வெள்ளி, 28 மே, 2021

பின்நவீனத்துவத்தின் மரணமும் அதற்கு அப்பாலும் - ஆலன் கிர்பி

 

 

 பின்நவீனத்துவம் மரணித்துள்ளதாகவும் புதைக்கப்பட்டு விட்டதாகவும் ஆலன் கிர்பி கூறுகிறார். அதன் இடத்தில், புதிய தொழில் நுட்பங்களாலும் சமகாலச் சமூகச் சக்திகளாலும் ஆன  நெருக்கடிகளின் கீழ், அதிகாரத்தாலும் அறிவாலும் உருவான  ஒரு புதிய வாய்ப்பாடு பிறந்துள்ளது.

 *

என் முன்னே, பிரிட்டிஷ் பல்கலைக் கழக ஆங்கிலத் துறையின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு அளவறியும் அலகு விளக்கத்தை, நான் வைத்திருக்கிறேன். அது, அளிக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் விபரங்களையும் விருப்பப் பாட அலகுகளில் 'பின்நவீனத்துவப் புனைகதைகளைப் படிப்போரின் வாராந்திரப் பட்டியலையும் உள்ளடக்கியது. இங்கே, பல்கலைக்கழகத்தின் பெயர் வெளிப்படுத்தப்படாததற்குக் காரணம், கட்டுரைகள் எந்த வகையிலும் இழிவானவை என்பதால் அல்ல, எந்தப் பல்கலைக்கழகத்தின் எந்தக் கட்டுரையும் அல்லது கட்டுரையின் பகுதிகளும் இவை போன்றே இருக்கும். இனி வரும் கல்வியாண்டிலிருந்து இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆங்கிலத் துறையிலும் இதேமாதிரிதான் போதிக்கப்பட உள்ளது. பின்நவீனத்துவம் உயிர்ப்புடனும் வளர்ந்து கொண்டும் வருவதாகத்தான் அது கருதுகிறது. பின்நவீனத்துவத்தையும் பின் நவீனத்தன்மையையும் உள்ளிட்ட பொதுவான தலைப்புகளை அறிமுகப்படுத்தி, புனைகதையின் சமகால எழுத்துகளுடனான உறவுகளை ஆய்வு செய்யப்போவதாக அது கூறுகிறது. பின்நவீனத்துவம், சமகாலத்தைச் சார்ந்ததாக அது கூறலாம். ஆனால், உண்மையில் பின்நவீனத்துவம் இறந்து விட்டதாகவும் புதைக்கப்பட்டு விட்டதாகவும் ஒப்பீடுகள் காட்டுகின்றன.

 பின்நவீனத்துவத் தத்துவம், அர்த்தத்தின் தப்பித்தலையும் அறிவின் தப்பித்தலையும் முதன்மைப் படுத்துகிறது. இவை, பிரதிநிதித்துவப்படுத்தல் மற்றும் முரண்நகைச் சுய பிரக்ஞையின் ஈடுபாடு என, பின்நவீனத்துவக் கலையில் அடிக்கடி வெளிப்படுத்தப்படுகின்றன. பின்நவீனத்துவம் முடிந்து போன ஒன்று எனும் விவாதம், ஏற்கனவே தத்துவார்த்தமாகச் செய்யப்பட்டு விட்டது. சிறிது காலம் நாம் பின்நவீனத்துவச் சிந்தனை மீது நம்பிக்கை கொண்டிருந்தோம், ஆனால் இனிமேலும் அல்ல, இப்போதிலிருந்தே விமர்சன யதார்த்தவாதத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறோம் என்ற அடிப்படையில் உறுதியாகக் கூறும் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பகுப்பாய்வின் குறைபாடு யாதெனில், அது கல்வித்துறை மற்றும் அடிப்படைகளில் மாற்றம் செய்த அல்லது செய்யாத அல்லது செய்யப் போகும் தத்துவவாதிகளின் நடைமுறைகள் மீதும் புனைவுகள் மீதும் மட்டுமே மையம் கொண்டிருப்பதுதான். கல்வியாளர்கள் இறுதியாக வேறு எதை நோக்கியும் செல்வதைவிட, ஃபூக்கோ(முதன்மைப் பின்நவீனத்துவவாதி)வைச் சார்ந்திருக்கவே எளிதாக முடிவு செய்கிறார்கள். எவ்வாறாயினும், தற்போதைய கலாச்சார உற்பத்தியில் ஊறிய கல்வித்துறைக்கு வெளியே உற்று நோக்குவதன் மூலம் பின்நவீனத்துவம் இறந்து விட்டது எனும் ஆழமான ஒரு கட்டாய விஷயத்தை உருவாக்க முடியும்.

  இந்த வருடம் 'பின்நவீனத்துவப் புனைகதை'யைப் பாடமாக எடுத்த பெரும்பாலான பட்டதாரிகள், 1985-லோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருப்பார்கள். அவர்களது கட்டுரைகளுக்கான முக்கியப் படைப்புகள் அனைத்தும் அல்லது ஏதேனும் ஒன்று அவர்களின் வாழ்நாளுக்கு முன்பே எழுதப்பட்டவை. சமகாலத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கும் அப்பால், அந்தப் பிரதிகள் அந்த மாணவர்கள் பிறப்பதற்கும் முன்பே வேறொரு உலகில் பதிப்பிக்கப்பட்டவை: The French  Lieutenant’s  Woman, Nights at the Circus, If on a Winter’s Night a Traveller, Do Androids Dream of Electric Sheep? (and Blade Runner), White Noise:  இது மம்மி-டாடி கலாச்சாரம். சில பிரதிகள் (‘The Library of Babel’), அவர்களுடைய பெற்றோர்கள் பிறப்பதற்கும் கூட முன்னால் எழுதப்பட்டவை. இந்த ரகசியத்தை, மற்ற பின்நவீனத்துவ வல்லவர்களுடையவற்றோடு மாற்றி வைத்துப் பாருங்கள்: Beloved, Flaubert’s Parrot, Waterland, The Crying of Lot 49, Pale Fire, Slaughterhouse 5, Lanark, Neuromancer, B.S.Johnson -னின் ஏதேனும் ஒன்று - இப்படியாகப் பொருத்திப் பார்க்கலாம். இன்றும் தொடரும் பீட்டாமாக்ஸ் வீடியோப் பதிவுக்கருவியின் இன்றைக்குமான நிகழ்ச்சிகளாக அவை உள்ளன. அவை, ராக் இசை மற்றும் தொலைக்காட்சியுடன்   புதிதாகத் தொற்றிக் கொண்டு வந்த பிரதிகள். தொடர்பு ஊடகம் மற்றும் தொழில் நுட்பத்தின் சத்தியப்பாடுகள் குறித்துக்கூட பெரும்பாலும் அவை கனவு கண்டதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் செல்பேசி, இமெயில், இன்டர்நெட், கணினி போன்றவை போதுமான அளவு ஒரு மனிதனை நிலவில் வைக்கும் சக்தி வாய்ந்தனவாக உள்ளன. இவை, இன்றைய மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அனுமதிக்கப் பட்டவையாக எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

 பிரிட்டிஷ் பின்நவீனத்துவப் புனைகதைகள் குறித்த அடிப்படை வாசிப்பு ஏன் மிகப் பழைமையானதாக உள்ளது என்பதற்கான காரணத்தை, நேரடி வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், அந்த வாசிப்பின் சமகால இளமை மீட்டுருவாக்கம் செய்யப்படவில்லை என்பதே. சற்றே கலாச்சாரச் சந்தைகளைப் பார்வையிடலாம்: கடந்த ஐந்து வருடங்களில் வெளியான நாவல்களை வாங்கிப் பாருங்கள்; இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஒரு திரைப்படத்தைப் பாருங்கள்; சமீபத்திய இசையைக் கேளுங்கள்; இவை அனைத்துக்கும் மேலாக, ஒரு வாரத்திற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உற்றுக் கவனியுங்கள். இவற்றில், பின்நவீனத்துவத்தின் ஒரு சிறு கீற்றைக்கூடக் காண்பது அரிதாக இருக்கும். அதேபோல, இலக்கியக் கருத்தரங்குகளுக்குச் சென்று (நான் கடந்த ஜூலையில் சென்றதுபோல), அங்கு வாசிக்கப்படும் கட்டுரைகளை அமர்ந்து கேட்டுப்   பாருங்கள், அவற்றில் எதிலும் கோட்பாடுகள் குறித்தோ, தெரிதா குறித்தோ, ஃபூக்கோ குறித்தோ, போத்திரியார் குறித்தோ ஒரு எடுத்துக்காட்டும் இருக்காது. ஓய்வூதியம் குறித்த, தளர்ச்சி குறித்த, கல்வியாளர்கள் மத்தியில் புரளும் நிறையக் கோட்பாடுகளின் பொருத்தப்பாடின்மைகள் குறித்த அறிவுகூட, பின்நவீனத்துவத்தின் வெளியேற்றத்திற்கான சான்றுகளைத் தாங்கிப் பிடிக்கிறது. கல்வியாளர்களும் கல்வியாளர் அல்லாதவர்களும் வாசிக்கிற, காண்கிற, கேட்கிற கலாச்சார வகைமைகளைத் தயாரிக்கின்ற மக்களும் எளிதாகப் பின்நவீனத்துவத்தை ஒதுக்கி விட்டனர். அரிதான புனைகதைகள் அல்லது சுய-பிரக்ஞாபூர்வமான பிரதிகள் வேறுபாடின்மைகளை பரந்துபட்ட அளவில் பரப்புவதற்காகத் தோற்றம் கொள்ளும். இப்போது வெகுவாக மறக்கப்பட்ட அப்போதைய நவீனத்துவ நாவல்கள், 1950-60களில் எழுதப்பட்டு வந்துள்ளன. பின்நவீனத்துவம் இன்னமும் உயிர்வாழும் இடமாக, குழந்தைகளின் கார்ட்டூன்கள் போன்றவை உள்ளன. கட்டாயமாக, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து அந்த நிகழ்ச்சிகள் முழுவதையும் காண வற்புறுத்தப்படுகிறார்கள். பின்நவீனத்துவம் இந்த மட்டத்திற்கு அழுத்தி மூழ்கடிக்கப் பட்டுள்ளது. இது, பாப் கலாச்சாரத்தில் எட்டுவயதுக்குக் கீழுள்ள குழந்தைகளைக் குறிவைக்கும் விளிம்பு நிலை வாய்ப்பூட்டின் ஆதாரம்.

 

போலிமைப் பின்நவீனத்துவம் என்பது என்ன ?

கலாச்சாரப் பழக்க வழக்கங்களின் ஒரு சாதாரண மாற்றத்தை விட மேலும் இடம் பெயர்தல் இன்னமும் அதிகமாக இருப்பதாக நான் நம்புகிறேன். அதிகாரத்துவம், அறிவு, சுய ஆளுமை, உண்மை மற்றும் காலம் போன்றவற்றை உருவாக்கிய வரையறைகள் எப்போதும் திடீரெனத் திருத்தம் செய்யப்பட்டு வந்துள்ளன. இப்போது விரிவுரையாளர்களுக்கும் 1960-களின் படிக்கும் இவர்களுக்கு ஒத்த இயல்புள்ள மாணவர்களுக்கும் இடையே ஒரு கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆனால் அதே போன்ற காரணத்திற்காக அல்ல. நவீனத்வத்திலிருந்து பின் நவீனத்துவத்திற்குத் தாவும் இந்த இடம் பெயர்தல், லாச்சார உற்பத்தி மற்றும் வரவேற்பு முறைகளின் நிலைமைகளில் ஆழமான மறுதெளிவாக்கத்திலிருந்து உருவானது அல்ல. மிகைப்படுத்தப்பட்ட சொல்வன்மையுடன் அனைத்தும் நிகழ்ந்தன. Ulysses, To the Lighthouse எழுதியவர்கள் அவற்றிற்குப் பதிலாக Pale Fire, The Bloody Chamber எழுதினர். ஆனால் பிந்தைய 1990-களிலும் 2000 வருட ஆரம்பத்திலும் புதிய தொழில் நுட்பங்களின் நெருக்கடி, கொடூரமான வழியில் படைப்பாளர்,  வாசிப்போர் மற்றும் பிரதிகளின் இயல்புகளையும் அவர்களுக்கு இடையே உள்ள உறவுகளையும் மறு அமைப்பாக்கம் செய்தது.

  பின்நவீனத்துவம், நவீனத்துவம் போலவும் அதற்கு முன்பு இருந்த சிருங்காரத்துவம் போலவும் படைப்பாளரைச் செயற்கைதனமாகப் பாவிக்கிறது (அதாவது முதன்மையான முக்கியத்துவத்தைப் படைப்பாளர் மீது வைக்கிறது) அந்தப் படைப்பாளர் தன்னையே குற்றம் சாட்ட முனைந்த போதும் கூட அல்லது தன்னைத்தானே அழிப்பதற்கு பாசாங்கு செய்தபோதும் கூட, ஆனால் நாம் பெற்றிருக்கும் கலாச்சாரம் ஒரு பகுதியோ அல்லது முழு அளவு படைப்பாளராக மாறும் தூரத்திற்குப் பிரதியைப் பெறுபவரைச் செயற்கைத் தன்மையாகப் பாவிக்கிறது. நம்பிகைவாதிகள் இதைக் கலாச்சாரக் குடியரசாகப் பார்க்கிறார்கள். சோர்வு மனப்பாங்குள்ளவர்கள் தாளாத வலியை உண்டு பண்ணுகிற தொந்தரவையும் அங்கே உருவாகக் கூடிய கலாச்சார உற்பத்திகளின்   Vacuityயும் குறிப்பிடுவார்கள். (குறைந்த பட்சம் இதுவரையிலாவது)

நான் விவரிக்கிறேன்- பின்நவீனத்துவம் சமகாலக் கலாச்சாரத்தால் உருக்கொண்டது ஒரு மூக்குக் கண்ணாடி போல. அதன் முன் ஒரு மனிதன் சக்தியற்று வீற்றிருப்பது அதனுள் உண்மையின் கேள்விகள் பிரச்னைக்கு ள்ளாக்கப்படுகின்றன. எனவே அது தொலைக்காட்சிப் பெட்டிக்கு அல்லது திரைப்படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதனை வெற்றி கண்டதை நான் போலி நவீனத்துவம் என அழைக்கிறேன். அது தனி மனிதனின் முனைப்புகளைக் கலாச்சார உற்பத்தியின் அத்தியாவசிய நிலைப்பாடாக உருவாக்குகிறது. போலி நவீனத்துவம் என்பது தொலைக்காட்சி அல்லது வானொலி நிகழ்ச்சிகளை அல்லது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. அனைத்துப் பிரதிகளின் உள்ளடக்கம் மற்றும் இயக்கம் அதில் பங்கு பெரும் பார்வையாளர்களால் அல்லது நேயர்களால் கண்டுபிடிக்கப் படுகிறது அல்லது நெறியாள்கை செய்யப்படுகிறது (பின்னர் வந்த இவ்வகை வரையறைகள் அவற்றின் வரவேற்பு மீதான மந்தம் மற்றும் அழுத்தத்துடன் காலாவதியாகிவிட்ட போதிலும், Big Brother-க்கு வாக்களிக்கத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்வது அல்லது 6-0-6 க்கு கால்பந்து ரசிகர் தொலைப்பேசியில் பேசுவது என்பது வெறுமனே பார்ப்பதோ அல்லது கவனிப்பதோ மட்டுமல்ல )

 விளக்கங்களால் மட்டுமே போலிநவீனக் காலச்சார உற்பத்திகள் சாத்தியமில்லை, தோன்றுவதுமில்லை -அவற்றில் தனி மனிதனின் ஸ்தூலமான இடையீடு இல்லாதவரை. யாராவது படித்தாலும் சரி அல்லது படிக்காவிட்டாலும் சரி Great Expectations ஸ்தூலமானதாகத் தோன்றும். டிக்கன்ஸ் அதை எழுதி முடித்ததும்  பதிப்பாளர் அதனை வெளியிட்டதும் அதன் ஸ்தூலமான பிரதித் தன்மை அதன் சொற்களின் தேர்வு தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றது - மக்கள் அதனை எவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்கள் எனும் அதன் அர்த்தங்கள் திரும்பவும் வெகுவாகக் கைப்பற்றுதலுக்காக மேல் எழுந்த போதிலும். அதன் ஸ்தூலமான படைப்பாக்கமும் அதன் அமைப்பும் அதனை வழங்குபவர்களால் அதாவது அதன் படைப்பாளர், பதிப்பிப்போர், தொடர்கதை தயாரிப்பாளர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டன. அர்த்தம் மட்டுமே வாசகரின் ஆட்சிப் பரப்பாக இருந்தது. மற்றொருபுறம் போட்டியாளர்களைத் தோற்கடிப்பதற்காக வாக்களிக்க யாருமே தொலைப்பேசியில் பேசவில்லையென்றால், போலி நவீனக் கலாச்சாரப் பிரதியை எடுத்துச் செல்ல Big Brother பொருள்தன்மையுடன் தோன்றாது. இவ்வாறாக வாக்களித்தல் என்பது நிகழ்ச்சியின் ஸ்தூலமான பிரதியின் ஒரு பகுதி. தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் பார்வையாளர்கள் தாங்களே நிகழ்ச்சியைப் படைப்பதாக ஆகிறது.  Big Brother பகுதிகளைப் படைக்க பார்வையாளர்களால் சாத்தியப்படாமல் போனால், அது பின்னர் விந்தையானதாக Andy Warhol திரைப்படத்தையே ஒத்ததாக இருக்கும்: கிளர்ச்சியுறும் இளமையான காட்சியாளர்கள் மந்தமாக, ஆர்வமில்லாமலும் குறிக்கோள் ஏதுமின்றி உளறிக்கொண்டும் மணிக்கணக்கில் அறையில் கிடப்பது போல. சொல்ல வருவது என்னவெனில் Big Brother என்னவென்று உருவாக்குவது தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் பார்வையாளரின் செயல் தான்.

 போலி-நவீனத்துவம் தற்காலச் செய்தி நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அவற்றின் உள்ளடக்கம் செய்தித் தொகுப்புகள் மீது விமர்சனம் செய்ய அனுப்பப்படும் இமெயில் அல்லது பிரதித் தகவல்களை அதிக அளவில் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இடத்தில் உள்வியாபக நடவடிக்கைகள் குறித்த செல்லியல் ஆய்வு அங்கே எவ்விதப் பரிமாற்றங்களும் இல்லாததால் சம பங்காகப் பொருத்தமற்றதாக உள்ளது. அதற்குப் பதிலாக பார்வையாளர்கள் அல்லது நேயர்கள் நுழைகிறார்கள், நிகழ்ச்சியின் ஒரு பகுதியைப் படைக்கிறார்கள், பின்னர் முனைப்பற்ற பாத்திரத்திற்குத் திரும்ப வெளியேறுகிறார்கள். போலி நவீனத்துவம் கணினி விளையாட்டுப் போட்டிகளையும் உள்ளடக்கியது. அது போல முன்தொடர்ச்சியற்ற எல்லைக்குள் கலாச்சார உள்ளுறையைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தை முன் வைக்கிறது. விளையாட்டுப் போட்டியின் ஒவ்வொரு தனிப்பட்ட நடவடிக்கைகளின் உள்ளடக்கம் குறிப்பிட்ட விளையாட்டு வீரரைப் பொறுத்து வித்தியாசப்படுகிறது.

 போலி நவீனக் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க அதி அற்புத நிகழ்வு இன்டர்நெட். அதன் மைய நடவடிக்கை என்னவெனில் வலைப்பக்கங்களில் நுழைய, திரும்பத் திரும்பச் செய்யத் தேவையில்லாத வழிகளுள் மவுசை அழுத்தினால் போதும். கலாச்சார உற்பத்தியின் வாயிலாக இதற்கு முன் இல்லாததும் திரும்பவும் தோன்றாததுமான ஒரு விசாலமான பாதையைக் கண்டுபிடிப்பதும் எளிதாகிறது. இது ஊமைக்கூத்தை விடவும் கலாச்சாரச் செய்முறையுடன் கூடிய அதீதத் தீவிர உறுதிப்பாடு. ஆனால் இவை எழுதப்பட்ட அல்லது வேறு வகையிலோ படைக்கப்பட்ட ஒரு ஸ்தூலமான பிரதியைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பிரதிகளை மாயாஜாலப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தின் வரம்புகளுள் அவை மூழ்கடிக்கப்பட்டன. ஆனால், போலி நவீனப்பிரதி அதன் அனைத்து விசித்திரங்களுடன் இன்றைய கலாச்சார நுட்பத்தின் ஒரு நடுநாயகமான அதிகாரத்துவ வடிவமாக நிற்கிறது. கலாச்சாரம் அதன் வரம்புகளில் இன்னமும் மற்ற வகைப்பாடுகளைத் தெரிந்து வைத்துள்ள போதும் இவ்வகை மற்ற வகைப்பாடுகள் போலி நவீனத்துவச் செயல்பாடுகளுக்கு எதிராக, மந்தமானதாக தூசிக்கப் பட வேண்டியதில்லை. வாசிப்பது, கேட்பது, கவனிப்பது போன்றவை எப்போதும் அவற்றின் நடவடிக்கைகளின் பகைமைகளை பெற்றிருந்தன. ஆனால், போலி நவீனப் பிரதியைத் தயாரிப்பவரின் செயல்பாடுகளில் ஒரு உடல்கூறுரீதியான இயக்கம் உள்ளது. பிரதியின் தொகுப்புக்காகக் கலாச்சாரச் சமன்பாட்டை மாற்றம் செய்யும் ஒரு அதிகாரத்துவம் போலவே அவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு தேவையுள்ளது (நேற்றைய ஜாம்பவான்களான திரைப்படமும் தொலைக்காட்சியும் எவ்வாறு அதன் முன் பணிந்து போயின என்பதைக் கவனிக்கவும்) இது 21ம் நூற்றாண்டின் சமூக-வரலாற்று-கலாச்சார வல்லரசை வடிவமைக்கிறது. அனைத்திற்கும் மேல் போலி நவீனத்துவத்தின் செயல்பாடு அதன் சுய அறுதியீட்டை-அது மின்னணு சார்ந்தது, பிரதி நிலை வாய்ந்தது ஆனால் நிலையற்ற அறுதியீட்டைப் பெற்றுள்ளது.

 

மாற்றங்களைக் கிளிக் செய்வது

பின் நவீனத்துவத்தில் முன்பு போலவே வாசிக்க, கவனிக்க, கேட்க முடியும். போலி நவீனத்துவத்தில் தொலைப்பேசியில் பேசுவது, கிளிக் செய்வது, அழுத்துவது, அலைவது, தெரிவு செய்வது, நகர்வது, பதிவிறக்கம் செய்வது போன்றவை சாத்தியமாக உள்ளன. இங்கே சுமார் 1980-க்கு முன்னாலும் பின்னாலும் பிறந்தவர்களைப் பிரித்து பார்த்தால், ஒரு தலைமுறை இடைவெளி தெரிகிறது. பின்னர் பிறந்தவர்கள் தங்கள் சம அந்தஸ்து உடையவர்களைச் சுதந்திரமானவர்களாக, சுயாட்சி பெற்றவர்களாக, கண்டுபிடிப்பாளர்களாக, வெளிப்படையானவர்களாக, சக்தி மிக்கவர்களாக, தற்சார்புள்ளவர்களாகக் காண்கிறார்கள். அவர்களுடைய குரல்கள் ஒப்பற்றதாக உயர்வதையும் கேட்கப்படுவதையும் காணலாம். பின் நவீனத்துவம் அதற்கு முன்பு இருந்த மற்ற அனைத்தும் இதற்கு முரணாக, ஜாம்பவான்களை மந்தமானவர்களாக, நெருங்கிப் பழகாத சோம்பேறித்தனமாக அவர்களை ஒடுக்கி உறிஞ்சும் தனி மொழியாகக் காண்கிறது. 1980-க்கு முன் பிறந்தவர்கள் பொதுசனங்களுக்குப் பதிலாகச் சமகாலப் பிரதிகளை மாற்றீடாக முரட்டுத்தனமானதாக, வக்கிரமானதாக, உண்மைக்குப் புறம்பானதாக, சாதாரணமானதாக, சலிப்பூட்டுவதாக, ஒத்த தன்மை உடையதாக, நுகர்வுரீதியானதாக, அர்த்தமற்றதாக மற்றும் அறிவற்றதாக காண்கின்றனர் (உதாரணத்திற்கு, விக்கிபீடியா பக்கங்களில் காணப்படும் பிதற்றுதலை அல்லது Ceefax-ல் காணப்படும் சூழலின் குறைபாட்டைக் காணலாம்).

 அவர்களுக்குப் போலி நவீனத்துவத்திற்கு முன்னர் வந்தது அறிவுக்கூர்மையின், படைப்பாக்கத்தின், கலகத்தன்மையின் மற்றும் நம்பகத்தன்மையின் பொற்காலமாகத் தோன்றும். ஆகவே போலி நவீனத்துவம் எனும் பெயர் கூடத் தொழில் நுட்பரீதியான ஆதாரத்தின் சொகுசு தன்மைக்கும் அதனால் ரிமாற்றம் செய்யப்பட்ட உட்பொருள் சலிப்பு தன்மைக்கும் அல்லது அறியாமைக்கும் இடையே உள்ள பதற்றத்திற்கு உள்ளர்த்தம் தருகிறது- செல்பேசி உபயோகிப்பாளரால் எண்ணப்பட்ட -நான் பஸ்ல இருக்கேன்- ஒரு கலாச்சார மதிப்பு.

பின் நவீனத்துவம், கேள்விகளுக்குள் மெய்மை என அழைக்கப்படுவதால், போலி நவீனத்துவம் மெய்மையை மறைமுகமாக, இப்போது நான் அதன் பிரதிகளுடன் பரிவர்த்தனை செய்வது போல வரையறை செய்கிறது. இவ்வாறாக, போலி நவீனத்துவம் எதைச் செய்தாலும் எதை உருவாக்கினாலும் அது நிதர்சனம் என ஆலோசனை தருகிறது. ஒரு போலி நவீனப் பிரதி சிக்கலற்ற வடிவத்தில் மெய்மையைத் தெளிவாகச் செழுமைப்படுத்தும்: கையடக்க ஒளிப்படக் கருவியுடன் docu-soap. (தனிப்பட்ட பிரக்ஞையை வெளிப்படுத்துவதன் வாயிலாக, பங்கு கொள்ளுதலின் மாயையைப் பார்வையாளர்களுக்குத் தரும்); The Office and The Blair Witch Project,  வக்கிரத்தனமான பரிவர்த்தனை மற்றும் reality TV; Michael Moore அல்லது Morgan Spurlock-ன் கட்டுரைத்தனமான திரைப்படம்.

 மெய்மையின் இந்தப் புதிய கோணத்துடன் அதிகாரத்துவ அறிவார்த்த அமைப்பு மாறுதலடைந்தது தெளிவாகிறது. பின்நவீனத்துவக் கலாச்சார உற்பத்திகள் அதே போன்ற சரித்திரப்படுத்தும் நிலைக்கு நவீனத்துவம் மற்றும் சிருங்காரவியல் போல அனுப்பீடு செய்யப்படுகையில் அதன் அதிகாரத்துவப் போக்குகள் (பெண்ணியம், பின்காலனித்துவம், மற்றும் பல) புதிய தத்துவார்த்த சூழலுக்குள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றன. கல்விச்சாலைகள், குறிப்பாக பிரிட்டனில், கருத்தியல்களின் பன்முகத்தன்மை, உலகப் பார்வைகள் மற்றும் குரல்கள் போன்றவற்றைக் கேட்க முடிகிற மாணவர்கள் தங்கி வாழும் ஒரு பின் நவீனத்துவ உலகில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குச் சொல்வதற்கான ஆழ்ந்த உண்மை போலத் தோன்றும் சந்தைப் பொருளாதார ஊகங்களாலும் நடைமுறைகளாலும் அலைக்கழிக்கப் படுகின்றன. அவர்களது ஒவ்வொரு அடியும் சந்தைப் பொருளாதாரத்தால் வேட்டையாடப் படுகிறது. கல்வியாளர்களின் வாழ்வு நுகர்வு வெறியார்வத்திற்கு நடைமுறையில் தரப்படும் விலையால் ஆட்சி செலுத்தப்படும் போது கல்வியாளர்கள் பன்முகத் தன்மையை வேத வியாக்கியானம் செய்யமுடியாது. இந்த உலகம் கடந்த 10 வருடங்களில் அறிவார்த்தமாக விசாலமாக்குவதற்குப் பதிலாகக் குறுகலாக்கப்படுகிறது. லியோடர்ட் Grand Narratives மறைந்து போனதைக் கண்ட இடத்தில் போலி நவீனத்துவம் அனைத்து சமூகச் செயல்பாடுகளின் முழு ஆதிக்கம் வாய்ந்த, அனைத்தையும் விழுங்கிய, அனைத்தையும் தெளிவாக்கிய, அனைத்தையும் கட்டமைத்த, ஒவ்வொரு கல்வியாளரும் கருத்துவேறுபாட்டுடன் ஒப்புக் கொள்வதைப் போல, தன்னிச்சையான அதிக சக்தியான ஒழுங்கு படுத்தலின் மட்டத்திற்கு உயர்ந்த உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் கருத்தியலைக் காண்கிறது. போலி நவீனத்துவம் உண்மையில் நுகர்வு தன்மை கொண்டது மேலும் ஒத்துப் போவது, கொடுப்பது போல, விற்பது போல, உலகை வலம் வரும் ஒன்றுதான்.

 இரண்டாவதாக, பின் நவீனத்துவம் தெரிந்து கொள்ளுதலுக்கும் விளையாட்டுத்தனத்திற்கு அறிவை, வரலாற்றை மற்றும் எதிர் நிலை உணர்வுகளை நோக்கிய அவற்றின் மறைமுகக் குறிப்புகளுடன் வஞ்சப் புகழ்ச்சிக்குச் சார்பானது. போலி நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க அறிவார்த்த நிலைப்பாடு அறியாமையும் வெறியார்வமும் ஏக்கமும் நிறைந்தது. புஷ், ப்ளேர், பின் லேடன், லீ பென் மற்றும் இவர்களைப் போல் உள்ளவர்கள் ஒரு புறம், அதிக எண்ணிக்கையிலான ஆனால் சக்தி குறைந்த பெரும் திரளான மக்கள் மற்றொரு புறம். போலி நவீனத்துவம் மத வெறிபிடித்த ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளுக்கும் மிகப் பெரும் மதச்சார்பற்ற ஆனால் வரையறை ரீதியான இஸ்ரேலுக்கும் புவிமுழுவதும் பரவியுள்ள முஸ்லிம்களின் வெறியார்வம் கொண்ட இணைப்பகுதிகளுக்கும் இடையே நடக்கும் நேருக்கு நேரான யுத்தத்தால் ஊடுருவப்பட்ட ஒரு உலகைச் சார்ந்தது. போலி நவீனத்துவம் 11 செம்படம்பர் 2001-இல் பிறந்தது அல்ல, ஆனால் பின் நவீனத்துவம் அந்த உடைபாடுகளுள் புதைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழல் போலி நவீனத்துவம் ஆச்சரியப்படும் வகையில் இடைக்கால காட்டுமிராண்டித்தனத்தைப் பின் தொடர்தலை நோக்கிய சொகுசான தொழில் நுட்பத்திற்குச் சாட்டையடி தருகிறது. தலையை வெட்டும் காட்சிகளின் ஒளிப்படங்களை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்தல் போல, அல்லது சிறைச்சாலையில் நடக்கும் சித்திரவதைகளை படம்பிடிக்கும் செல்பேசியின் பயன்பாடு போல. இதற்கு அப்பால் மற்ற ஒவ்வொருவரின் விதி என்பது திடீர்த் தாக்குதலின் வேதனையைப் பாதிப்பது தான். ஆனால் இந்தப் பேரிழப்பை உண்டு பண்ணுகிற வேதனை சமகால வாழ்வின் ஒவ்வொரு கூறுகளுக்குள்ளும் புவியியல்-அரசியல் எல்லைகளுக்கு அப்பாலும் வெகு தொலைவு வியாபிக்கிறது. சமூகச் சீர்கேட்டின் அடையாள இழப்பின் பொதுவான அச்சத்திலிருந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆழமான பதற்றம் வரை, தட்ப வெப்பநிலை மாற்றங்களின் பேரழிவு குறித்த வலியிலிருந்து ஒரு புதிய தனித்துவ மடத்தனத்தின் மற்றும் ஆதரவற்ற நிலையின் விளைவுகள் வரை. வீட்டை எவ்வாறு சுத்தம் செய்வது, குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது, அல்லது கறைகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் மூலம் உற்பத்தியாகின்றன. இந்தத் தொழில் நுட்ப முறைப்படுத்திய ஆதாரமற்ற நிலை முற்றிலும் தற்காலத்தைச் சார்ந்தது. போலி நவீனத்துவவாதி தொடர்ந்து இந்தக் கிரகத்தின் மறு பக்கத்திற்குத் தகவல் அனுப்புகிறான். எனினும் இன்னமும் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காய்கறிகளை உண்ணச் சொல்லித் தரவேண்டியுள்ளது. இந்த வெண்கல யுகத்தில் இது ஒரு சுய ஆதாரம் கொண்ட உண்மை நிலை. அவனோ அல்லது அவளோ தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் திசையை நெறியாள்கை செய்யமுடியும். ஆனால் உண்பதற்கு எவ்வாறு தங்களைத் தயார் படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு குழந்தைமையின் மற்றும் முதிர்ச்சியின் மேலும் சக்திவாய்ந்ததும் ஆதரவற்றதுமான சிறப்பியல்பு கொண்ட உருக்கிய பிழம்பு. பல்வேறு காரணங்களுக்காக லியேடார்ட் பின் நவீனத்துவவாதிகளைக் குறிப்பிட்டு விவாதித்த தகுதியற்ற மக்கள் இவர்கள்.

 பயமுறுத்துவதாகவும் கட்டுப்பாடாகவும் தோன்றும் இந்தப் போலி நவீன உலகம் பொம்மைகளுடன் விளையாடும் குழந்தையின் இயல்புக்குத் திரும்பத் தவிர்க்க முடியாமல் ஆசை ஊட்டுகிறது. அது மேலும் போலி நவீனக் கலாச்சார உலகைச் சிறப்பிக்கிறது. இங்கே கிண்டலின் அதீதப் பிரக்ஞையை அடிப்படையிலேயே ஒதுக்கும் குறிப்பிடத்தக்க கிளர்ச்சி நிலை என்பது மெய்மறந்த நிலை- உங்கள் செயல்பாடுகளால் விழுங்கப்பட்டிருக்கும் நிலை. யாவற்றிலும் இலக்கியம், கலாச்சார உற்பத்தியுடனான அவன்-அவள் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தும், நிர்வகிக்கும், இயக்கும், தயாரிக்கும் ஈடுபாட்டின் மறுக்கமுடியாத அறிவை (அல்லது மாயையை) இலக்கியம் முன் வைக்கிறது, வழங்குகிறது. இன்டர்நெட் பக்கங்கள் யார் எழுதியது அல்லது யார் கவனிப்பது என எல்லோருக்கும் தெரியும் எனும் அர்த்தத்தில் படைப்பவன் இல்லாதது. பெரும்பாலோர்க்கு அவற்றைத் தயாரிக்க ஒருவர் தேவைப்படுகிறது, Streetmap Route Planner அல்லது அவற்றுடன் இணைப்பதற்கு அவனையோ அவளையோ அனுமதிக்க வேண்டியுள்ளது, விக்கிபீடியா போல உதாரணத்திற்கு ஊடக வலைத்தளங்கள். அனைத்துச் சூழ்நிலைகளிலும் இன்டர்நெட்டுக்கு நீங்களே எளிதாகப் பக்கங்களை உருவாக்குவது இயல்பானது. (eg. Blogs)

 இன்டர்நெட்டும் அதன் உபயோகமும் போலி நவீனத்வத்தை வரையறை செய்தாலோ ஆதிக்கம் செய்தாலோ இந்தப் புதிய யுகம் அதன் எல்லைக்குள் பழைய வடிவங்களின் மேற்பரப்பையும் காண்கிறது. இந்தப் போலி நவீன காலத்தில் திரைப்படம் ஒரு கணினி விளையாட்டைப் போல மேலும் அதிகமானவற்றைக் காண்கிறது. யதார்த்த உலகிலிருந்து வந்த அதன் படிமங்கள் - பார்வையாளர்களின் எண்ணங்களையோ அல்லது உணர்வுகளையோ வழி நடத்துவதற்குத் திறமை வாய்ந்த இயக்குநர்களால் சட்டகம் இடுகிறது, வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, சப்தத்திற்குப் பாதை அமைக்கிறது, மேலும் படத்தொகுப்பை ஒழுங்கு படுத்துகிறது - இப்போது கணினி வாயிலாக அதிகமாக உருவாக்கப் படுகின்றன. அவை அதை உற்றுக் கவனிக்கின்றன. சாத்தியமற்றதை நம்பத் தகுந்ததாகத் தோன்றச் செய்யும் சிறப்பு விளைவுகளில் CGI  அடிக்கடி (கவனக் குறைவுடன்) சாத்தியமானதை செயற்கைத்தனமானதாகத் தோற்றம் கொள்ள வைக்க விழைகிறது - Lord of the Rings or Gladiator-ல் அதிகமாக உபயோகப்படுத்தியிருப்பது போல. ஆயிரக்கணக்கானோர் பங்கு பெரும் யுத்தம் யதார்த்தமாக நிகழ்கிறது. போலி நவீனத் திரைப்படம் அவை தகவல் தொழில் நுட்ப வெளியில் நிகழ்ந்தது போல அவற்றைக் காணச் செய்கிறது. ஆகவே திரைப்படம் அதன் படிமங்களின் பிரம்மா போல கணினிக்கு மட்டுமல்ல, பார்வையாளருடனான அதன் உறவின் மாதிரி போல கணினி விளையாட்டுக்கும் கூட கலாச்சார அடித்தளத்தை வழங்குகிறது.

 அதேபோல இந்தப் போலி நவீன காலத்தில் தொலைக்காட்சி யதார்த்த டிவிக்கு மட்டுமல்ல (இன்னும் மற்றொரு புரிந்து கொள்ள முடியாத பதம்) வியாபார அலைவரிசைக்கும் சாதகமாக உள்ளது. ரொக்கப் பரிசை வெல்லும் நம்பிக்கையில் பார்வையாளர் புதிருக்கான பதிலை ஊகிக்க அழைக்கும் கேள்வி-பதில் பகுதிக்கும் சலுகை அளிக்கிறது. அது Ceefax  மற்றும்  Teletext போல அரிய நிகழ்வுகளுக்கும் கூடச் சாதகமாக உள்ளது. ஆனால் இந்தப் புதிய சூழலை எண்ணிப் புலம்புவதைக் காட்டிலும் தற்போது ஆதாரமாக உள்ள Vacuity-க்குப் பதிலாக இந்தப் புதிய நிலைமைகளைக் கலாச்சாரச் சாதனைகளுக்காக வாய்க்காலாக உருவாக்கும் வழிகளைக் கண்டடைவது உபயோகமானதாக இருக்கும். வடிவம் மாற்றம் அடையும் போது (Big Brother கொடியில் உலர்ந்து போகும்) தொலைக்காட்சித் திரையுடன் தொடர்பு கொள்ளும் வரையறைகளையும் அதன் தொடர்ச்சியாக மறுக்க முடியாமல் அடையும் ஒளிபரப்பாளர் காட்சியின் வரையறைகளையும் காண்பது இங்கு முக்கியம். தெள்ளத் தெளிவாகத் தொலைக்காட்சியின் கண்ணைக் கவரும் செயல்முறை அனைத்துக் கலைகளுடன் உள்ளது போல விளிம்பு நிலையாக மாறுகிறது. இன்று ஒரு முறை விருது பெறுபவர் என அழைக்கப்பட்ட தனிப்பட்டவரின் நிகழ்ச்சிகள் நிறைந்த, சுறுசுறுப்பான, வேலைப்பாடு தான் மையமாக உள்ளது. யாவற்றிலும் பார்வையாளர் சக்தி வாய்ந்ததாகவும் உண்மையில் தேவையானதாகவும் உணரப்படுகிறது. படைப்பாளர் மரபார்த்தமாகப் புரிந்து கொண்டது போல மற்றவர்களால் ஆளப்படும் காரணிகளை நிலைப்படுத்துபவரின் நிலைக்குத் தள்ளப் படுகிறார் அல்லது எளிதாகப் பொருத்தமற்றவராக, வெளித் தெரியாதவராக, ஓரங்கட்டப்படுபவராக மாறி விடுகிறார். விரைவில் அழிந்து விடக்கூடிய தன்மை கொண்டதாகவும் நிலையற்ற தன்மை கொண்டதாகவும் பிரதி குறிப்பிடப்படுகிறது. அதன் உள்ளடக்கத்தால் இல்லையெனினும் அதன் தொடர் வரிசை மூலம் பிரதி பார்வையாளரால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் Middlemarch நூலை 118-ம் பக்கத்திலிருந்து 316 வரையோ அல்லது 401 வரையோ அல்லது 501 வரையோ வாசிக்க முடியாது. ஆனால் Ceefax- அவ்வகையில் நன்றாகச் சரியாக வாசிக்க முடியும்.

 ஒரு போலி நவீனப் பிரதி விதிவிலக்காகக் குறுகிய காலமே நீடிக்கும். உதாரணத்திற்கு Fawlty Towers போல இல்லாமல் reality TV நிகழ்ச்சிகள் அவற்றின் மூல வடிவத்துடன் திரும்பத் திரும்ப ஒளி பரப்பப்படுவதில்லை- தொலைப்பேசி அழைப்புகள் திரும்பத் தயாரிக்கப்பட முடியாததால். தொலைப்பேசி அழைப்புகளின் சாத்தியமில்லாமல் அவை வேறுபாடு மிக்கதாக மாறி விடுகின்றன. குறைந்த அளவே கவரக் கூடிய நிதர்சனமாக மாறி விடுகின்றன. Ceefax பிரதி சில மணித்துளிகளுக்குப் பிறகு அழிந்து போகிறது. ஒரு இன்டர்நெட் பக்கத்தை மேற்கோள் காட்டிய தினத்தைப் படித்தவர்களால் தர முடியும் என்றால் அங்கு பக்கங்கள் காணாமல் போய் விடுகின்றன அல்லது அடிப்படையிலேயே விரைவாகத் திரும்ப எறியப்படுகின்றன. பிரதித் தகவல்கள் மற்றும் இமெயில்களை அவற்றின் மூல வடிவத்துடன் வைத்திருப்பது மிகக் கடினம். இமெயில்களின் அச்சு வடிவம் அதன் சாராம்சமான எலெக்ட்ரானிக் நிலையை அழித்து விட்டு வெகு நிலையானதாக மாற்றுகிறது- ஒரு கடிதம் போல. வானொலித் தொலைப்பேசி அழைப்புகளின் கணினி விளையாட்டுகளின் Shelf-life மிகக் குறுகியது, அவை விரைவில் காலாவதியாகி விடுவன. இக்கூறுகளை ஆதாரமாகக் கொண்ட கலாச்சாரம் நினைவாற்றல் இல்லாதது - நிச்சயமாக நவீனத்துவத்தையும் பின்நவீனத்துவத்தையும் தெரியப்படுத்திய முந்தையக் கலாச்சார மரபுரிமையின் தாங்க முடியாத அறிவு அல்ல. திரும்ப உருவாக்க முடியாததும் அழிந்து விடக் கூடியதுமான போலி நவீனத்துவம் ஞாபக மறதி கொண்டது: இவைதான் இப்போதைய கணத்தில் முற்காலம் அல்லது எதிர்காலம் குறித்த பிரக்ஞையற்ற கலாச்சாரச் செயல்பாடுகள்.

 நான் குறிப்பிட்டது போல, போலி நவீனத்துவக் கலாச்சார உருவாக்கங்களும் விதிவிலக்காக மூலத்தன்மையை இழந்தவை. போலி நவீனத் திரைப்படத்தின் உட்பொருள் உருவாக்கக் கூடியதும் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதுமான நடிப்பாக இருக்க மட்டுமே விழைகிறது. தற்காலத் திரைப்படத் தொழில் நுட்ப விளைவுகளின் சொகுசுத்தன்மைக்கு முரண்பாடாக இந்த எழுத்தின் அற்பமான காட்டுமிராண்டித்தனம் நிர்வாணமாக நிற்கிறது. அனைத்து வகைக் கல்வி நிலைகளிலும் உள்ளவர்கள் எழுத்துக்களைக் கையாளுவதுடன் ஒப்பிடும் பொழுது அதிகப்படியான பிரதித் தகவல் அனுப்புதலும் இமெயில் செய்வதும் சலிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. பொதுவானதும் ஆழமின்மையும் எல்லாவற்றையும் ஆள்கின்றன. போலி நவீன யுகம் இதுவரை ஒரு கலாச்சாரப் பாலைவனமாகத்தான் உள்ளது. அர்த்தப்பூர்வமான கலைத்தன்மை வாய்ந்த வெளிப்பாட்டிற்காகப் பொருத்தமாக நாம் மாற்றி அமைக்கின்ற புதிய பதங்களைப் பயன்படுத்தியபடியே நாம் வளர்ந்த போதும் (நான் போலி நவீனத்துவத்திற்கு வழங்கிய Pejorative முத்திரை பொருத்தப்பாடற்றதாக மாறிய போதும்) இப்போதைக்கு இறுதியானதும் திரும்ப உருவாக்கக்கூடியதுமான கலாச்சார மதிப்பின் ஏறக்குறைய வெறுமையை உருவாக்குகிற மானுடச் செயல்பாடுகளின் திடீர் தாக்குதலுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளோம் - மனித வாழ்வு இன்னும் 50 வருடங்களில் அல்லது 200 வருடங்களில் திரும்பவும் காண விழைகிறதும் போற்றக்கூடியதுமான கலாச்சார மதிப்பு.

 போலி நவீனத்துவத்தின் வேர்களைப் பின்நவீனத்துவம் ஆதிக்கம் செலுத்திய வருடங்களை உற்று நோக்குவதன் வாயிலாகக் கண்டுணர முடியும். நாட்டிய இசை மற்றும் தொழில் வக்கிரம் போன்றவை, உதாரணத்திற்கு 70களிலும் 80களிலும் உருவாக்கப்பட்டவை, நிலையில்லாமை நோக்கிச் செல்கிறது, குறிப்பிடத் தகுந்த மட்டத்தின் மீதான வெற்றிடம் நோக்கிச் செல்கிறது, படைப்பாளர் இல்லாத நிலை நோக்கிச் செல்கிறது. (பாப் அல்லது ராக் இசையை விட நடனம் அவ்வாறானது). அவை உபசரிப்பின் செயல்பாடுகளை முன்னிறுத்துகின்றன: ஈடுபாடற்ற போலி நவீனப் பொய்மையைப் படைக்கும் வழிகளில் நாட்டிய இசை நடனத்திற்காக உள்ளது, வக்கிரம் படிப்பதற்கோ பார்ப்பதற்கோ அல்ல, உபயோகப்படுத்த உள்ளது. இசையில் கலைஞர் ஆதிக்கம் நிறைந்த இசைத் தொகுப்பின் போலி நவீன மாற்றீடு என்பது iPod-ல் தனித்தனி வரிசைகளில் பதிவிறக்கம் செய்து கலந்து பொருத்திய, கவனிப்போரால் தேர்வு செய்யப்பட்ட ஒற்றைப் பரிமாணப் பிரதி போல நிச்சயமாக ஒரு தலைமுறைக்கு முன்பே இசை ரசிகரின் தொகுப்பு நாடாக்களின் ஆக்கத்தால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் ஒரு இடம் பெயர்தல் நிகழ்ந்தது. அதில் ரசிகரின் விளிம்பு நிலையாக இருந்த பொழுது போக்கு இசைத் தொகுப்பின் கருத்தை வழங்கியபடி இசையை நுகரும் அதிகாரமாக இறுதியான வாழிடமாக மாறியது - கலையின் தெளிவான வேலைப்பாடு என, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளின் தொகுதி என, பயனற்றது என.

  ஒரு வியாபகத்திற்குப் போலி-நவீனத்துவம் ஏற்கனவே தோன்றிய கலாச்சார மையத்தை நோக்கி தொழில்நுட்பரீதியாகத் தூண்டப்பட்ட இடம் பெயர்தலை விட அதிகமாக வேறொன்றுமில்லை. (அதேபோல புனைகதை எப்பொழுதும் இருப்பது, ஆனால் பின்நவீனத்துவம் போல மாய வித்தை செய்யாதது). தொலைக்காட்சி எப்பொழுதும் நாடகம் மற்றும் நிகழ்த்து கலைகள் முன்னர் செய்தது போலப் பார்வையாளர்களின் பங்களிப்பைப் பயன்படுத்தியது; ஒரு விருப்பமாக, கட்டாயமாக அல்ல: போலி-நவீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவற்றுள் கட்டமைக்கப்பட்ட பங்களிப்பை தன்வசம் வைத்திருக்கிறது. அங்கே நவீனத்துவத்தின் பதற்றமான கேளிக்கைப் பகுதியிலிருந்தும் பின்நவீனத்துவத்தின் வலி இழப்பிலிருந்தும் வந்த நீண்ட சுறுசுறுப்பான கலாச்சார வடிவங்கள் இருக்கின்றன, போலி-நவீனத்துவம் அமைதியான கற்பனைக் காய்ச்சலின் எங்குமில்லாத ஒரு புதிய இலகுவை உருவாக்குவதன் வாயிலாக உலகைப் புரட்டுகிறது. நீங்கள் கிளிக் செய்கிறீர்கள், பொத்தான்களைத் தட்டுகிறீர்கள், நீங்கள் ஈடுபடுகிறீர்கள், மூழ்கடிக்கப்படுகிறீர்கள், முடிவு செய்கிறீர்கள். நீங்கள் தான் பிரதி, அங்கு வேறு யாருமில்லை, படைப்பாளர் இல்லை; அங்கு எங்கும் இல்லை, காலம் அல்லது வெளி எதுவுமில்லை. உங்களுக்கு எல்லை இல்லை: நீங்கள் தான் பிரதி: பிரதி ஒதுக்கப்படுகிறது.

•••

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக