மனம் ஒரு சிறையாய் இருந்தது, மரகதக்கல்
அதன் உதட்டுச்சாயத் தூரிகையில் உலர்ந்திருந்தது-ஒவ்வொன்றும் பெண்
நான் எதிர்பார்த்தது போல, அகப்பட்டுக் கொண்டேன்
காகிதச் சுவர்களுக்கு இடையில். அவர்கள் செய்யச் சொன்னதை, நான் செய்யவில்லை ஆனால் ஆழ்ந்த உணர்வில் மிதந்தேன்,
உடல் ஒரு நீர்மம் அதில் மூழ்கினேன், வாழ்வு
அன்புமிக்கதோர் அழுக்குக் கண்ணாடி. அவர்கள்
சிந்திக்கச் சொன்னதை, நான் சிந்திக்கவில்லை ஆனால் அதற்கு மாறாக
எனது மனதை ஒரு பறவைக் கூண்டில் சிறகுகளுடன் தாழிட்டுக் கொண்டேன்
*
மெல்லிஸா ஸ்டட்டார்ட்
I Ate the Cosmos for Breakfast (Saint Julian Press, 2014) நூலின் ஆசிரியர். டாம்பால் லான் ஸ்டார் கல்லூரிப் பேராசிரியர். டெக்சாஸ், ஹவுஸ்டனில் வசிக்கிறார்.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக