பொத்தி வைத்தலுக்காக
ஜாய்
ஹர்ஜோ
சூரியன்
அந்த தினத்தைப் புதிதாக்குகிறது.
சிறு
பசுந்தாவரங்கள் மண்ணில் முளைக்கின்றன.
பறவைகள்
வானத்தை ஒரு நிலைப்படுத்திப் பாடுகின்றன.
நான்
எங்கும் இருக்க விரும்பவில்லை, ஆனால் இங்கே இருக்கிறேன்.
உன்
இதயத் தாளகதியில் சாய்கிறேன்
அது
நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்பதைக் காண.
நாம்
ஒரு வெதுவெதுப்பான, தென்திசைக் காற்றில் நுழைகிறோம்.
நான்
என் கால்களை உன்னுடையவற்றுடன் இணைத்து,
ஒன்றாகச்
சவாரி செய்கிறோம்,
நம்
உறவுகளின் ஆதிமுகாம் நோக்கி.
எங்கே
இருந்தீர்கள்? அவர்கள் வினவுகிறார்கள்.
எதனால்
இவ்வளவு காலம்?
அன்றிரவு
உண்டு, பாடி, நடனமாடிய பின்
நாம்
நட்சத்திரங்களின் கீழ் இணைந்திருக்கிறோம்.
நம்
மனங்கள் இருண்மையின் ஒரு பகுதியாக இருப்பதை
நாம்
அறிகிறோம்.
அது
விவரிக்க முடியாதது.
அது
நித்தியத்துவமானது.
அது
பொத்தி வைத்தலுக்கானது.
***