வெள்ளி, 28 மே, 2021

ஹைக்கூ - கோபயாஷி இஸ்ஸா


 

பறவை தனது கூண்டிலிருந்து எத்தனை துயரத்துடன்

அந்தப் பட்டாம்பூச்சியை அவதானிக்கிறது.


*


உன்னுடையவன் - டேனியல் ஹாஃப்மன் (1923-2013)

 

 

நான் உன்னுடையவன், எலுமிச்சை மொக்குகளின் வாசனையால்

கிறங்கிய மாலைநேரக் கோடைகாற்று போல,

 

முழுநிலா வெளிச்சத்தில் ஒளிரும்

பனிப் படலம் போல.

 

நீயில்லையென்றால் வசந்தகாலம் இல்லாத போது

தனிமையில் பிளவுபட்ட இலைகளற்ற மரமாக இருப்பேன்.

 

உன் அன்பு என் இருத்தலின் நிலைப்பாடு

நதியில்லாத தீவு ஏது?

 

^^^

மரணிக்கவில்லை - ராபர்ட் கிரேவ்ஸ் 1895-1985

 

 

என் வெக்கையையும் வலியையும் குளிர்விக்க

மரங்களினூடாக நடக்கிறேன்,

எனக்குத் தெரியும் டேவிட் திரும்பவும் இங்கே என்னுடன் தான்.  

எளிமையானவர், உன்மத்தமானவர், வலுவானவர், அவர்.  

நட்பார்ந்த ஓக் மரத்தின் கரடுமுரடான பட்டையைப்

பரிவுடன் வருடுகிறேன். 

ஒரு சிற்றோடை குமிழ்த்தபடி  செல்கிறது: குரலொலி அவருடையது.  

புல்தரை ரம்மியமான பனிப்புகையுடன் எரிகிறது;  

பாடும் சிறுபறவையையும் வெளிர் மஞ்சள் பூச்செடியையும்

பார்த்துப் புன்னைகைக்கிறேன்.  

எளிமையானவர், உன்மத்தமானவர், வலுவானவர், அவர்.  

கணப்பொழுதில் முழு மரமும்

அவருடைய மென்சிரிப்பை உடைக்கிறது.

*

தொன்மையானது - ஆர்தர் ரைம்போ

 

 

கொள்கலத்தின் அழகிய வழித்தோன்றல்!

சிறுபூக்களாலும் கனிகளாலும்

உன் முன் நெற்றியில் முடி சூட்டப்பட்டுள்ளது.

உன் கண்கள், விலை மதிப்பற்ற கோளங்கள்

அலைகின்றன.

பழுப்பு நிற ஒயின் எச்சங்களால் கறை படிந்த

உன் கன்னங்கள் குழிவாக வளர்கின்றன.

உன் வெண்ணிறப் பற்கள் ஒளிர்கின்றன.

உன் மார்பு

நரம்புகளால் வேயப்பட்ட ஒரு இசைக் கருவி போல் உள்ளது.

உன் பொன்னிறக் கரங்களுக்கு இடையில்


கூடுதலாக, அந்த நிலா... - மினா லாய் (1882-1966)

 

வானங்களின் முகம்

நம் வியப்பை

வழிநடத்துகிறது.

 

சுவர்க்கத்தின்

ஒளிமிகுந்த இன்மை

நம்மை வரவேற்கிறது.

 

வெண்சாம்பல், வட்டச் சடலம்

உனது விடைபெறல்

வலிமிகுந்த இலகுவுடன் நம்மைத் தொற்றுகிறது,

 

வெப்பப் பனிக்கட்டிகளால்

நரம்பு முனையங்களைத் தீண்டியவாறு

 

உணர்வற்ற நிலை போன்ற தூண்டுதல்,

பூப்பதைப் போன்ற தளர்வு

உன் முரண்மிக்க விடியலின் மறைமுக உணர்த்தல்கள்

சுயத்தை நிரப்புகின்றன;

நமது ஒவ்வொரு சடலமும் கடவுளாக மாறுகின்றன.

*


(1882-ல் லண்டனில் பிறந்த மினா லாய் ஒரு ஃப்யூச்சரிஸ்ட், டாடாயிஸ்ட், சர்ரியலிஸ்ட், ஃபெமினிஸ்ட், கன்செப்ஸ்வலிஸ்ட், மாடர்னிஸ்ட் மற்றும் போஸ்ட்-மாடர்னிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டவர். கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், ஓவியர் என பன்முகம் கொண்டவர். டி.எஸ்.எலியட், எஸ்ரா ப்வுண்ட், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்றோரால் பாரட்டப்பட்டவர். 1966-ல் இறக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தவர். அவருடைய கவிதைகள் அவருடைய சுய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. இத்தாலிய மக்களின் அதிர்வுமிக்க வெளிப்படுத்தப்படாத வாழ்வின் கூறுகளை சில கவிதைகள் சித்தரிக்கின்றன. வெளிப்படையான படிமங்கள், பேச்சுவழக்கு மொழி வடிவம் மற்றும் இத்தாலிய உயிர்ச்சக்தியின் சித்தரிப்பு அவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். ஃப்யூச்சரிஸ்ட் பின்னணியின் கொலாஜ் சிதிலங்கள் இத்தகைய துடிப்புமிக்க கவிதைகளைக் கட்டமைக்க அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளன.)

ஒரு மீமெய்யியல் கவிதை

 

சூர்யோதயம்

ஜான் டான்

 

துடிப்பான முதிர்ந்த தந்திரக்காரனே, கட்டுக்கடங்காத சூரியனே,

ஏன் இவ்வாறு சன்னல் வழியாக, திரைகளினூடே

எங்களைச் சந்திக்கிறாய்?

உன் கிரண அசைவுகளோடு

காதலர்களின் பருவங்கள் விரைந்தோட வேண்டுமா?

நிர்வாணப் பகட்டுப் பாதகனே,   

நேரந்தாழ்த்தும் பள்ளிச் சிறார்களையும்

மோசமாகக் கூத்தடிக்கும்

பயிற்சியாளர்களையும் போய் உதை,

மன்னர் சவாரி செல்வார் என கூடாரச் சிலந்திகளிடம் சொல்,

அலுவலகங்களை அறுவடை செய்ய

நாட்டு எறும்புகளை அழை,

அனைவரையும் போல், காலத்தின் கந்தல்களான

பருவங்களுக்குத் தெரியாது,

தட்பவெப்ப நிலைகளுக்கு தெரியாது,

மணித்துளிகளுக்கு, நாட்களுக்கு, மாதங்களுக்குத் தெரியாது,

காதலைப் பற்றி.

 

 

உனது கிரணங்கள் மதிப்பு வாய்ந்தவை, வலிமையானவை,

அவற்றை ஏன் சிந்திக்கிறாய்?

நான் ஒரு கண்சிமிட்டலில் அவற்றை

கிரகணமாய் மேகம் கொண்டு மூடுவேன்.

ஆனால் அந்தக் கண்சிமிட்டல் நேரத்திலும்

அவள் மீது என் பார்வை பதிவதை இழக்க மாட்டேன்.

அவள் கண்கள் உன்னைக் குருடாக்கவில்லை என்றால்,

மூலிகையும் கனிம வளமும் கொண்ட

இண்டஸ் நதிப் படுகை

நீ தவறவிட்ட இடத்தில் இருக்கிறதா என

நாளை அந்திமப் பொழுதில் என்னைப் பார்த்து சொல்,

அல்லது இங்கே வந்து என்னுடன் படு.

நீ நேற்று பார்த்த மன்னர்களைக் கேள், உணரலாம்,

அனைவரும் இங்கே ஒரே படுக்கை விரிப்பில்.

 

 

அவள் அனைத்துமானவள், அனைத்து

இளவரசிகளுமானவள், நான் வெறுமையானவன்,

இளவரசிகள் எங்களை விளையாட்டில் ஈடுபடுத்துகிறார்கள்;

இதனுடன் ஒப்பிட்டால்,

அனைத்துப் புகழ்ச்சிகளும் பாவனைகள்,

அனைத்து வளங்களும் போலிவேதியியல்.

நீ, சூரியன், கொஞ்சம் மகிழ்வான கலைவடிவம் எங்களைப் போல,

அதில் இந்த உலகம் இவ்வாறு சுருங்கிப் போனது.

உன் வயது எளிமையை யாசிக்கிறது,

உன் செயல் உலகிற்கு வாஞ்சையுடன் இருப்பதால்,

எங்களுக்கு காதலை ஊட்டிச் செல்கிறது.

இங்கே எங்களுக்காக ஒளி வீசு, எங்கும் உன் திறனைத் தீட்டிச் செல்;

இந்தப் படுக்கை உன் மையம், இந்தச் சுவர்கள் உன் புவிக்கோளம்.

 

<|||||||||||||||||||||||||||||||>

  

ஜான் டான் (1572 – 1631) ஆங்கிலக் கவிஞர். இவருடைய எழுத்து வகை உடனடித் திறப்புகளையும் பல்வேறு முரண்நகைகளையும் உள்ளடக்கியது. பதட்டமான தொடரியல் மற்றும் கடினமான மொழிநடையும் கொண்டது. வழக்கமான கவிதையின் மென்தன்மைக்கு எதிரானது.

 

ஆனி மோர் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு பனிரெண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் ஜான் டான். இவருடைய கவிதைகள் அதிகமாக அச்சு வடிவம் பெறாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே வெளிவந்தன. முன்னர் வெளிவராத இவருடைய ஒரு கையெழுத்துப் பிரதி நவம்பர் 2018-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

 

மீமெய்யியல் எனும் கோட்பாட்டு 1781-ல் உருவாக்கப்படுகிறது. ஜான் டானின் படைப்புகள் மீமெய்யியல் வடிவம் கொண்டவை என சிறப்பிக்கப்படுகின்றன. முரண்நகை எழுத்துகளில் மட்டுமல்ல, இயற்கை மட்டுமே ஆளுமை கொண்டது எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப் பிரதிகளிலும் அவர் மீமெய்யியலைப் பின்பற்றியே எழுதினார் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

 

படிமங்களைப் பயன்படுத்தி இருவேறு கருத்துருக்களை ஒற்றைக் கருத்துருவாக ஒன்றிணைக்கும் நீட்டிக்கப்பட்ட உருவகம் மீமெய்யியல் எனக் கொள்ளலாம்.
*


#Monetization#:
https://shareasale.com/r.cfm?b=1662368&u=2859698&m=103309&urllink=&afftrack=

https://shareasale.com/r.cfm?b=1772141&u=2859698&m=110488&urllink=&afftrack=

https://shareasale.com/r.cfm?b=1741000&u=2859698&m=108514&urllink=&afftrack=

https://shareasale.com/r.cfm?b=1689334&u=2859698&m=104872&urllink=&afftrack=

https://shareasale.com/r.cfm?b=1531977&u=2859698&m=96940&urllink=&afftrack=

https://shareasale.com/r.cfm?b=1626256&u=2859698&m=101580&urllink=&afftrack=

புனைவை விலக்கிய கவிதை - நோவா ஃபால்க்

  

நாம் அதிக நற்பேறுமிக்க காலகட்டங்களில் வாழ்கிறோம்.

யாரைக் குறை சொல்வது?

வங்கிக் கொள்ளையை கவனிக்கத் தவறியபடி

அலங்கரிகரிக்கப்பட்ட ஜன்னலில்

நகரும் நான்கு பருவங்கள் போல நம் மனநிலைகள்.

ஒவ்வொருவரும் கேபிள் தொலைக்காட்சி மீது,

தோல்வார்களின் மீது,

நமது ஒப்பாரிகளாக மாறும் குறுகிய திறப்பு இயந்திரங்களின் மீது

குழந்தைகளை வளர்க்கிறோம்.

பள்ளி, கல்லூரிகளில்,

இரங்கல் செய்திகளை வாசிக்கும் வாயில் முகப்புகளில்

மற்றவரின் வாழ்க்கையை வாழ்கிறோம்.

சவரம் செய்யும் போது,

பல் துலக்கும்போது,

எப்போதும் வளர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கும்

ஏதாவது ஒன்றைப் பிடுங்கி வீசும் போது

உன்னை நான் தவற விடுகிறேன்

என்று கண்ணாடி முன் நின்று சொல்கிறோம்.

*