அற்புதமான விசயங்களில் ஒன்று, எங்கு
சென்றாலும் அங்கு நமக்கு முன் யாரும் இருந்ததில்லை எனும் பழங்கதைகளில் உள்ள சாகசங்களின்
உச்சமாக இருந்தாலும், அந்த வர்ணனையாளன், அந்தக் கலைஞன், அந்தப் புனைவைச் சிந்தித்தவன்
நமது சொந்த அறிவினால் சூழப்படாத ஒரு தளத்தில் இருப்பதுதான் என நினைக்கிறேன். நல்லது,
இப்போது நாம் கோள்களையும் வென்று விட்டோம். எனவே மேலும் முன்னேறிச் சென்று, ஆற்றலுடன்
அதன் யுத்தத்தில் போரிடும் கற்பனையான வெற்று வெளிகள் இனி இல்லை என்பது தெரியும். வெளிகளைத்
திறந்து, அதன் அமைப்புகளில் வசிப்பது எனும் கற்பனைக்கான ஒரு புதிய, முழுப் பரப்பு,
அதுதான் முதன்மையானது என நினைக்கிறேன்.
பில் மோயர்ஸ்:
ஸ்டார் வார்ஸ் போன்று ஏதாவதைக் காணும் பொழுது, தொன்மங்களில் உள்ள நாயகக் கருத்துருக்களில்
சிலவற்றை அடையாளம் காண முடிகிறதா?
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், ஜார்ஜ் லூகாஸ் நிலையான தொன்மப் பாத்திரங்களைப் பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன்.
ஆலோசகர் போன்ற ஒரு வயதான மனிதர் குறிப்பாக ஜப்பானிய வாள் பயிற்சியாளரை எனக்கு நினைவூட்டுகிறார்.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
ஓபி வான் கெனோபி: நினைவில் கொள், ஒரு ஜேடி தன்னை
நோக்கி வீசப்படும் வலிமையை உணர முடியும்.
ஜோசப் கேம்ப்பெல்: அத்தகைய மனிதர்களில்
சிலரை நான் அறிவேன், அந்த மனிதர் அவருடைய பாத்திர மதிப்பு பற்றி அறிந்திருக்கிறார்.
பில் மோயர்ஸ்:
நல்லது, சில கருவிகளை, ஒரு வாளை, அல்லது ஒரு ஒளிக் கற்றையை, ஒளிக் கதிரைக் காண்பித்து,
வழங்கும் அந்த அந்நியரால் நாயகன் உதவி பெறுகிறான் எனும் அர்த்தத்தில் தொன்மரீதியானது
ஏதாவதும் கூட இருக்கிறது, இல்லையா?
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், ஆனால் அவர் ஒரு பெளதிகக் கருவியை மட்டும் வழங்கவில்லை, ஒரு உளவியல்ரீதியான கடமைப்பாட்டையும்
ஒரு உளவியல்ரீதியான மையத்தையும் வழங்குகிறார்.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
ஓபி வான் கெனோபி: இந்த முறை உமது விழிப்புமிக்க சுயத்தை
அனுமதி, உள்ளுணர்வின்படி செயல்படு.
ஜோசப் கேம்ப்பெல்: ஒரு வினோதமான
ஆயுதத்துடன் பயிற்சி செய்து விட்டு, முகமூடியை விலக்கும் அவரை நாம் காணும் பொழுது,
அவர் தான் உண்மையான ஜப்பானிய உள்ளீடு.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
டார்த் வாதர்: அவர்களை நான்
கவனித்துக் கொள்கிறேன்.
பில் மோயர்ஸ்: நான் எனது
இரண்டு குழந்தைகளைக் கவனித்த போது, பார்வையாளர்கள் செய்ததையே அவர்களும் செய்தனர்; உச்சகட்டக்
காட்சியில் பென் கெனோபியின் குரல், லூக் ஸ்கைவாக்கரிடம் கூறிய அந்தத் தருணத்தில்.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
ஓபி வான் கெனோபி: படையினரைப் பயன்படுத்து லூக். அவர்களைப்
போக விடு. லூக்.
பில் மோயர்ஸ்: பார்வையாளர்கள்
கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்துக் கைதட்டினார்கள்.
ஜோசப் கேம்ப்பெல்: “ஆம் அவர்கள்
கிளர்ந்தெழுந்தனர். இந்த விசயம் பரிமாறப்படுகிறது. அது இன்றைய இளைஞர்கள் பேசும் ஒரு
மொழியில் நிகழ்கிறது. அது வியப்பானது.
பில் மோயர்ஸ்:
எனவே நாயகன் ஏதோ ஒன்றை நோக்கிச் செல்கிறான். அவன் வெறும் ஒரு சவாரிக்காக மட்டும் செல்லவில்லை.
அவன் ஒரு சாகசக்காரன் மட்டுமல்ல.
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், கர்மவினையான ஒரு சாகசம் கூட மேற்கொள்ளப்படுகிறது. கர்மா எனும் சொல் எதிலிருந்து
வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். சமஸ்கிருத ஸ்வரந்த்விபாவிலிருந்து. பட்டுத்
தீவு, அது முன்னர் இலங்கையின் பெயராக இருந்தது. அது இலங்கைக்குச் செல்லும் பொழுது குழப்பத்தில்
ஆழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை, பிறகு இந்த அனைத்துச் சாகசகங்களும் நிகழ்த்தப்பட்டன.
ஆகவே அந்தக் கர்மவினையான சாகசத்தையும் நீங்கள் காண முடிந்தது.
பில் மோயர்ஸ்:
அந்த வகையான பயணத்தை மேற்கொண்ட சாகசக்காரன் தொன்மவியல் அர்த்தத்தில் ஒரு நாயகனா?
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம். அவன் அதற்குத் தயாராக இருந்தான். இத்தகைய தொன்மவியல் கருத்துருக்கள் பற்றி மிகுந்த
ஆர்வமூட்டும் விசயம் இது. நாயகனின் சாதனைகளில் ஒன்று. அவன் அதற்குத் தயாராக இருந்தான்,
அது உண்மையில் அவனுடைய பாத்திரத்தின் அடையாளம். ஒரு நிலப்பரப்பும் அந்தச் சூழலின் நிலைப்பாடுகளும்
நாயகனின் தயார் நிலைக்குப் பொருந்தும் போக்கில் அது வேடிக்கைமிக்கது. அவனுடைய தயார்
நிலை எனும் சாகசம் என்பது அவன் பெறக்கூடிய ஒன்று.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
ஹான் சோலோ: கவனி, உன்னுடைய புரட்சிக்காக நான் இங்கு
இருக்கவில்லை, உனக்காகவும் நான் இல்லை, இளவரசி. நான் நல்ல ஊதியத்தை எதிர்பார்க்கிறேன்.
எனக்காகவே நான் இங்கே இருக்கிறேன்.
பில் மோயர்ஸ்:
பேராசைக்காரன், சோலோ ஒரு பேராசைக்காரனாகத் துவங்கி ஒரு
நாயகனாக மாறினான்.
ஜோசப் கேம்ப்பெல்:
அவன் மிகுந்த நடைமுறை ரீதியிலானவன், அவனே எண்ணுவது போல, அவனுடைய பாத்திரத்தைப் பொறுத்து
அவன் ஒரு பொருள்முதல்வாதி. ஆனால் அதே சமயத்தில் அவன் ஒரு இரக்கமுள்ள மனிதன். அது அவனுக்குத்
தெரியாது. அவனுக்கு வாய்த்த தகுதி பற்றி, அவன் அறியாத அவனுடைய பண்பைப் பற்றி அந்தச்
சாகசம் நினைவூட்டுகிறது.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
இளவரசி லீயா: உன்னை நேசிக்கிறேன்.
ஹான் சோலோ: தெரியும்
ஜோசப் கேம்ப்பெல்: தான் ஒரு சுயநலவாதி
என அவன் நினைக்கிறான், உண்மையில் அவன் அப்படி இல்லை. அவன் ஒரு அன்புள்ளம் கொண்ட மனிதன்
என நான் நினைக்கிறேன். இந்த உலகில் அவர்களில் பலர் மிக அழகாகச் செயல்புரிந்து வருகின்றனர்.
அவர்கள் நினைக்கின்றனர் தாம் தமக்காகவே செயலாற்றுவதாகவும், மிகவும் நடைமுறை ரீதியிலானவர்கள்
என்றும், ஆனால் அப்படி அல்ல, அவர்களை ஏதோ ஒன்று முனைப்பாற்றல் தந்து உந்துகிறது.
பில் மோயர்ஸ்:
அந்த மதுக்கூடக் காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜோசப் கேம்ப்பெல்:
அது எனக்கு மிகவும் பிடித்த காட்சி. இந்தக் காட்சி மட்டுமல்ல, நான் முன்னெப்போதும்
கண்டிராத பலப் பல காட்சிகள் இருக்கின்றன.
பில் மோயர்ஸ்:
ஏன்?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், நீங்கள்
இருக்கை விளிம்பில் அமர்ந்திருக்கும் பொழுது, தொலைதூர வெளிகளில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.
பில் மோயர்ஸ்:
நிஜ சாகசம்.
ஜோசப் கேம்ப்பெல்: நிஜ சாகசம்.
இடம் பெயர்ந்து தாவுவது, அங்கு வெளியேறும் மனிதர்களைச் சந்திப்பது, அங்கிருந்து வெளியேற்றப்படும்
இயந்திரங்களை அவர்கள் இயக்குவது, நீங்கள் அங்கு இல்லவே இல்லை. அது ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின்
பொக்கிஷத் தீவைக் கொஞ்சம் நினைவூட்டுகிறது, அந்தச் சாகசத்தைத் தொடங்குவதற்கு முன் உள்ள
அந்தச் சூழல். நீங்கள் அந்தக் கடல் துறைமுகத்தில் இருக்கிறீர்கள், அங்கு உப்பளம் இருக்கிறது,
கடலில் மீனவர்கள் இருக்கின்றனர், அது அவர்களுடைய உலகம், அவர்கள் அண்டவெளி மனிதர்களும்
கூட.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
ஹான் சோலோ: இதைப் பற்றிய ஒரு மோசமான உணர்வை நான்
அடைந்தேன்.
லூக் ஸ்கைவாக்கர்: அந்தச் சுவர்கள்
நகர்கின்றன!
இளவரசி லீயா: சும்மா அங்கே
நிற்க வேண்டாம், ஏதாவதைக் கொண்டு அதைத் தடுக்க முயற்சி செய்.
பில் மோயர்ஸ்: எனக்கு மிகவும்
பிடித்த காட்சிகளில் ஒன்று அவர்கள் ஒரு குப்பைக் கிடங்கின் அருகில் இருக்கும் பொழுது,
அந்தச் சுவர்கள் நெருங்கி வரும் காட்சி. நான் அதை ஒரு திமிங்கலத்தின் வயிறு என நினைத்தேன்,
ஜோனா வெளியேறிய அதே வயிறு.
ஜோசப் கேம்ப்பெல்:
அதுதான், ஆம், அதுதான் அவர்கள் இருந்த இடம், ஒரு திமிங்கலத்தின் வயிறு.
பில் மோயர்ஸ்:
வயிறு தொடர்பான தொன்மவியல் ரீதியான முக்கியத்துவம் என்ன?
ஜோசப் கேம்ப்பெல்: அது இருளில்
உள்ள பாரம்பர்யம். திமிங்கலத்தினுள் ஜோனா, அதாவது திமிங்கலத்தின் வயிற்றினுள் செல்வதும்,
மீண்டும் திரும்ப வெளிவருவதும் ஒரு நிலையான வடிவமைப்பு.
பில் மோயர்ஸ்:
அதை ஏன் அந்த நாயகன் செய்ய வேண்டும்?
ஜோசப் கேம்ப்பெல்: அந்தத் திமிங்கலம்
உணர்வு கடந்த நிலையில் உள்ள அனைத்துச் சுய ஆளுமைகளையும் குறிக்கிறது எனக் கூறலாம்.
இந்த விசயங்களை உளவியல்ரீதியாக வாசிக்கும் பொழுது, நீர் ஒரு உணர்வு கடந்த நிலையில்
இருக்கிறது. நீரில் உள்ள உயிரினம் உணர்வு கடந்த நிலையின் இயக்கவியலாக இருக்கும். அது
ஆபத்தானது, ஆற்றல் மிக்கது. அது விழிப்பு நிலையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சாகசத்தைத்
துவங்கும் பொழுது, நாயகச் சாகசத்தின் முதல் நிலை ஒளி எல்லையை விட்டு விலகுவது. அதை
அவன் கட்டுப்படுத்துகிறான், அதைப் பற்றி அவனுக்குத் தெரியும். பிறகு அவன் நுழைவாயிலை
நோக்கி நகர்கிறான். அந்தப் பாதாள அரக்கன் அவனைச் சந்திக்க வரும் அதே நுழைவாயில். பின்னர்
அங்கு இரண்டு அல்லது மூன்று விளைவுகள் நிகழலாம்: ஒன்று, நாயகன் அவனைத் துண்டு துண்டாக
வெட்டி, அந்தச் சிதிலங்களைப் பாதாளத்தில் வீசலாம், மீண்டும் உயிர்த்தெழுதலுக்காக; அல்லது
நாயகன் அந்த வேதாள ஆற்றலைக் கொல்லலாம், சீக்ஃப்ரைட் வேதாளத்தைக் கொல்லும் போது செய்தது
போல. ஆயினும் பின்னர் அவன் அந்த வேதாளத்தின் இரத்தத்தைச் சுவைக்கிறான். அதை அவன் ஆற்றலை
உள்வாங்குவதற்காக எனக் கூறலாம். சீக்ஃப்ரைட் அந்த வேதாளத்தைக் கொன்று, அதன் இரத்தத்தைச்
சுவைத்த பொழுது, அவன் இயற்கையின் பாடலைக் கேட்கிறான்; அவன் அவனுடைய மனிதாபிமானத்தை
மேம்படுத்தினான், இயற்கையின் ஆற்றலுடன் ஒன்று கலந்தான். அவை நமது வாழ்வின் ஆற்றல்கள்,
அவற்றிலிருந்து நமது மனம் நம்மை வெளியேற்றுகிறது.
இந்த உணர்வு
மேலெழுகிறது, இந்த விழிப்புணர்வு, அதுதான் இயக்குவதாக எண்ணுகிறது. அது இரண்டாவது உறுப்பு;
ஒட்டு மொத்த மனித இனத்தின் இரண்டாவது உறுப்பு. அது தன்னையே ஒரு கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ளக் கூடாது. அது அர்ப்பணிக்க வேண்டும், மானுட குலத்திற்குச் சேவை ஆற்ற வேண்டும்.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
டார்த் வாதர்: என்னோடு வா,
உனது பயிற்சியை நிறைவு செய்கிறேன்.
ஜோசப் கேம்ப்பெல்: அது தன்னையே
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் பொழுது, வாதர் வருகிறான், அறிவார்த்தத்தின் பக்கம்
செல்லக் கூடியவன்.
(“ஸ்டார் வார்ஸ்”
திரைப்படத்தின் ஒரு காட்சி)
லூக் ஸ்கைவாக்கர்: உன்னோடு நான்
எப்பொழுதும் சேரப் போவதில்லை!
டார்த் வாதர்: நீ இருண்ட
பக்கத்தின் ஆற்றலைப் பற்றி அறிந்திருந்தால்.
ஜோசப் கேம்ப்பெல்:
அவன் மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்கவில்லை, அல்லது வாழவில்லை, அவன் ஒரு அமைப்புமுறையின்
கீழ் வாழ்கிறான். இது நமது வாழ்க்கைக்கு ஒரு அச்சுறுத்தல்; நாம் இதை எதிர்கொள்கிறோம்.
ஒரு அமைப்புமுறை சார்ந்த நமது சமூகத்தில் நாம் இயங்குகிறோம். இப்போது இந்தச் சமூகம்
உம்மை விழுங்கி, உமது மனிதாபிமானத்திலிருந்து உம்மை விடுவிக்கப் போகிறதா, அல்லது நீங்கள்
அந்த அமைப்புமுறையை மனித குலத்திற்காகப் பயன்படுத்தப் போகிறீர்களா?
பில் மோயர்ஸ்:
அந்த அமைப்புமுறையை மாற்றுவது எவ்வாறு என்பது பற்றியும், அதன் மூலம் அதற்கு நாம் சேவை
ஆற்றப் போவதில்லை என்பது பற்றியும் ஓராயிரம் முகம் கொண்ட நாயகன் அந்தக் கேள்விக்குப்
பதில் கூற நமக்கு உதவி செய்வானா?
ஜோசப் கேம்ப்பெல்:
அமைப்புமுறையை மாற்ற அது உதவும் என நான் நினைக்கவில்லை. அந்த அமைப்புமுறையினுள் ஒரு
மனிதனாக வாழ அது உதவக்கூடும்.
பில் மோயர்ஸ்: எப்படி?
ஜோசப் கேம்ப்பெல்: லூக் ஸ்கைவாக்கர்
போல, எங்கும் செல்லாமல், அதன் நட்பற்ற உரிமை கோரல்களை எதிர்த்து.
பில் மோயர்ஸ்: பார்வையாளர்களில்
யாரோ பேசுவது எனக்குக் கேட்கிறது, “எல்லாம் சரி, ஒரு ஜார்ஜ் லூகாஸின் கற்பனைக்கு அல்லது
ஜோசப் கேம்ப்பெல்லின் ஆராய்ச்சிக்கு எல்லாம் நல்லது. ஆனால் எனது வாழ்வில் என்ன நிகழ்கிறது
என்பதற்காக அல்லவே.”
ஜோசப் கேம்ப்பெல்:
அது நிகழ்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவர் தனது சொந்த ஆன்மிக, இதயப்பூர்வ
வாழ்க்கைக்கான தேவைகளைப் பற்றி கவனிக்கவில்லை என்றால், ஒரு நிகழ்வு குறித்து வற்புறுத்தவில்லை
என்றால், ஒரு மனச்சிதைவைப் (தெளிவான சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தைத் திறன் இன்மை)
பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம். அவர் தன்னை மையத்திற்கு வெளியே தள்ளுகிறார்; ஒரு
நிரலாக்கப்பட்ட வாழ்க்கையுடன் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். அதற்கு இந்த உடல் அனைத்தின்
மீதும் ஈர்ப்புடன் இருப்பதாக அர்த்தமல்ல. தன்னைப் பற்றி அறிந்து கொள்வதை நிறுத்திக்
கொண்ட மனிதர்கள் நிறைந்த உலகம் இது. எனது சொந்த வாழ்வில், ஒரு அமைப்புமுறையினுள் என்னைத்
திணித்துக் கொண்டு, அதனுடன் இணைந்து செல்லவும், அதன் தேவைகளுக்குக் கீழ்ப்படியவும்
நிறைய வாய்ப்புகள் இருந்தன. எனது வாழ்க்கை தன்னிச்சையான சிந்தித்தல் தன்மையைக் கொண்டது;
என்னை அர்ப்பணிக்கவில்லை.
பில் மோயர்ஸ்:
ஆக்கப்பூர்வமான ஆன்மா எல்லைகள் தாண்டி அதன் சுய பரப்பில் இருப்பதை உண்மையாகவே நீங்கள்
நம்புகிறீர்களா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், நான்
நம்புகிறேன்.
பில் மோயர்ஸ்: அதில் உள்ள
நாயகனின் ஏதாவது ஒன்றை, நீங்கள் ஒரு நாயகனாக உங்களைக் காண நான் பரிந்துரைப்பதாக அர்த்தமல்ல.
ஜோசப் கேம்ப்பெல்: இல்லை, அப்படி
இல்லை, என்னை ஒரு தன்னிச்சையான சிந்தித்தல் தன்மை கொண்டவனாகவே நான் காண்கிறேன்.
பில் மோயர்ஸ்: ஆகவே நாயகன்
என்பவன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கிறான், நாம் அதைப் பற்றி அறிந்திராத
பொழுதும்.
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், அதாவது
நமது வாழ்க்கை நமது இயல்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் போகிற போக்கில் உங்களைப் பற்றி
மேலும் அதிகமாக அறிய முடியும். உங்கள் கீழ்த்தரமான இயல்புகளைக் காட்டிலும் உயர்தரமான
இயல்புகளை வெளிப்படுத்தக்கூடிய தருணங்களில் உங்களைப் பொருத்திக் கொள்ள ஏதுவாக இருப்பது
நல்லது.
பில் மோயர்ஸ்:
உதாரணம் தாருங்கள்.
ஜோசப் கேம்ப்பெல்: ஒரு கதை கூறுகிறேன்.
இப்போது நான் ஒரு ஈராக்கிய கதையைக் கூறுகிறேன். அமெரிக்க இந்தியக் கதைகளில் அடிக்கடி
வரும் ஒரு கருத்துரு அது. அதை நான் காதலர்களின் மறுதலித்தல் என அழைப்பேன். கிராமப்புறத்தில்,
ஒரு குடிசையில் தனது தாயாருடன் வாழ்ந்து வந்தாள் ஒரு பெண். அவள் மிக அழகானவள், ஆனால்
அதிகக் கர்வம் கொண்டவள். எந்தப் பையனையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அவளுடைய
தாயார் மூலமாகத் தங்கள் காதலை முன்மொழிந்தனர். அந்தத் தாயார் அவள் மீது கடுமையாகக்
கோபம் கொண்டாள். சரி, ஒரு நாள் அவர்கள் விறகு சேகரிக்க வெளியில் சென்றார்கள். கிராமத்தை
விட்டு வெகுதூரம் சென்று விட்டார்கள். விறகு சேகரித்துக் கொண்டிருக்கையில், ஒரு பயங்கரமான
இருட்டு அவர்களைச் சூழ்ந்து விட்டது. இப்போது அது இரவு வேளை இருட்டாகத் தெரியவில்லை;
அது போன்ற ஒரு இருட்டை நீங்கள் காணும் பொழுது, ஏதோ ஒரு மந்திரவாதியின் வேலை அது என
எண்ணுவீர்கள். எனவே, அந்தத் தாயார் கூறினார், “நல்லது, இப்போது நாம் சில மரப்பட்டைகளைத்
திரட்டி, சிறு மரப்பட்டைக் குடிசை செய்வோம், நமக்கான குடிசை, நெருப்புக்காகச் சுள்ளிகளைப்
பொறுக்கலாம், இன்று இரவு மட்டும் இங்கேயே தங்கிக் கொள்ளலாம்.” எனவே அவ்வாறே குடிசை
அமைத்தனர், சற்று நேரத்தில் அவள் தாயார் உறங்கி விட்டார்.
அந்தப் பெண்
சுற்றிலும் பார்க்கிறாள். கரிய இறகுகளுடன் பளபளக்கும் ஒட்டியாணத்துடன் அந்த அற்புதமான
மனிதன் நின்று கொண்டிருக்கிறான். அவன் கூறுகிறான், “நான் உன்னை மணம் செய்ய விரும்புகிறேன்,
உனது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.” அவள் அவனை ஏற்றுக் கொண்டாள். அவள் தாயாரும் ஒப்புக்
கொண்டார். அவன் இந்த விசயத்தில் தீவிரமாக இருப்பதை நிரூபிக்கும் பொருட்டு அந்த ஆபரணத்தை
அவள் தாயிடம் தந்து விட்டான். எனவே அவன் அந்தப் பெண்ணுடன் சென்றான்; அந்தப் பெண் அதற்கு
உடன்பட்டாள். அவளுக்கு வெறும் மனிதர்கள் போதுமான அளவு நல்லவர்கள் அல்லர். ஆனால் இங்கு
உண்மையாகவே ஏதோ இருக்கிறது- இல்லையா. எனவே அவள் மற்றொரு தாக்கத்தில் இருந்தாள்.
இப்போது அந்தச்
சாகசம் மிக வியப்பானது. அவள் அவனுடன் அவனுடைய கிராமத்திற்குச் சென்று, அவன் குடியிருப்பினுள்
சென்றாள். அங்கிருந்த மக்கள் அவளை வாழ்த்தினர், அவள் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாள்.
அடுத்த நாள் அவன் கூறினான், “நான் வேட்டைக்குச் செல்கிறேன்.” அவன் குடியிருப்பை விட்டு
வெளியே செல்கிறான். கதவு மூடப்படுகிறது, ஒரு சிறகடிப்புடன், ஒரு சிறகடிப்பின் ஒலி.
அவன் கதவை மூடும் பொழுது, அந்த வினோதமான ஒலியை அவள் கேட்கிறாள். அன்று நாள் முழுதும்
அவள் அந்தக் குடிசையிலேயே இருந்தாள். மாலை வேளை. அந்த வினோதமான ஒலி மீண்டும் அவளுக்குக்
கேட்கிறது. கதவு திறக்கிறது. கூர்மையான நாக்கை அசைத்தபடி அந்த அசாதாரணமான பாம்பு மனிதன்
உள்ளே வருகிறான். அவனுடைய தலையை அவள் மடி மீது கிடத்தி, கூறுகிறான், “இப்போது எனது
தலையில் உள்ள பேன்களைத் தேடி எடு.” இவ்வாறான அனைத்துவிதப் பயங்கரங்களையும் அவன் தலையில்
தேடி எடுத்து, அவற்றை அவள் கொன்றாள். பின்னர் அவன் வெளியேறுகிறான், ஒரு சில நொடிகளில்
அந்தக் கதவு மூடிக் கொள்கிறது. கதவு மீண்டும் திறக்கிறது. அவன் உள்ளே வருகிறான். இப்போது
அதே அழகான இளைஞன் மீண்டும். அவன் கேட்டான், “இப்போது சற்று முன் நான் வந்த போது என்னைக்
கண்டு பயந்து விட்டாயா?” இல்லை என்று கூறினாள். அவள் பயந்து விடவில்லை.
அடுத்த நாள்
அவன் வேட்டைக்குச் சென்றான். அவள் விறகு பொறுக்க அந்தக் குடியிருப்பை விட்டு வெளியேறினாள்.
அவள் கண்ட முதல் விசயம் பாறை மீது படுத்திருந்த மிக நீளமான பாம்பு. பிறகு மற்றொன்று,
பிறகு மேலும் ஒன்று. அவள் மிக மோசமாகப் பதைபதைக்கத் துவங்கினாள், துயரம் கொண்டாள்,
ஊக்கம் இழந்தாள். மாலை வந்தது. அந்தப் பாம்பு வந்தது, பிறகு மனிதன் மீண்டும். மூன்றாம்
நாள் அவன் வெளியேறியவுடன், அவள் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடத் தீர்மானிக்கிறாள்.
எனவே அவள் வீட்டை விட்டு வெளியேறி, மரத்துண்டுகளின் அருகில் சிந்தித்தவாறு நின்று கொண்டிருக்கையில்,
ஒரு குரல் அவளிடம் பேசுகிறது. அவள் திரும்புகிறாள். சற்று வயதான ஒரு மனிதன் நின்று
கொண்டிருக்கிறான். அவன் கூறுகிறான், “அன்பே, நீ சிக்கலில் இருக்கிறாய். நீ மணம் செய்த
அந்த மனிதன் ஏழு சகோதரர்களில் ஒருவன். அவர்கள் மாபெரும் மந்திரவாதிகள். இந்த வகையான
பலரைப் போல, அவர்களுடைய இதயங்கள் அவர்களுடைய உடலில் இல்லை. ஒரு கூடையில் ஏழு இதயங்கள்
திரட்டப்பட்டு, நீ மணம் செய்த அந்த மூத்தவனின் படுக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
நீ சென்று அதைக் கொண்டு வா. பிறகு சாகசத்தின் அடுத்த பகுதியை எதிர்கொள்ளலாம்.”
அவள் உள்ளே
சென்று, இதயங்கள் அடங்கிய கூடையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடுகிறாள். ஒரு குரல் அவளுக்குப்
பின்னால் கேட்கிறது. “நில், நில்.” அது அந்த மந்திரவாதியின் குரல். அவள் தொடர்ந்து
ஓடிக் கொண்டிருந்தாள். அவன் கூறினான், “என்னை விட்டுச் சென்று விடலாம் என நினைக்கிறாய்,
அது உன்னால் முடியாது.” அதே சமயத்தில் அந்த வயதான மனிதனின் குரலையும் அவள் கேட்கிறாள்,
“நான் உதவுகிறேன், அன்பே.” அவளை அந்த வயதான மனிதன் நீரிலிருந்து வெளியே இழுக்கிறான்;
அவள் நீருக்குள் இருக்கிறாள் என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.
பில் மோயர்ஸ்:
அது என்ன சொல்கிறது?
ஜோசப் கேம்ப்பெல்: அதாவது நீங்கள்
அந்தக் கடுமையான நிலப்பரப்பிலிருந்து, திடமான மண்வெளியிலிருந்து நகர்ந்து விட்டீர்கள்.
உணர்வற்ற நிலைக்குள் நீங்கள் இருக்கிறீர்கள். அவள் தன்னை ஒரு மேம்பட்ட பரப்பெல்லைக்குள்
இழுத்தாள். நரகத்தின் எதிர்மறை ஆற்றலுக்குள் சிக்கிக் கொண்டாள். பின்னர் உயர்தர ஆற்றலால்
காப்பாற்றப்படுகிறாள். நீங்கள் செய்ததெல்லாம் உள்தளத்திலிருந்து உங்களை மேலேற்றிக்
கொண்டு, உயர் ஆற்றலின் தளத்தில், உயர் ஆபத்தின் தளத்தில் உங்களை இருத்திக் கொண்டதுதான்.
அதைக் கையாளும் திறனுடன் இருக்கப் போகிறீர்களா? உங்களை நீங்களே இருத்திக் கொள்ளும்
அந்த நிலைப்பாட்டுக்கு நீங்கள் தகுதி இல்லை எனில், அது ஒரு தீய ஆன்மாவின் திருமணமாக
இருக்கும், அது ஒரு உண்மையான ஒழுங்கின்மையாக இருக்கும். நீங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தவர்
என்றால், அது கொண்டாடத் தக்கது, அது உங்களுக்கு ஒரு வாழ்க்கையைத் தரும், அது உங்கள்
வாழ்க்கை, உங்களுக்கான சொந்த வழியில்.
பில் மோயர்ஸ்: ஆகவே இந்த
வகை தொன்மவியல் கதைகள் வேறு எந்த வழியிலும் உள்வாங்க முடியாத ஒரு உண்மையை எளிமையாகச்
சொல்ல விழைகின்றன.
ஜோசப் கேம்ப்பெல்: அது ஒரு விளிம்பு.
அறிந்தவற்றிற்கும் கண்டடைய முடியாதவற்றிற்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு. ஏனென்றால்,
அது அனைத்து மானுட ஆய்வுகளின் மாய மேம்பாடு. வாழ்வாதாரம்: என்ன அது? யாருக்கும் தெரியாது.
பில் மோயர்ஸ்:
கதைகளில் பெறுவதற்காக ஏன் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை?
ஜோசப் கேம்ப்பெல்: அதன் மாயை
மற்றும் உங்கள் மாயை பற்றிய அறிவுடன் வாழ்வை வாழ்வது முக்கியமானது என நினைக்கிறேன்.
இதைச் செய்வதற்கான ஒரு புதிய ஆர்வத்தை, ஒரு புதிய சமன்பாட்டை, ஒரு புதிய உத்வேகத்தை
அது வாழ்க்கைக்குத் தருகிறது. அதாவது, சிகிச்சையில், உளவியல் சிகிச்சையில், மனிதனுக்குள்
எது குறியிடுகிறது என்பதை அவர்கள் அறிந்த போது, அவர்கள் சமநிலை அடைந்தார்கள். அது என்னவென்றால்,
அதுதான் வாழ்க்கை. தொன்மவியல் பாங்கில் சிந்திப்பது மனிதர்களுக்கு உதவுகிறது என்பதை
அறிந்தேன், அது நிகழ்வதை உங்களால் தெளிவாகக் காண முடியும்.
பில் மோயர்ஸ்:
எவ்வாறு, அது என்ன செய்கிறது?
ஜோசப் கேம்ப்பெல்: அது துன்புறுதல்களைத்
துடைக்கிறது, அவர்களுடைய வாழ்வின் தவிர்க்க முடியாதவற்றுடன், அதற்கேற்றபடி அவர்களை
அந்த நிலைப்பாட்டில் வைக்கிறது. எது நேர்மறை என்பது பற்றிய எதிர்மறை அம்சங்களின் நேர்மறை
மதிப்புகளை அவர்களால் காண முடியும். நீங்கள் அந்தப் பாம்பு மனிதனுக்கு ஆம் சொல்லப்
போகிறீர்களா அல்லது இல்லை சொல்லப் போகிறீர்களா என்பதைப் பொறுத்து அது எளிதானது.
பில் மோயர்ஸ்:
சாகசத்திற்கு இல்லை என்பதா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். உயிர்த்திருத்தலின்
சாகசம், வாழ்வு பற்றிய சாகசம்.
பில் மோயர்ஸ்: நான் வளர்ந்து
கொண்டிருந்த பருவத்தில், tales of King Arthur, tales of the medieval knights,
tales of the dragon slayers போன்றவை எனது உலகில் வெகு வலுவானவை.
ஜோசப் கேம்ப்பெல்: வேதாளங்கள்
உண்மையில் பேராசையைக் குறிக்கின்றன. ஐரோப்பிய வேதாளம் அதன் குகையில் பொருட்களைக் காக்கின்றன.
பொற்குவியல்கள் மற்றும் புனிதங்களுக்கு அவை காவல் இருந்தன. அவற்றில் எதையும் அது பயன்படுத்த
முடியாது, வெறும் காவல் மட்டும். அங்கு அது காவல் காக்கும் பொற்குவியல்களின் அல்லது
பெண்களின் மதிப்பு பற்றிய அனுபவ உள்ளுரம் இல்லை. உளவியல் ரீதியாக, வேதாளம் என்பது ஒருவரின்
தன்னலத்திற்குக் கட்டுப்படுவது. நீங்கள் உங்கள் சொந்த வேதாளக் குகையில் அகப்பட்டு இருக்கிறீர்கள்.
உளவியல் அறிஞருக்குக் கடினமானது என்னவெனில், அந்த வேதாளத்தை நொறுக்கி, அவன் சுயத்தைத்
திறந்து காட்டுவது. அதன் மூலம் உறவுகளின் நீண்ட தளத்தை உங்களால் பெற முடியும்.
யுங் தனிமையில்
வாடிய ஒரு நோயாளியைச் சந்தித்தார். அவள் பாறைகளில் சிக்கி உள்ளவாறு, பாறைகளில் குதித்தபடி
தன்னைத் தானே ஒரு சித்திரமாக வரைந்திருந்ததைக் கண்டார். அது காற்றடிக்கும் ஒரு கடற்கரை.
காற்று பலமாக வீசுகிறது. அவளுடைய கூந்தல் பறக்கிறது. அனைத்துப் பொன் ஆபரணங்களும் -
அது வாழ்வின் உள்ளுர அடையாளம் – பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அவள்
வரைந்த அடுத்த சித்திரம் அவர் அவளுக்குக் கூறிய ஏதோ ஒன்றைப் பின் தொடர்வதாக இருந்தது.
திடீரென ஒரு மின்னல் பாறைகளைத் தாக்குகிறது. பொன் ஆபரணங்கள் ஊற்றெடுத்து ஓடுகின்றன.
அதன் அருகில் பாறைகளில் அவள் பிரதிபலிப்பைக் காண்கிறாள். பாறைகளில் பொன் இல்லை. அவை
அனைத்தும் உச்சிக்குச் சென்று விட்டன. பின்னர் நிகழ்ந்த கருத்தரங்குகளில் அந்தப் பொன்
வெளி அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அவளுடைய தோழியர்கள். அவள் தனிமையில் இல்லை. ஆனால்
அவளுடைய சிறு அறையிலும் வாழ்விலும் தன்னைத் தானே தாழிட்டுக் கொண்டாள். அவளுக்குத் தோழியர்
உண்டு. நான் சொல்வது புரிகிறதா? இது அந்த வேதாளத்தைக் கொல்வது. உங்களுக்கு அச்சங்களும்
மற்ற விசயங்களும் இருக்கின்றன; அதுதான் வேதாளம். அது மிகச் சரியாக அனைத்தும் பற்றியது.
குறைந்த பட்சம் அந்த ஐரோப்பிய வேதாளம்; சீன வேதாளம் வேறுபட்டது.
பில் மோயர்ஸ்: அது என்ன?
ஜோசப் கேம்ப்பெல்: அது சதுப்பு
நிலங்களின் உள்ளுரத்தைக் குறிக்கிறது. வேதாளம் வெளியே வந்து அவன் வயிற்றைத் தாக்கிக்
கூறுகிறது, “ஹா, ஹா, ஹா, ஹா, ஹா.” அது மற்றொரு வகை வேதாளம், உங்களுக்குத் தெரியும்.
அது பெருந்தன்மை, தண்ணீர் மற்றும் அனைத்துக்கும் விளைபயன். அவன் மிகுந்த மதிப்பு மிக்கவன்.
ஆனால் இதுதான் உங்களைத் தாழ்த்தும் எதிர்மறை.
பில் மோயர்ஸ்:
எனவே நீங்கள் சொல்ல வருவது, வேதாளங்கள் இல்லை என்றால் அது எந்தத் தருணத்திலும் இல்லை
என்று பொருள்.
ஜோசப் கேம்ப்பெல்: உண்மையான வேதாளம்
உங்களுக்குள் இருக்கிறது.
பில் மோயர்ஸ்: அது என்ன உண்மையான
வேதாளம்?
ஜோசப் கேம்ப்பெல்: அது உங்கள்
அகங்காரம், அது உங்களை உள்ளுக்குள் இறுகப் பற்றியிருக்கிறது.
பில் மோயர்ஸ்: எது எனது அகங்காரம்?
ஜோசப் கேம்ப்பெல்: நான் எதை விரும்புகிறேன்,
நான் எதை நம்புகிறேன், நான் எதைச் செய்கிறேன், நான் எதைச் சிந்திக்கிறேன், எதை நேசிக்கிறேன்,
மற்றும் இவை அனைத்தும். எனது வாழ்வின் குறிக்கோளாக நான் எதைக் கருதுகிறேன். அது மிக
மிகச் சிறிதாக இருக்கலாம். அது உங்களைத் தாழ்த்துவதாகவும் இருக்கலாம். சூழல் உங்களை
எதை நிகழ்த்தச் சொல்கிறதோ வெறுமனே அதைச் செய்வதாக இருந்தால், நிச்சயம் அது உங்களைக்
கீழே தள்ளிவிடும். எனவே சூழல் உங்கள் வேதாளம், உங்களுக்குள் அது பிரதிபலிப்பது போல.
பில் மோயர்ஸ்: நான் எப்படி
அதை ஒழிப்பது...
ஜோசப் கேம்ப்பெல்:
நீங்கள் எப்படி ஒழிப்பீர்கள்?
பில் மோயர்ஸ்: எனக்குள் இருக்கும்
அந்த வேதாளத்தை ஒழிப்பதா? எந்தவிதமான பயணத்தை நான் உருவாக்குவது, நீங்கள் உருவாக்குவது,
நாம் ஒவ்வொருவரும் உருவாக்குவது? ஆன்மாவின் அதீதச் சாகசம் என அழைப்பதைப் பற்றி நீங்கள்
பேசுகிறீர்கள்.
ஜோசப் கேம்ப்பெல்:
எனது மாணவர்களுக்கான எனது பொதுவான செயல்முறை, உங்கள் பேரின்பத்தைப் பின் தொடருங்கள்,
அதாவது அது எங்குள்ளது என்பதைக் கண்டறியுங்கள், அதைப் பின்பற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.
பில் மோயர்ஸ்:
எனது பேரின்பம் எனது வாழ்வின் காதலாக, அல்லது எனது வாழ்வின் செயலாக இருக்க முடியுமா?
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம், அது உங்கள் வாழ்வாக இருக்கும்.
பில் மோயர்ஸ்:
அது எனது செயலா அல்லது வாழ்வா?
ஜோசப் கேம்ப்பெல்: நீங்கள் செய்யும்
செயல் நீங்கள் செய்வதற்குத் தேர்ந்தெடுத்ததாக இருந்தால், நீங்கள் அதை உணர்ந்து செய்கிறீர்கள்,
அதுதான் அது. ஆனால், “ஓ, ஜீ, என்னால் அதைச் செய்ய முடியாது” என்று நீங்கள் நினைத்தால்,
உங்களுக்குத் தெரியும், அதுதான் உங்களை உள்ளே தடுத்து நிறுத்தும் உங்கள் வேதாளம்.
”ஓ, இல்லை, என்னால் ஒரு எழுத்தாளராக இருக்க முடியாது, ஓ, இல்லை, என்னால் அவ்வாறெல்லாம்
செய்ய முடியாது.”
பில் மோயர்ஸ்: செவ்வியல்
நாயகர்கள் போல் இல்லாமல், இந்த உலகைக் காக்க நாம் பயணிக்கவில்லை, நம்மைக் காக்க.
ஜோசப் கேம்ப்பெல்: அதைச் செய்வதில்,
இந்த உலகை நீங்கள் காப்பாற்றலாம். அதாவது நீங்கள் செயல்பட வேண்டும். ஆளுமை கொண்டவரின்
தாக்கம் உள்ளுரமாக அமையும் என்றால், அது குறித்து ஐயப்பட வேண்டியதில்லை. இந்த உலகம்
ஒரு பாழ்நிலம். இந்த உலகைச் சற்று நகர்த்துவதன் மூலமும், விதிமுறைகளை மாற்றுவதன் மூலமும்
இந்த உலகைக் காப்பாற்றலாம் என்று ஒரு எண்ணம் மனிதர்களுக்கு உண்டு. இல்லை, எந்த உலகமும்
உயிர்ப்புடன் இருப்பதால் மட்டும் உயிர்ப்புள்ள உலகம் அல்ல, முழுமையான நிறைவு அதற்கு
வாழ்க்கை தர வேண்டும். அதற்கு வாழ்க்கை தரும் வழி உங்கள் வாழ்க்கை உள்ள நிலைப்பாட்டில்
உங்கள் சுய உள்ளீட்டைக் கண்டடைந்து, உங்கள் சுயத்தை உயிர்ப்புள்ளதாக்க வேண்டும், அது
எனக்குத் தோன்றுவது போல.
பில் மோயர்ஸ்: ஆனால், நான்
அந்தப் பயணத்தை மேற்கொண்டு, அங்கு சென்று, அந்த வேதாளங்களைக் கொல்ல வேண்டும் என நீங்கள்
கூறுகிறீர்கள். நான் தனியாகச் செல்ல வேண்டுமா?
ஜோசப் கேம்ப்பெல்: உங்களுக்கு
உதவக்கூடியவர் யாரேனும் இருந்தால், நல்லது. ஆனால் நிறைவாக அந்தக் கடைசித் தந்திரத்தை
நீங்கள் தான் நிகழ்த்த வேண்டும்.
பில் மோயர்ஸ்: தொன்மவியலின்
இந்த அனைத்துப் பயணங்களிலும், ஒவ்வொருவரும் கண்டடைய விரும்பக் கூடிய ஒரு நிலை இருக்கிறது.
அது எது? புத்தக் கோட்பாட்டாளர்கள் நிர்வாணம் பற்றிப் பேசுகிறார்கள்; ஜீசஸ் அமைதி பற்றிப்
பேசுகிறார். ஓய்வு மற்றும் இளைப்பாறுதலுக்கான இடம் என்று ஒன்று இருக்கிறது. அது நாயகப்
பயணத்தின் ஒரு குறி அடையாளமா, அங்கு கண்டடைய ஒரு நிலை இருக்கிறதா?
ஜோசப் கேம்ப்பெல்: அது இளைப்பாறுதலுக்காக
உமக்குள் இருக்கும் ஒரு இடம். விளையாட்டுப் பயிற்சி மூலம் எனக்கு இது பற்றிக் கொஞ்சம்
தெரியும். வெற்றிக் களிப்பில் உள்ள ஒரு விளையாட்டு வீரன் தனக்குள் ஒரு அமைதியான நிலையை
அடைந்திருப்பான். அது அவன் செயல்பாடுகளால் வருவது. அவன் செயல் தளத்தில் இருக்கும் பொழுது,
முறையாகச் செயல்படுவதில்லை. நீங்கள் செயல்படுவதற்கான மையம் ஒன்று இருக்கிறது. நாட்டியத்திலும்
இது உண்மை என்று நாட்டிய மங்கையான எனது மனைவி ஜீன் கூறுகிறார். அறிந்து கொள்ளவும் உள்வாங்கவும்
ஒரு மையம் இருக்கிறது. அங்கு அது பெளதிகரீதியாக அந்த நபரால் அடையாளம் காணப்படுகிறது.
ஆனால், இந்த மையத்தை அறியவில்லை என்றால், நீங்கள் அழ வேண்டியிருக்கும், பதட்டம் மேலெழும்.
புத்தரின் சொல் நிர்வாணம்; நிர்வாணம் என்பது மனதின் உளவியல் தாக்குதல். அது ஒரு நிலை
அல்ல, சொர்க்கம் போல. அது இங்கு இல்லாத ஒன்று அல்ல; அது இங்கு இருக்கிறது, குழப்பங்களின்
மத்தியில். அது லெளகீகம் என அழைக்கப்படுகிறது, வாழ்க்கை நிலைப்பாடுகளின் நீர்ச்சுழி
அது. நிர்வாணம் என்பது ஆசையால் அல்லது அச்சத்தால் அல்லது சமூகக் கடமைப்பாடுகளால் நீங்கள்
நிர்ப்பந்திக்கப்படும் பொழுது எழும் நிலை, உங்கள் மையத்தைக் கைப்பற்றி, அங்கிருந்து
நீங்கள் செயல்படும் பொழுது உள்ள நிலை.
பில் மோயர்ஸ்: அனைத்து நாயகர்களையும்
போல, புத்தர் உங்களுக்குத் தெளிவுநிலை எனும் உண்மையைக் காண்பிக்கவில்லை; அதை நோக்கிய
வழியைக் காண்பிக்கிறார்.
ஜோசப் கேம்ப்பெல்: வழி. ஆனால்
அது உங்கள் வழியாகவும் இருக்க வேண்டும். அதாவது அச்சத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?
அதை எப்படிச் செய்வது என புத்தர் எனக்குச் சொல்லவில்லை. பல்வேறு ஆசிரியர்கள் போதிக்கும்
பல பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை உங்களுக்குப் பயன் தராது. அனைத்து ஆசிரியர்களும்
செய்வது எதுவெனில் அந்தத் திசை பற்றிய ஒரு துப்பு தருவது. அவர் ஒரு ஒளி அரங்கம், அங்கு
பாறைகள் இருக்கின்றன, திசைகள் தெளிவாக உள்ளன எனக் கூறும் ஒளி அரங்கம்.
பில் மோயர்ஸ்: விழிப்புணர்வு
பற்றி நிறையப் பேசினீர்கள்.
ஜோசப் கேம்ப்பெல்:
ஆம்.
பில் மோயர்ஸ்: பெரும்பாலானவர்கள்
என்னைப் போல அது பற்றிய ஒரு இருண்மையான புரிதலை மட்டும் அந்தப் பதம் பெற்றுள்ளதாகக்
கேள்விப்பட்டுள்ளனர். அது என்ன?
ஜோசப் கேம்ப்பெல்: ஜீனும் நானும்
ஹவாயில் வசித்து வருகிறோம். கடலுக்கு மிக அருகில் வாழ்கிறோம். ஒரு தாழ்வாரமும் முகப்பும்
அங்குண்டு. முகப்பினூடாக வளர்ந்த ஒரு தென்னை மரம் உண்டு. ஒரு வகையான படர்கொடி, ஒரு
செடி மற்றும் இலைகளுடன் கூடிய ஒரு பெரிய மரம் உண்டு, அவை அந்தத் தென்னை மரத்தை வளர்க்கின்றன.
இப்போது அந்தச் செடி சிறு கிளைகளை வெளியே அனுப்பி, மரத்தைப் பற்றுகிறது. அதற்குத் தெரியும்
அந்தச் செடி எங்கிருக்கிறது என்று, என்ன செய்ய வேண்டும் என்று- அந்த மரம் எங்கிருக்கிறது
என்றும். அது இவ்வாறு வளர்ந்து, இலைகளைத் திறக்கிறது. அந்த இலை உடனடியாக சூரியன் உள்ள
திசை நோக்கித் திரும்புகிறது. இப்போது அந்தச் சூரியன் எந்தத் திசை நோக்கித் திரும்பும்
என்று அந்தச் செடிக்குத் தெரியாது என்று உங்களால் கூற முடியாது. எல்லா இலைகளும் இவ்வாறு
செல்கின்றன. இதை heliotropism என அழைப்பர், சூரியன் உள்ள திசை நோக்கித் திரும்புதல்.
அதுதான் பிரக்ஞையின் வடிவம். தாவரப் பிரக்ஞை இருக்கிறது, விலங்குப் பிரக்ஞை இருக்கிறது.
இவற்றை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் சில குறிப்பிட்ட உணவுகளை உண்கிறீர்கள்.
செயல்படச் செல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று கசப்புணர்வுக்குத் தெரியும். அதாவது,
முழு நிகழ்வும் உணர்வுவயமானது. முழு உலகமும் உணர்வுடன் இருப்பதை நான் மேலும் மேலும்
உணரத் தொடங்கினேன்; நிச்சயமாக அந்தக் காய்கனி உலகம் உணர்வுவயமானது. மரக்கூடுகளில் நீங்கள்
வசிக்கும் பொழுது, சிறுவனாக நான் அவ்வாறு செய்தது போல, அவற்றிற்குத் தொடர்பான பல்வேறு
உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் காணலாம்.
பில் மோயர்ஸ்:
அறிவியல் அறிஞர்கள் கையா கோட்பாடுகள் பற்றிச் சற்று
வெளிப்படையாகப் பேசத் துவங்கியுள்ளனர்.
ஜோசப் கேம்ப்பெல்: மிகச் சரி,
ஒட்டு மொத்த பிரபஞ்சமும் ஒரு உயிரினம்.
பில் மோயர்ஸ்:
தாய் மண்.
ஜோசப் கேம்ப்பெல்: இங்கே பாருங்கள்,
வேறு எங்கிருந்தோ இந்த மண்ணில் வீசப்பட்டுள்ளதைக் காட்டிலும் மண்ணிலிருந்து வருவதாக
நீங்கள் சிந்திப்பீர்கள் என்றால், உங்களுக்குத் தெரியும், மண்ணுக்கு வெளியே வீசப்படுவீர்கள்
என்று. நாம் தான் இந்த மண், நாம் இந்த மண்ணின் பிரக்ஞை. இவை இந்த மண்ணின் கண்கள். இது
இந்த மண்ணின் குரல். வேறு என்ன?
பில் மோயர்ஸ்: நமது விழிப்புணர்வை
எவ்வாறு எழுப்புவது?
ஜோசப் கேம்ப்பெல்: நல்லது, அது
நீங்கள் எதைப் பற்றிச் சிந்திக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, அது எதற்கான
தியானம் என்பதையும் பொறுத்தது. முழு வாழ்வும் ஒரு தியானம், அதன் பெரும்பகுதி வற்புறுத்தல்
அற்றது. பெருவாரியான மக்கள் அதன் பெரும்பகுதியை, தங்கள் செல்வம் எங்கிருந்து வருகிறது,
எங்கு செல்கிறது என்று தியானிப்பதில் கழிக்கின்றனர். அது ஒரு தியான நிலை. அல்லது, முன்னேற்றுவதற்கு
ஒரு குடும்பம் இருந்தால், நீங்கள் அந்தக் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவராக இருப்பீர்கள்.
இவை அனைத்தும் மிகப் பொருத்தமான முறையில் மிக முக்கியமானவை. ஆனால் அவற்றைப் பெரும்பாலும்
பெளதிக நிலைப்பாடுகளுடனும் குழந்தைகளின் ஆன்மிக நிலைப்பாடுகளுடனும் செய்ய வேண்டும்.
ஆன்மிக உணர்வுகளை நீங்கள் வாய்க்கப் பெறாத போது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தரப்
போகிறீர்கள்? எனவே அதை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்? பிறகு நீங்கள் தொன்மம் பற்றிச்
சிந்திக்க வேண்டும். ஆன்மிக உணர்வு நிலைக்குள் நம்மை அழைத்து வரும் தொன்மங்கள் எதற்காக
இருக்கின்றன.
உதாரணத்திற்கு,
நான் புனித பாட்ரிக் கதீட்ரலில், ஐந்தாவது அவென்யூவில், 52-ஆவது வீதியில் நடக்கிறேன்.
தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தைக் கடந்து விட்டேன். அது இந்தப் பிரபஞ்சத்தில்
மிக வலிமையான, பொருளாதார ரீதியில் ஊக்கம் பெற்ற நகரங்களில் ஒன்று. நான் கதீட்ரலுக்குள்
செல்கிறேன். என்னைச் சுற்றி உள்ள அனைத்தும் ஆன்மிக மெய்மையைப் பேசுகின்றன. பின்னங்களின்
மெய்நிலை; அங்கு உள்ள அனைத்தும் எதைப் பற்றியவை? கறை படிந்த கண்ணாடிச் சன்னல்கள் மற்றொரு
சூழலைத் தருகின்றன. எனது விழிப்புணர்வு வேறொரு தளத்திற்கு உயர்கிறது. நான் ஒரு மாறுபட்ட
தளத்தில் இருக்கிறேன். பின்னர் நான் வெளியேறினேன். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினேன்.
இப்போது நான் அதிலிருந்து எதையேனும் பற்றிக் கொள்ள முடியுமா? ஆம், அங்குள்ள ஒட்டு மொத்தச்
சூழலுடன் தொடர்புள்ள சில குறிப்பிட்ட வழிபாடுகள் அல்லது தியானங்கள்; இவை இந்தியாவில்
மந்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. சிறு தியானக் கருத்துகள் உங்கள் உணர்வுகளை அந்த
நிலையில் கைப்பற்றிக் கொள்கின்றன, எல்லா வழிகளிலும் இங்கு உங்களைக் கை தவறி விட்டு
விடுவதற்கு மாறாக. அதன் பிறகு நீங்கள் நிறைவாகச் செய்ய வேண்டியதெல்லாம் அது அதற்குக்
கீழ் நிலையில் உள்ளதென எளிதாக அடையாளம் கண்டு கொள்வதுதான்.
பில் மோயர்ஸ்: ஷார்ட்ரெஸில்
உள்ள கதீட்ரல், அது உங்களுக்கு அதிகமாகப் பிடித்தது...
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், நல்லது.
பில் மோயர்ஸ்: இந்தப் பிரபஞ்சத்திற்கான
மானுட உறவைக் கூட அது வெளிப்படுத்துகிறது, இல்லையா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். ஷார்ட்ரெஸில்
ஏதேனும் ஒரு பொழுதைக் கழித்த ஒவ்வொருவரும் இந்தக் கதீட்ரல் பற்றிச் சிறப்பான ஏதேனும்
ஒன்றையாவது உணர்ந்திருப்பார். நான் எட்டு முறை அங்கு சென்றிருக்கிறேன். நான் பாரீஸில்
மாணவனாக இருந்த பொழுது, அங்கு ஐந்து முறை சென்று, ஒரு முழு வார நிறைவுப் பகுதியையும்
கழித்திருக்கிறேன். அந்தக் கதீட்ரலில் உள்ள ஒவ்வொரு சிறு வடிவத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன்.
அந்தக் கதீட்ரலைக் கவனித்துக் கொள்ளும் ஒரு வயதான வாயிற்காப்போன் ஒரு மதிய வேளையில்
என்னிடம் கூறினான், “மேலே என்னுடன் வந்து, அந்த மணியை ஒலிக்க விரும்புகிறாயா?” “நிச்சயமாக”
என்று கூறினேன். கூண்டில் ஏறி அந்த மாபெரும் வெண்கல மணி அமைந்திருந்த இடத்திற்குச்
சென்றோம். அங்கு ஊஞ்சல் போன்ற ஒன்றிருந்தது. ஆளுக்கொரு ஒரு புறம் நின்று, அங்கிருந்த
சிறு கம்பியைப் பிடித்துக் கொண்டோம். அதைச் சிறிதாக உந்தி, அதன் மீது அவர் ஏறிக் கொள்ள,
பிறகு நான் உந்தி, நான் ஏறிக் கொள்ள, நாங்கள் மேலும் கீழுமாகச் செல்லத் தொடங்கினோம்.
காற்று எங்கள் தலைமுடிகளின் வழியாக வீசியது, பின்னர் அடிப்பகுதியில் வீசியது. போங்,
உங்களுக்குத் தெரியும், போங், போங்... அது எனது வாழ்வில் மயிர்க் கூச்செறியும் சாகசங்களில்
ஒன்று.
அந்த நிகழ்வு
முடிந்த பின், அவர் என்னைக் கீழே அழைத்து வந்து கூறினார், “எனது அறை எங்கிருக்கிறது
என்பதை உனக்குக் காண்பிக்க விரும்புகிறேன்.” நல்லது. கதீட்ரலில் nave, transept
and apse என அனைத்துப் பகுதிகளையும் நீங்கள் காணலாம். அதைச் சுற்றி பாடகர் மேடை. இப்போது
ஷார்ட்ரெஸில் உள்ள பாடகர் மேடை மிகவும் அகன்றது. பாடகர் மேடைக்கு மத்தியில் ஒரு சிறு
கதவருகில் அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய சிறு படுக்கை இருந்தது. ஒரு சிறு மேசை,
அதன் மீது ஒரு விளக்கு. அங்கு நான் பார்த்தது Black Madonna. வெர்ஜின் மேரியால் ஆசீர்வதிக்கப்பட்ட
புனிதர். அங்குதான் அவர் வசித்தது. இப்போது அங்கு ஒரு மனிதர் தியானத்தில் இருக்கிறார்,
அந்தப் புனிதரா? தொடர்ச்சியான தியானம். அதாவது அது இதயத்தை வருடுகிறது, அழகான விசயம்.
ஓ, அவ்வப்போது நான் அங்கு சென்று வந்திருக்கிறேன்.
பில் மோயர்ஸ்: நீங்கள் அங்கு
சென்ற பொழுது எதைக் கண்டீர்கள்? நாம் விவாதித்தவை பற்றி அது என்ன கூறுகிறது?
ஜோசப் கேம்ப்பெல்: நல்லது. அது
கூறும் முதல் விசயம் இந்தக் கோட்பாடுகள் பற்றி சமூகத்திற்கு அறிவித்த காலகட்டத்திற்கு
என்னை அழைத்துச் சென்றதுதான். அதாவது அந்த இடத்தில் இருந்த உயரமான கட்டிடத்தின் பரிமாணம்
சமூகத்திற்கு அறிவித்ததை நீங்கள் கூற முடியும். ஒரு மத்தியதர நகரத்தை நீங்கள் அணுகும்
பொழுது, அந்த இடத்தில் உள்ள உயரமான விசயம் கதீட்ரல். நீங்கள் ஒரு 17-ஆம் நூற்றாண்டு
நகரத்தை அணுகும் பொழுது, அந்த இடத்தில் உள்ள உயரமான விசயம் அரசியல் அரண்மனை. ஒரு நவீன
நகரத்தை அணுகும் பொழுது, அந்த இடத்தில் உள்ள உயரமான விசயங்கள் அலுவலகக் கட்டிடங்களும்
குடியிருப்புகளும்.
உப்பு ஏரி நகரத்திற்குச்
சென்றால், உங்கள் முகத்துக்கு முன் முழு விசயமும் சித்திரம் வரைந்து காண்பிப்பது போலக்
காண்பீர்கள். முதலில் கோயில் கட்டப்பட்டது. நகரத்தின் மையப் பகுதியில் கோயில் கட்டப்பட்டிருக்கும்.
அதாவது இதுதான் முறையான சமூக அமைப்பு. அதுதான் ஆன்மிக மையம். அங்கிருந்துதான் அனைத்தும்
அனைத்து திசைகளிலும் வியாபிக்கும். கோயிலுக்கு அடுத்து தலைநகர் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.
அது கோயிலைவிட மிகப் பெரியது. இப்போது மிகப் பெரிய விசயம் அலுவலகக் கட்டிடம். அது கோயில்
மற்றும் அரசு கட்டிடங்கள் தொடர்பான விசயங்களைக் கவனித்துக் கொள்கிறது. 16-ஆவது,
17-ஆவது, 18-ஆவது நூற்றாண்டுகளின் மன்னராட்சிக் காலங்கள் முதல் இப்போது நாம் இருக்கும்
இந்தப் பொருளாதார உலகம் வரை, இதுதான் மேற்கத்திய நாகரிக வரலாறு.
பில் மோயர்ஸ்: இப்போது நியூ
யார்க்கில், அந்த உயரமான கட்டிடத்தைக் கட்டியவர் பற்றிய சர்ச்சை ஓய்ந்து விட்டது, உயரமான
கட்டிடத்தை வழிபடுவதற்கான சர்ச்சை அல்ல, கட்டியவர் பற்றிய சர்ச்சை.
ஜோசப் கேம்ப்பெல்: ஆம், அவை அதி
அற்புதமானவை. அதாவது, இப்போது நியூ யார்க்கில் நிகழ்ந்து கொண்டிருப்பதில் சில நிதர்சனமானவை,
கட்டுமானவியல் வெற்றியின் ஒரு வகை. அது என்னவென்றால், அந்த நகரத்தின் அறிக்கை; நாம்
நிதி ஆற்றல் மையம், நம்மால் செய்யச் சாத்தியமானதை எதிர்பார்க்கிறோம். அது நிகழ்த்தப்பட்ட
ஒரு வகையான நற்பேறுமிக்க செப்பிடு வித்தை.
பில் மோயர்ஸ்: புதிய தொன்மங்கள்
அங்கிருந்து தோன்றுமா?
ஜோசப் கேம்ப்பெல்: ஆம். சில தொன்மங்கள்.
ஒரு தொன்மம் எப்படி இருக்கும் என கணிக்க முடியாது. இன்று இரவு நீங்கள் காணப் போகும்
கனவு பற்றிக் கணிக்க முடியும். தொன்மங்களும் கனவுகளும் ஒரே இடத்திலிருந்து வருகின்றன;
ஒரு குறியீட்டு வடிவத்தின் வெளிப்பாட்டை அறிவதற்கான சில வகையான புரிதல்களிலிருந்து
அவை வருகின்றன. அடுத்து வரும் எதிர்காலத்தில் மதிப்புமிக்கதாக எண்ணப்படப் போகும் அந்தத்
தொன்மம் மட்டும் இந்தப் பிரபஞ்சம் பற்றிப் பேசும், இந்த நகரம் பற்றி அல்ல, இந்த மனிதர்கள்
பற்றி அல்ல. ஆனால் அந்தப் பிரபஞ்சம் மற்றும் அதில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அது பேசும்.
எதிர்காலத் தொன்மம் எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றிய என் முதன்மையான கருத்து
இது. அது எதிர்கொள்ளப் போவது மிகச் சரியாக அனைத்துத் தொன்மங்களும் எதிர்கொண்டவற்றையே:
தனிநபர் முதிர்ச்சி, பின்பற்றுவதற்கான படிப்படியான கல்வியியல் முறை, நடுத்தர வயது வாயிலான
சார்புநிலையிலிருந்து முதிர்ச்சி வரை, சென்றடைதல் வரை மற்றும் அதைச் செய்வது எப்படி
என்பது உட்பட. இந்தச் சமூகத்துடனான உறவுநிலையை எவ்வாறு பேணுவது, இந்த இயற்கை உலகத்துடனும்
இந்தப் பிரபஞ்சத்துடனும் இந்தச் சமூகத்தின் உறவுநிலையை எவ்வாறு பேணுவது. இவை அனைத்தும்
தொன்மங்கள் பேசியவை; இவற்றைத்தான் வரப் போகும் தொன்மமும் பேசும். ஆனால் சமூகம் பேச
விரும்புவது பிரபஞ்ச சமூகம் பற்றி, அது மறையும் வரை. உங்களிடம் எதுவுமில்லை.
பில் மோயர்ஸ்: அண்டவெளியிலிருந்து
காணும் தோற்றத்தில் உள்ள புவியின் அற்புதமான புகைப்படம் உங்களிடம் உள்ளது. அது மிகச்
சிறியது, அதே சமயத்தில் மிகப் பிரம்மாண்டமானது.
ஜோசப் கேம்ப்பெல்: தேசங்களின்
அல்லது பிரதேசங்களின் அல்லது வேறு ஏதேனும் வகை நிலப்பரப்புகளின் எந்தவொரு பகுதியையும்
நீங்கள் அதில் காண முடியாது. அது உண்மையில் ஒரு புதிய தொன்மம் தோன்றுவதற்கான குறியீடாக
இருக்கலாம். அது நாம் கொண்டாடப் போகும் ஒரு நாடு, அதில் உள்ள மக்கள் நாம் தான்.
***
https://shareasale.com/r.cfm?b=1662368&u=2859698&m=103309&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1772141&u=2859698&m=110488&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1741000&u=2859698&m=108514&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1689334&u=2859698&m=104872&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1531977&u=2859698&m=96940&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1626256&u=2859698&m=101580&urllink=&afftrack=