என்
வெக்கையையும் வலியையும் குளிர்விக்க
மரங்களினூடாக
நடக்கிறேன்,
எனக்குத்
தெரியும் டேவிட் திரும்பவும் இங்கே என்னுடன் தான்.
எளிமையானவர்,
உன்மத்தமானவர், வலுவானவர், அவர்.
நட்பார்ந்த
ஓக் மரத்தின் கரடுமுரடான பட்டையைப்
பரிவுடன்
வருடுகிறேன்.
ஒரு
சிற்றோடை குமிழ்த்தபடி செல்கிறது: குரலொலி
அவருடையது.
புல்தரை
ரம்மியமான பனிப்புகையுடன் எரிகிறது;
பாடும்
சிறுபறவையையும் வெளிர் மஞ்சள் பூச்செடியையும்
பார்த்துப்
புன்னைகைக்கிறேன்.
எளிமையானவர்,
உன்மத்தமானவர், வலுவானவர், அவர்.
கணப்பொழுதில்
முழு மரமும்
அவருடைய
மென்சிரிப்பை உடைக்கிறது.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக