எனக்குப் பசியைத் தாருங்கள்,
உலகிற்கு அதன் வழிமுறைகளை வழங்கும்
கடவுளர்களே,
பசியையும், வலியையும் ஆசையையும் தாருங்கள்,
உங்கள் பொன், புகழ் கதவுகளிலிருந்து
என்னை வெளியேற்றுங்கள் அவமானத்துடனும் தோல்வியுடனும்,
நைந்துபோன, களைப்புமிகுந்த பசியைத் தாருங்கள்!
ஒரு சிறு அன்பை மட்டும் என்னிடம் விட்டுவிடுங்கள்,
பகல் முடிவு வரை என்னிடம் பேச ஒரு குரலாக,
இருளில் என்னைத் தீண்ட ஒரு கரமாக,
அதில் நீள்தனிமை உடைந்து போகட்டும்.
பகல் வடித்தெடுத்த அந்தியில்
சூரியன் அஸ்தமனம் மங்கலாய் ஒளிர்கையில்,
ஒரு சிறு அலைதல், மேற்குலக விண்மீன்
உருமாறும் நிழற்கரையிலிருந்து உந்தித் தள்ளட்டும்.
என்னை அந்தச் சாளரத்தின் அருகில் செல்ல விடுங்கள்,
அந்தியின் பகல் வடிவங்களைக் காண்பதற்காகவும்,
ஒரு சிறு அன்பின் வருகைக்குக் காத்திருந்து,
அதைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக