வெள்ளி, 28 மே, 2021

இருள் பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் - ரஸ்கின் பாண்ட்

 

 

இருள் பற்றி அச்சம் கொள்ள வேண்டாம்

மிக மெல்லியது அது

பகல் முடிவுறும் வேளை

பூமி ஓய்வெடுக்க வேண்டும்

சூரியன் கடுமையானவன்

நிலா அவ்வாறல்ல

அந்த விண்மீன்கள்

எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்

இரவுடன் நட்பாயிரு

அச்சம் கொள்ள ஒன்றுமில்லை

அருகிலும் தொலைவிலும் இருக்கும் நண்பர்களுடன்

உனது சிந்தனைகளைப் பயணிக்க விடு

பகலில் நமது துயரங்கள் முடங்கப் போவதில்லை

இரவில், பின்னிரவில் உலகம் அமைதியாக இருக்கிறது.


*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக