வெள்ளி, 28 மே, 2021

ஒளிமிகு நன்னம்பிக்கை - ஃப்ரான்சஸ் எல்லன் வாட்கின்ஸ் ஹார்பர்

 

 

ஓ தொடாதீர்கள் அந்த நம்பிக்கை ஒளிமிக்கது

நைந்த இதயத்திற்கு உற்சாகாமூட்டுகிறது

துயரம் நுழைய முடியாத

இளைப்பாறுதலுக்கு வழிகாட்டுகிறது.

 

ஒவ்வொரு நிலைப்பாட்டையும் இதயத்திலிருந்து கிழிக்கிறது

ஒவ்வொரு உலகாயதப் பிணைப்பையும் விடுவிக்கிறது

இந்தப் பேரொளி கொண்ட அதிஉன்னத நம்பிக்கையிடம்

என் ஆன்மா ஆலிங்கனம் கொள்ளட்டும்.

 

ஒவ்வொரு புனிதக் கூட்டத்தலைவனின் மார்பினுள்ளும் நிறைந்த    

பழைய நாட்களில் அது மகிழ்ச்சி நிரம்பியது

அவர்களின் ஆன்மாக்களுக்கு அது ஒரு நங்கூரமாய் இருந்தது

அதன்மீது என்னை இளைப்பாற விடுங்கள்.

 

அடர்வனங்களிலும் குகைகளிலும் ஆடுகளின்

செம்மறியாடுகளின் தோல் உடைகளிலும் அலையும் பொழுதுகளில்

உள்ளீர்க்கப்பட்ட சிதறடிக்கப்பட்ட மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள்

இந்த நன்னம்பிக்கை ஒளிமிக்கது என்பதை.

 

பேரொளிமிக்க நம்பிக்கையிடம் நான் காதல் கொள்ள உதவுங்கள்

என்னிதயம் உடையக் கூடியது

இந்த நன்னம்பிக்கையைக் கைப்பற்றிக் கொள்வதற்கு

உங்களுக்குத் துணிச்சல் இல்லையா?

 

இந்த மோதல்களுக்கு மத்தியில்

கிறிஸ்துவின் ஆளுமையை விரும்ப உதவுங்கள்

அவர் வாழ்வின் மகுடத்தைக் கொண்டு வரும் பொழுது

நான் கூட அதைப் பெறலாம்.


*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக