வெள்ளி, 28 மே, 2021

இரவுப் பாடகர் - அலஹேந்த்ரா பிஸார்நிக்

 


நீலநிற உடையுடன் இறந்தவள் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பாடல் மரணத்தில் மூழ்கி உள்ளது. அவளுடைய குடிபோதையின் சூரியனுக்காக அவள் பாடுகிறாள். அவளுடைய பாடலினுள் ஒரு நீலநிற உடை, ஒரு வெள்ளைக் குதிரை, அவளுடைய மரணித்த இதயத்தின் எதிரொலிகளுடன் பச்சை குத்தப்பட்ட ஒரு பசுமையான இதயம் ஆகியவை இருக்கின்றன. தொலைந்து போன அனைத்துக்குமாகக் காட்சிமைப்படுத்தியபடி, ஒரு நாடோடிப் பெண்ணுடன் இணைந்து பாடுகிறாள். அந்த நாடோடிப் பெண்ணும் அவள் தான், அவளுடைய மந்திர தாயத்து. அவளுடைய உதடுகளில் பசும்பனியும், கண்களில் சாம்பல்நிறக் குளிரும் இருந்தாலும், தாகத்திற்கும் தண்ணீரை அணுகும் கரத்திற்கும் இடையில் விரிந்த தொலைவை அவளுடைய குரல் உடைத்தெறிகிறது. அவள் பாடிக் கொண்டிருக்கிறாள். 


தமிழில்: மோகன ரவிச்சந்திரன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக