வெள்ளி, 28 மே, 2021

பின்-நவீனத்துவக் கறுப்பினம் - பெல் ஹூக்ஸ்

 


வடிவம் குறித்து ஆராயும்சாராம்சவியலுக்குஎதிரான விவாதம், வறண்ட மற்றும் அதீதமான அரூப நிலைக் கற்பனாவாதம் போலவே, புதியவர்களைப் பின்-நவீனத்துவச் சிந்தனைப் போக்கின் பக்கம் இழுக்கிறது. ஆனால், ஸ்திரத்தன்மைமிக்க, குறிப்பாக, உயிரோட்டமுள்ள இருத்தலைப் போல தோற்றமளிப்பதற்கும் மேலாக, மாபெரும் அத்தியாவசிய மதிப்பீடுகளின் பயன்பாட்டுக்குரிய முன்மாதிரிகளைப் போல - அதாவது கறுப்பினம் போல - தொடர்ந்து போராட வேண்டியுள்ள சிறுபான்மையினருக்கான உறுதி வாய்ந்த அவசர நிலையை முன் வைக்கிறது அவ்விவாதம்.

பின்-நவீனத்துவக் கோட்பாட்டின் நன்கு தகுதி வாய்ந்த விமர்சன வித்தையை பெல் ஹூக்ஸ் நம்முன் விவரிக்கிறார். அந்தப் பின்-நவீனத்துவம் வசதி மிக்க வெள்ளையின அறிவுவாதிகளால், முதன்மையாக அவர்களுக்காக, அவர்களைப் பற்றி மட்டுமே பேசியது.  பெல் ஹூக்ஸ் ஒரு மாற்றீடை வலியுறுத்துகிறார். பிரபலமான கலாச்சாரத்தில் புதிய கருத்துருவாக்கத்துடன் கூடிய தீவிர உணர்ச்சிமிக்கச் செயல்பாட்டை - கறுப்பு நிறம் குறித்த அடுத்தவரின் உச்சரிப்பின் பொருளாக மாறி நிற்கும் கறுப்பின மனிதர்களின் அவலம் மட்டுமின்றி, ஒரு பின்-நவீனத்துவச் சமூகத்தை உருவாக்குவதில் அபரிமிதமான பங்களிப்பைச் செய்து வரும் கறுப்பின மனிதர்களின் தீவிர உணர்ச்சிமிக்க செயல்பாட்டை பெல் ஹூக்ஸ் முன் வைக்கிறார்.

*** 

பின்-நவீனத்துவச் சொல்லாடல்கள், எதிர் நிலை அரசியல் கருத்துருவை, நேர்மையை, அருகாமையை வழங்குவதற்காகவேறானதுகள் மற்றும் மற்றதுகளின்அனுபவத்தின் பால் கவனத்தை ஈர்ப்பது போல பொருத்தமானதாக இருப்பினும் ஸ்திரமான பொருத்தப்பாட்டின் போதாமைக்காகப் பழி சுமத்தப்படும் பொழுது அவை அடிக்கடி பிரத்யேகமானவையாகவேக் கருதப்படுகின்றன. வெகு சில ஆப்பிரிக்க-அமெரிக்க அறிவுவாதிகளே பின்-நவீனத்துவம் குறித்துப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள். ஒரு இரவு விருந்தில் நான், சமகால கறுப்பின அனுபவத்திற்காகப் பின்-நவீனத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலை நிறுத்துவது தொடர்பாக வெகு பிரயத்தனப்பட்டு எனது உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அது ஒரு சமூகப் பிரக்ஞைக் கூட்டம். அங்கே என்னைத் தவிர மேலும் ஒரே ஒரு கறுப்பின மனிதர் மட்டுமே வந்திருந்தார். அந்தச் சூழல் விரைவில் உணர்ச்சி மிக்க விவாதக் களமாக மாறி விட்டது. நான் எனது பொழுதை வீணடிப்பதாக மற்ற கறுப்பின மனிதர் என்னிடம் கூறினார். அந்த விவாதத்தின் மூலப் பொருள் எந்த வகையிலும் கறுப்பின மக்களிடையே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குத் துளியும் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத ஒன்றாக இருப்பதையும் அந்தக் கறுப்பின மனிதர் சுட்டிக் காட்டினார். அந்த வெள்ளையினப் பார்வையாளர்கள் மத்தியில் நான் பேசுவதையே அவர்கள் உற்று வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள் - அந்த நேரடி மோதல் அவர்களுக்குப் பயன் தரத்தக்கதாக இருந்த போதிலும். நாங்கள் கறுப்பின அனுபவம் பற்றிய தீவிர உணர்ச்சி மிக்க அந்தக் கலந்துரையாடலில் ஒன்றிப் போயிருந்தோம். அரூபச் சிந்தனைக்கும் திறனாய்வுக் கோட்பாடுகளின் ஆதிக்கத்திற்கும் எதிராக உள்ளது போலவோ அல்லது தன்னிச்சையாக அரூபச் சிந்தனைக்கும் திறனாய்வுக் கோட்பாடுகளின் ஆக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போலவோ உருவாக்கப்படும் ஸ்திரமான, குப்பை கலந்த அனுபவத்துடன் முழுவதுமாகக் கறுப்பினத்திற்குத் தொடர்பு ஏற்படுத்தப்படும் பொழுது இனவாதம் நிலை பேறுடையதாகி விடும் எனும் எனது கதறல் குறித்துத் தெளிவாக யாரும் பச்சாதாபப்பட முடியாது. அழகியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய கறுப்பின அனுபவத்திற்கும் திறனாய்வுச் சிந்தனைக்கும் எவ்வித அர்த்தச் செறிவுமிக்க தொடர்பும் இல்லாத கருத்துருவாக்கத்தைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்த வேண்டும்.

பின்-நவீனத்துவம் மற்றும் கறுப்பின மக்கள் மீதான பின்-நவீனத்துவப் பொருத்தப்பாடுகளுக்கு நான் அளிக்கும் பாதுகாப்பு நேர்மையானது. எனினும் நான் அஞ்சுகிறேன். பெருத்த எச்சரிக்கையுணர்வுடனும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலும் நான் உட்பொருளை அணுகுவது எனக்கு நம்பிக்கையின்மையை ஊட்டுவதால் நான் அச்சமடைகிறேன்.

பின்-நவீனத்துவச் சொற்பொருளால் வெகுவாகக் கலவரமடையவில்லை யெனினும் மரபார்த்த மொழியாக உச்சரிக்கப்படுகையில் அது குறித்து எழுதும் பொழுதும், பேசும் பொழுதும், யாரேனும் அந்த மொழியில் உரையாடும் பொழுதும் நான் அச்சமயத்தில் அந்தக் கவனத்திற்குரிய சொல்லாடலுக்குச் சற்று அந்நியமாக உணர்கிறேன். ஒரு மேலோட்டமான செயல்பாடாக, பொதுவான குறியீடுகளுடன் பேசும் வெள்ளையின ஆண் அறிவுவாதிகள் மற்றும்/அல்லது பயிற்சிக் குழு சார்ந்த அறிஞர்களின் குரல்களே தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பின்-நவீனத்துவச் சாரத்தை அதன் பன்முக வெளிப்பாடுகளில் புரிதலுக்குட்படுத்த அவர்களின் எழுத்துக்களைப் படிப்பதையும் ஆய்வு செய்வதையும் நான் போற்றுகிறேன். எனினும் இன்றைய இயக்கத்தில், பயிற்சிக் குழுப் படிநிலை மற்றும் சிறப்பியல்புகளின் ஊடுருவலுடன் எனது அந்யோந்யத்தை நிலைப்படுத்திக் கொள்ளும் பொழுது சற்று சாய்வான மனப்பாங்கையே உணர்கிறேன்.

பின்-நவீனத்துவப் போக்கின் மீதான எழுத்துக்களின் சிக்கலான தன்மையால், இந்த எழுத்துக்களில் அடிக்கடி சுட்டப்படும் வேறானதுகள் மற்றும் மற்றதுகளின் மீதான குவிமையம், இயற்கையான போக்கையும் பின்-நவீனத்துவவாதிகளின் கோட்பாடுகளின் திசைகளையும் மாறுதலுக்குட்படுத்தக் கூடிய ஒரு பகுப்பாய்வாக அல்லது ஒரு பார்வைக் கோணமாக சற்று ஸ்திரமான தாக்கத்தை ஏற்படுத்துவது போலத் தோன்றும் வழிகளில் கூடுமான வரை நான் கவனமுடன் இருக்கிறேன். இது போன்ற பெரும்பாலான கோட்பாடுகள் அதீத நவீனத்துவத்திற்கு எதிர் வினையாகவோ அல்லது எதிரானதாகவோ கட்டமைக்கப்படுவதால், கறுப்பின மக்களின், குறிப்பாக கறுப்பினப் பெண்களின் கறுப்பின அனுபவம் அல்லது அவர்களுடைய எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடுவது அரிதாக உள்ளது. (கார்னெல் வெஸ்ட் அவர்களின் - இவர் ஒரு கறுப்பின ஆண் சிந்தனையாளர், பின்-நவீனத்துவச் சொல்லாடலில் தீவிர கவனம் செலுத்தி வருபவர் - சமீபத்திய எழுத்துக்களில் இக்குறிப்புகளைக் காணலாம்.) பின்-நவீனத்துவ எழுத்தின் பாடுபொருளாகக் கறுப்பினக் கலாச்சாரத்தின் கோணம் இருப்பினும் உதாரணத்திற்கென மேற்கோளாகக் குறிப்பிடப்படும் எழுத்தும் கறுப்பின மனிதர்களின் எழுத்தாகத்தான் இருக்கும். பின்-நவீனத்துவ எழுத்திலும் கலாச்சாரத்திலும் வித்தக நோக்கிலும் காணப்படும் சிக்கல் மிகுந்த கறுப்பின இருத்தலை அடையாளம் காண்பதில் அடைந்த சறுக்கல், ஒரு கறுப்பின வாசகரை, குறிப்பாக ஒரு கறுப்பினப் பெண் வாசகரைப் பாடுபொருள் மீதான அவருடைய ஆர்வத்தை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுக்க பலவந்தப் படுத்தியது. கறுப்பினப் பெண்ணின் இருத்தல் பற்றித் தெரிந்து கொள்ளாதது போலத் தோன்றுகிற பாடுபொருள்-அல்லது நாங்கள் சில நேரங்களில் எழுதிய, பேசிய, கவனத்தில் கொள்ள வேண்டியவை அல்லது அறிவார்த்த சிரத்தையுடன் பார்த்து, கேட்டு, அணுகிய எங்கள் கலை உருவாக்கம் குறித்த சாத்தியப்பாடுகளைப் பரிசீலிக்காதது போலத் தோன்றுகிற பாடுபொருள் குறித்து அந்த வாசகர்கள் விவாதிக்கின்றனர், எழுதி வருகின்றனர். இது ஒரு சிறப்பம்சம்மிக்க படைப்புகளுடன் கூடிய செயல்பாடு. முன் நோக்கிச் செல்லக் கூடிய போக்கு. அதில் பின் நவீனத்துவச் சொல்லாடல், கோட்பாட்டு ரீதியான வெளியைத் திறந்து விட்டுள்ளது. அங்கே நேர்மையான பின் தொடர்ச்சியெனவேறானதுகள் மற்றும் மற்றதுகள்குறித்துப் பரிசீலிக்க முடியும். நிறையப் பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மறுஉருவாக்கம் செய்த கறுப்பினப் பெண்களின் இருத்தல் தொடர்பான அடையாளமின்மைக்கும், பின்-நவீனத்துவத்திற்கும் கறுப்பின அனுபவ அறிவுக்குமிடையே உள்ள நிதர்சனமான உறவு பற்றிக் கேட்பதற்காக உருவான அதிகக் கறுப்பினக் கிராமிய இசை வடிவங்களின் ஒரு பகுதி மீதான எதிர்ப்புக்கும் இடையே உள்ள முரண்பாடுகளுடன் நான் ஒரு சொல்லாடலில், ஒரு நடைமுறைக்குள் நுழைகிறேன். அங்கே எனது வார்த்தைகளை உள்வாங்க முன்னேற்பாடுகளுடன் கூடிய எந்தப் பார்வையாளரும் இல்லாமல் இருக்கலாம். தெளிவாகக் காது கொடுத்துக் கேட்போரும் இல்லாமல் இருக்கலாம். எனினும் தெளிவான நம்பிக்கையின் குரலைக் கேட்க முடியும்.

அறுபதுகளில், நவீனத்துவம் என எளிதாக இனம் காணப்பட்ட நவீனத்துவப் போக்கின் தோற்றம், ஆளுமைமிக்க கறுப்பின இயக்கத்தில் வியாபித்திருந்தது. நிச்சலனமில்லாமல் நிறைய வழிகளில் கறுப்பின இசை, நவீனத்துவவாதிகளின் உலகமயமாக்கல் செயல்பாடுகளைப் பின்பற்றும் அடையாளங்களின் விளைவுகளை எடுத்துரைத்தது. கறுப்பின ராணுவத்தினரிடையே ஒரு முதிர்ந்த விவரணையாக மிகச் சிறிய அளவில் படிநிலை விமர்சனம் இருந்து வந்தது. கறுப்பினச் சக்தியின் கருத்தியல்வாதம் ஒரு நவீனத்துவ உணர்வைப் பிரதிபலிக்கும் நிதர்சனங்களாக இருப்பினும் இந்த அடிப்படையான கூறுகள் விரைவில் பொருத்தப்பாடற்றவையாக மாறிவிட்டன, ஒரு சக்தி வாய்ந்த அடக்கியாளும் திறன் மிக்க பின் நவீனத்துவ நிலைமையால் ஒடுக்கப்பட்ட இராணுவ எதிர்ப்பைப் போல. கறுப்பின இயக்கத்தின் பிறகான கால கட்டம்கறுப்பு அமெரிக்காவுக்கு என்ன நேர்ந்தது?” எனும் செருக்கு மிக்க தலைப்புகளைத் தாங்கிய கட்டுரைகளை செய்தித் தாள்கள் வெளியிட்ட காலமாக இருந்தது. இந்த எதிர்வினை, தீவிரத்தன்மை மிக்க பூர்த்தி செய்யப்படாத தேவைகளுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்படாத, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட கறுப்பினத்தவரின் கிண்டல் மிகுந்த எதிர்வினையாகத் தொனித்தது. அவர்கள் அந்தத் தருணத்திலாவது வெற்றிகரமாக ஒரு கவன ஈர்ப்பை வலியுறுத்தினார்கள். கறுப்பின விடுதலையின் பதிவுகளை தேசிய அரசியலின் நிகழ்ச்சி அட்டவணையில் இடம் பெறச் செய்வதைச் சாத்தியமாக்கினார்கள். கறுப்பின இயக்க எழுச்சியின் போது நிறையக் கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னும் நிறையக் குரல்கள் மௌனமாக்கப்பட்டன, நிராதரவான தனிமைக்கும் தள்ளப்பட்டன. கறுப்பின விடுதலைப் போராட்டத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் இனவெறி மற்றும் பிற ஆதிக்க அரசியல் நிர்மாணங்கள் குறித்து விவாதிக்கவும் புதிய வெளிகளைக் கண்டடைவது அத்யாவசியமாக உள்ளது. “வேறானதுகளின் அரசியல்என அதீதக் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட வேர்நிலை பின் நவீனத்துவச் செயல்பாடுகள், இடம் பெயர்க்கப்பட்ட, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் குரல்களை உள்வாங்கி ஒலிக்க வேண்டும். இது ஒரு வருத்தம் தோய்ந்த கேலியாகப் படுகிறது - அதாவது மற்றதுகளின் அடையாளத்தை அனுமதிக்கும் சிதிலங்களைப் பறைசாற்றுகிற மையம் தவிர்த்த உள்ளீடான பன்முகத் தன்மை குறித்து அதிகம் பேசுகிற சமகாலச் சொல்லாடல்கள், வெகு சிறப்பான விவரணைகளில் வேர் கொண்ட பொதுவான மொழியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தெளிவான கேட்போர் நிறைந்த கூட்டத்தில் முதன்மையாகச் சவால்களை நேசிக்கின்ற, அவற்றின் நெருக்கடி மிகுந்த குரலை இன்னமும் நெறிப்படுத்துகின்றன. பின்-நவீனத்துவவாதிகளின் சிந்தனைப் போக்கு உருமாற்றத் தன்மை பெற்றிருக்க வேண்டுமெனில் நுட்பமான அதிகாரத்துவமிக்க கருத்துருவாக்கத்தின் உடைப்புச் செயல்பாடு சுலபமாக ஒரு மொழியைக் கையாளும் கருவியைப் போல இருக்கக் கூடாது. அது இருத்தலின் நடத்தை முறைகளில் வெளிப்பட வேண்டும். எழுத்துக்களின் போக்குகளிலும் உட்பொருளைத் தெரிவு செய்வதிலும் வெளிப்பட வேண்டும். மூன்றாம் உலக நாட்டினர், வல்லுர்கள் மற்றும் வெள்ளையின விமர்சகர்கள் என முனைப்பற்று வெள்ளையின அதிகார வர்க்கச் சிந்தனைப் போக்கை உள் வாங்கும் இவர்கள், வழக்கமான தினசரி வாழ்வின் கூர்மையான பார்வைகளுடன் புலப்படாமல் மறைந்து வாழும் கறுப்பின மக்களை வீதிகளில், பணியிடங்களில் காணாத/ கவனியாத இவர்கள், இனவெறிக் கொடுமைக்குச் சவால் விடுக்கும் விடுதலைக் கோட்பாட்டை உருவாக்குவது போலத் தெரியவில்லை. அல்லது மெய்மை பற்றி சிந்திக்கும் மரபார்த்த வழிகளில், அழகியல் கோட்பாடு மற்றும் செயல்பாட்டைக் கட்டமைக்கும் வழிகளில் ஒரு  நொடிப்பை மேம்படுத்துவது போலவும் தெரியவில்லை.

வெள்ளையினர் அல்லாதமற்றவர்பற்றிப் போதுமான ஸ்திரத்தன்மையுள்ள அறிவு மற்றும் தொடர்பு இல்லாமல், வெள்ளையினக் கோட்பாட்டாளர்கள் தர்க்கத்திற்கு முரணான கருத்தாக்கங்களை, அடிப்டையான விடுதலை அறப் போராட்டத்திற்கு ஆதரவு தரும் திறனாய்வுச் செயல்பாட்டை அச்சுறுத்தும்/ தகர்க்கும் சாத்தியப்பாடுள்ள கருத்தாக்கங்களை முன் மொழியலாம்.

ஒத்தியல்புமீதான பின்-நவீனத்துவ விமர்சனம், புதுப்பிக்கப்பட்ட கறுப்பின விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தமானதாக இருந்தாலும் அடிக்கடி சிக்கல் நிரம்பிய வழிகளில் செல்ல நேர்கிறது. கறுப்பின உள்ளீடுகளின் வடிவாக்கத்திற்கு குறுக்கீடுகள் தேடும் வெள்ளையின அதிகாரத்தின் ஊடுருவும் சூழ்ச்சியால், நாம் வீறாப்பாக ஒத்தியல்பு அரசியல் மீதான அக்கறையை உதாசீனப்படுத்தி விட முடியாது. இன வேறுபாடுகள் மற்றும் இன ஆதிக்கத்திற்கு உள்ள பின்-நவீனத்துவத் தொடர்பைப் போல பின் நவீனத்துவ அடிப்படை உள்ளியல்புகளை ஆய்வு செய்யும் எந்த விமர்சகனும் ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கான அடையாளத்தின் மீதான விமர்சனத்தின் தொடர்பை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை எழுகிறது. நம்மில் நிறையப் பேர் போராடுகிறாம். எதிர்ப்புகளை முறியடிப்பதற்கான புதிய தந்திரங்களைக் கண்டறிய போராடுகிறாம். நாம் ஒரு அர்த்தப்பூர்வமான மீட்சிக்கான வாய்ப்புகளைப் பெற விரும்பினால், காலனியாதிக்கத்திற்கெதிராக ஒரு முக்யத்துவம் வாய்ந்த செயல்பாட்டை நிறுவ வேண்டும். அடிப்படை விதிமுறைகளைச் சாத்யப்படுத்திய அரசியல் தளத்தின் இழப்பையும் அதே சமயத்தில் நாம் சமாளிக்க வேண்டும்.  இந்த இடத்தில்சாராம்சவியல்குறித்த பின்-நவீனத்துவ விமர்சனத்தை ஒரு முன்மாதிரியாக, ஒத்தியல்பின் கட்டமைப்புக்கு உரியதாக நான் நினைத்துப் பார்க்கிறேன்.

சொல்லாடலைச் செழுமைப்படுத்தமற்றதுகளின்அனுபவத்தைச் சுலபமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேடாத பின்-நவீனத்துவக் கோட்பாடு, இனவெறியின் அரசியலிலிருந்துவேறானதுகளின் அரசியலைவிலக்கக் கூடாது. இனவெறியின் ஆபத்தை உணர, அடித்தள மக்களின் வாழ்நிலைமையின் வலியைச் சற்று உள்வாங்க வேண்டும். அடித்தள மக்களில் பெரும்பான்மையினர் கறுப்பினம் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்குப் பின்-நவீனத்துவத்தின் வருகைக்கு முன்பிருந்த மற்றும் தற்போதைய பின்-நவீனத்துவச் சூழலில் அதிகத் துயரம் நிரம்பிய வெளிப்பாடாக அமைந்த நமது தொகுப்பான நிலைமை தொடர்ச்சியான இடம் பெயர்தலிலும் ஆழமான அந்நியத்துவத்திலும் நம்பிக்கையின்மையிலும் உருவாக்கம் பெற்று வருகிறது.

ஆசை என்ற சொல் நம்மில் பெரும்பாலோர் பகிர்ந்து கொண்ட உளவியல் நிலையை, இனம், வகுப்பு, பால்வகை மற்றும் உடலிச்சை போன்ற எல்லைக் கோடுகளைக் கடந்த ஒரு பொதுவான உளவியல் நிலையை நன்கு விவரிக்கிறது. குறிப்பாக, தேர்ச்சி பெற்ற விவரணை மீதான பின்-நவீனத்துவக் கட்டவிழ்த்தல் அணுகுமுறையின் தொடர்பில், விவரணைகளால் மௌனமாக்கப்பட்டவர்களின் இதயத்தில் ஊற்றெடுக்கும் ஆசை, ஆய்வு நிலை தோய்ந்த குரல்மீது விருப்பம் கொள்கிறது. “ராப்இசை, பாடலின் தொடக்க கால இடத்தைக் கைப்பற்றியதும், இளைய கறுப்பினக் கிராமிய இசை மத்தியில் மிகவும் விரும்பத்தக்க ஒலியாகவும், மேலும் அடித்தள மக்களின்அத்தாட்சியாகவடிவம் பெறத் துவங்கியதும் ஒரு விபத்தல்ல. “ராப்இசை, ஒரு ஆய்வு ரீதியான குரலை வளர்த்தெடுப்பதற்காக அடித்தள இளம் வயதினரின் ஆற்றலைத் தூண்டியது. இளம் வயதினரின் ஒரு கூட்டம் கூறியது போல அது ஒருபொதுவான அறிவு’. “ராப்இசை, விவரிக்கின்ற, யாசிக்கின்ற, வற்புறுத்துகின்ற ஒரு ஆய்வுரீதியான குரலை முன்னிறுத்துகிறது. இதை ஒரு குரலாக மாறுகிற உட்பொருளாகக் கருத்தில் கொண்டு அடையாளத்தின் விமர்சனத்தின் மீது குவியும் பின்- நவீனத்துவம், காலனியாதிக்கப் பாதிப்புகளால் நொடிந்து போன, அடக்கியாளும் தலைமையை மீட்டுருவாக்கம் செய்யும் அதிகாரத்தின் பாதிப்புகளில் நொடிந்து போனவர்களை அனுமதிக்கிற சொல்லாடல் மற்றும் செயல்பாடுகளின் சாத்யப்பாடுகளை அச்சுறுத்துகிற, தடுக்கிற காரணியாக மேலோட்டமான முதல் பார்வைக்குத் தோன்றுகிறது. இந்த அச்சுறுத்தலின் எழுச்சி மற்றும் அந்த எழுச்சியால் தூண்டப் பெற்ற அச்சம், பின்-நவீனத்துவ அரசியல் தாக்கத்தின் தவறான புரிந்து கொள்ளல் மீது கட்டமைக்கப்பட்டாலும் கூட, அவை பதிலடி தருவதை வடிவமைக்கத் தவறுவதில்லை. கறுப்பினக் கிராமிய இசை, சாராம்சவியலின் விமர்சனத்திற்குப் பதிலடி தரும் போது எனக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. குறிப்பாக ஒத்தியல்பான அரசியலின் நம்பகத்தன்மையை அவ்விசை மறுதலிக்கும் போது -“ஆமாம், அடையாளத்தைத் துறப்பது எளிதானது தான், வேறொரு அடையாளத்தை அணியும் போது” -எனும் மறுதலிப்புகள் வியப்பை ஊட்டுவதில்லை. உட்பொருள் மீதான பின்-நவீனத்துவ விமர்சன எழுத்தாளர்களைச் சந்தேகிக்கக் கூடாதா? அவர்கள் வரலாற்று மதிப்பீடுகளின் மேற்பரப்பில் வீற்றிருக்கும் பொழுதும் ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் முதன் முறையாக தங்கள் குரல் உயர்வதை உணரும் பொழுதும். அறிவுக் கூர்மையும் இருத்தலின் வியாபகமும் அணுகுமுறையின் திருப்பத்தை நிலைப்படுத்திக் கொண்டாலும், மாறுபாடுகளின், உருமாற்றங்களின் வழியில் நிகழும் அந்தச் சொல்லாடலில், அது உண்மையில் இடைவெட்டி நுழைவதில்லை.

ஆப்பிரிக்க-அமெரிக்க அனுபவத்தின் நமது புரிதல்களைத் திறக்கின்ற பின்-நவீனத்துவச் சிந்தனைக்குள் உருவான நெறிமுறைகளின் விமர்சனம், நுட்பமான பார்வைகளைக் குருடாக்கக் கூடாது. பின்-நவீனத்துவச் சிந்தனைப் போக்கு வலியுறுத்தும் சாராம்சவியலின் விமர்சனம், பாங்கான ஒத்திசைவின் கருத்தியலை வரையறை செய்தலுடன் அக்கறையுள்ள ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கு உதவிக்கரமாக இருக்கிறது. நாம் மேலும் நம்மீது வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் ஒருவிதக் குறுகிய, இறுக்கமான கறுப்பினக் கருத்தாக்கத்தைச் சுமத்தி உள்ளோம். உலகளாவிய கருத்தாக்கங்களுக்குச் சவால் விடுக்கிற, அடர்ந்த கலாச்சாரத்திற்குள்ளும் பிரக்ஞை வெளிக்குள்ளும் இருக்கும் நிலையற்ற ஒத்திசைவுக்கும் சவால் விடுக்கிற சாராம்சவியலின் பின்-நவீனத்துவ விமர்சனம், செயலாண்மையின் உறுதி நிலைக்காகவும் சுயத்தைக் கட்டமைக்கவும் புதிய சாத்யப்பாடுகளைத் திறக்க முடியும்.

வகுப்பியக்கம், தொகுப்பான கறுப்பின அனுபவத்தை மாறுதலுக்குட்படுத்துகிற வழிகளை ஏற்றுக் கொள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைச் சாராம்சவியல் விமர்சனத்தின் செயல்பாடு அனுமதிக்கிறது. அதனால் இனவாதம் நம் வாழ்வின் மீது அதே பழைய தாக்கத்தைப் பெறும் அவசியமில்லாது போகிறது. பன்முகக் கறுப்பின அடையாளத்தை வலியுறுத்தவும் பலதரப்பட்ட கறுப்பின அனுபவத்தை வலியுறுத்தவும் அந்த விமர்சனம் நம்மை அனுமதிக்கிறது. வெள்ளையின ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடிக்கவும் வலுவூட்டவும் ஒற்றைப் பரிமா வழிகளில் கறுப்பினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் கறுப்பின அடையாளத்தின் காலனிய-இம்ப்பீரியலிச முன்மாதிரிகளுக்கு அது சவால் விடுக்கிறது. “ஆதிகாலகருத்துருவை உருவாக்கிய, ஒருநம்பகத்தன்மைவாய்ந்த அனுபவத்தின் கருத்துருவை மேம்படுத்திய சொல்லாடல், இருத்தலின் முன்மாதிரிகளை, நிலையான கருத்தை உறுதிப்படுத்துகிற கறுப்பின வாழ்வின் வெளிப்பாடுகளைஇயற்கையாகபாவிக்கிறது. சாராம்சவியலாளரின் கருத்துக்களைத் துறத்தல் என்பது இனவாதத்திற்கு ஒரு மாபெரும் சவாலாக உள்ளது. சமகால ஆப்பிரிக்க-அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம் காலணியாதிக்க எதிர்ப்புச் செயல்பாடுகளில் வேர் கொண்டிருக்க வேண்டும். கறுப்பின அடையாளத்தின் நம்பகத் தன்மையின் கருத்துருக்களை மறு உருவாக்கம் செய்தலை அது தொடர்ந்து எதிர்க்கிறது. தங்களைத் தாங்களே உட்பொருளாக்கும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் போராட்டத்தை உதாசினப்படுத்துவதற்கு இந்த விமர்சனம் பன்முகத் தன்மை வாய்ந்ததாக அமையக் கூடாது. தனித்தன்மை வாய்ந்த நெருக்கடி மிகுந்த இடங்களிலிருந்து பேசுவதற்கு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அந்த அனுபவம் நம்மை வலுப்படுத்துவதை மறுக்க இயலாது. இது மற்றவர்களின் குரலை மறுப்பதனால், சில குரல்களை வலுப்படுத்தும் அதிகாரத்துவ நவீனத்துவ விவரணைகளின் மறு உருவாக்கம் அல்ல. மாற்றங்கள் நிரம்பிய கறுப்பின உள்ளீடுகளுக்கான நமது போராட்டத்தின் ஒரு பகுதி, எதிர்நிலை மற்றும் விடுதலைத் தன்மை வாய்ந்த அடையாளத்தையும் சுயத்தையும் கண்டுணரும் தேடுதலாகும். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் ஒரு பகுதி மீதான சாராம்சவியலை விமர்சிப்பதற்கான விருப்பமின்மை அச்சத்தின் மீது வேர் கொண்டுள்ளது. குறிப்பிட்ட வரலாறு மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் அனுபவத்தின் பார்வையைக் காயப்படுத்தும் கிராமிய இசைக்கும், அனுபவத்திலிருந்து எழும் ஒப்பற்ற உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் பங்கம் விளைவித்து விடும் எனும் அச்சம் புரையோடிக் கிடக்கிறது. “அனுபவ அதிகாரத்தின்முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகையில், சாராம்சவியலை விமர்சிப்பது தான் இது தொடர்பான போதுமான எதிர்வினையாக இருக்கும். கறுப்பினச் சாரம் பெற்ற கருத்தினைக் கைவிடுதலுக்கும் சிறைப்படுதல் மற்றும் போராட்டத்தின் அனுபவத்தில் நிர்மாணிக்கப்படும் கறுப்பின அடையாளத்தின் ஒப்புகைக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன.

கறுப்பினக் கிராமிய இசை, சாராம்சவியலை விமர்சிக்கையில், பன்முக கலாச்சாரப் படைப்பாக்கங்களைச் சாத்தியப்படுத்தும் வாழ்நிலையின் கறுப்பின அடையாளத்தில் முகிழ்க்கும் பன்முக அனுபவங்களை அங்கீகரிப்பதற்கு நாம் உரிமை பெறுகிறோம். இந்தப் பன்முகத் தன்மை புறக்கணிக்கப்படுகையில் கறுப்பினக் கிராமிய இசை வடிவம் இரண்டு வகைகளாகப் பிரிவதை நாம் எளிதாகக் காணலாம். ஒன்று நாட்டுப் பற்று அல்லது தன்வயப் பாடல்கள். கறுப்பின ஒத்திசைவுகள் அல்லது வெள்ளையின ஒத்திசைவுகள். கறுப்பின அனுபவத்தின் மீதான பின்-நவீனத்துவத் தாக்கம் பற்றி அணுகுவதென்பது, குறிப்பாக அடையாளம் குறித்த நமது அறிவை மாறுதலுக்குட்படுத்துவதென்பது, தொகுப்பான ஒப்பந்த அடிப்படைகளை நாம் தெளிவான ஒழுங்கில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கூச்சல்கள் (பொருளாதார, ஆன்மீக, திடீரெனக் கிளம்பும் இனவெறி வன்முறைகள், இன்னும் பிற) வாயிலாக, பொதுவான கலாச்சாரம் மீதும் எதிர்ப்புப் போராட்டங்கள் மீதும் உள்ள நமது தொடர்பை மறு ஆய்வு செய்வதற்கான சூழலால் நாம் உந்தப்படுகிறோம். “வேறானதுகளின்மீது கோட்பாட்டு ரீதியான கவனம் செலுத்தும் கறுப்பினரல்லாத பின்-நவீனத்துவச் சிந்தனையாளர்கள் பலர் இனம் மற்றும் இனவெறி குறித்து முரண்பாடு கொண்டிருப்பது போல நம்மில் பெரும்பாலோர் இச்செயலை எதிர்கொள்ளத் தயங்குகிறோம்.

இசை என்பது ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால் படைக்கப்பட்ட கலாச்சார வெளிப்பாடு. அது பின்-நவீனத்துவக் கோட்பாட்டாளர்களை அதிகமாகக் கவர்ந்திருந்தது. அங்கு கட்டாயமான தணிக்கை முறைகள் மற்றும் கறுப்பினக் கிராமிய இசையின் கலாச்சார வெளிப்பாட்டின் மற்ற வடிவங்களான இலக்கியப் படைப்புகள், விமர்சன எழுத்துக்கள் மேலும் பலவற்றின் குறுக்கீடுகள் இருக்கின்றன என்பது வெகு அரிதாகவே ஒத்துக் கொள்ளப்படுகிறது. பரந்த வாசகர்களைக் கவரும் படைப்புகளை மேம்படுத்தும் ஜ்வாலையை அணைப்பது போல கறுப்பினக் கலாச்சாரப் பிரதிநிதித்வத்தைக் கட்டுப்படுத்தவும் சூழ்ச்சியுடன் கையாளவும் பத்திரிக்கையாளர் மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் நடத்தும் முயற்சி, அங்கீகாரம் பெறத் துடிக்கிற பல கறுப்பினக் கிராமிய இசை வடிவங்கள் உணர்கிற படைப்பாக்கத்திற்கு நொண்டித்தனமான, அடிதடி வழிகளில் எல்லை வகுக்கிறது. உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். ஆக்கப்பூர்வமான எழுத்தென நான் படைக்கும், பின்-நவீனத்துவ எதிர்நிலை உணர்வின் பிரதிபலிப்பென நான் கருதும் அரூபமான, சிதிலமான, வரிசைக்கிரமமற்ற விவரணை கொண்ட படைப்புக்கள் பத்திரிக்கையாளர்களாலும் வெளியீட்டு நிறுவனங்களாலும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் நினைக்கிற எழுத்தின் வகை கறுப்பினப் பெண்கள் படைக்க வேண்டும் என்பதும் அல்லது அவர்கள் நம்புகிற எழுத்து விலை போகும் என்பதும் பொருத்தம்மிக்கதாக இல்லை. கலாச்சார வெளிப்பாடுகளின் வடிவம் குறித்து எழுதும், குறிப்பாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஒரே கறுப்பின மனிதன் நான் தான் என, குறிப்பிட்ட வகை எழுத்துக்களுக்கான போதிய வாசகர்களின்மையால் அவதியுறும் நான் எண்ணவில்லை. பின்-நவீனத்துவச் சிந்தனையாளர்களும் கோட்பாட்டாளர்களும் தங்கள் படைப்புக்களுக்காக தாங்களே வாசகர் வட்டமென அமைப்பாக்கம் செய்வது இன்றியமையாததாக உள்ளது. இதைச் செய்வதற்கு அவர்கள் உறுதியான அதிகாரம் மற்றும் தனிச் சிறப்புரிமையை, திறனாய்வை அதிகமாக உள்ளடக்கியதாக இருக்கும் எழுத்து வெளிக்குள் அரங்குகளைத் திறப்பதற்காகப் பெற்றிருக்க வேண்டும். பின்-நவீனத்துவச் சொல்லாடலின் சிறப்புமிக்க செயல்பாடுகளில் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு எதிர்ப்புணர்வின் பின்-நவீனத்துவத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். இச்சொல்லாடலில் கறுப்பின அறிவுவாதிகளின் கலந்து கொள்ளலை இந்தத் தலையீட்டின் ஒரு பகுதி தேவைப்படுத்துகிறது.

கார்னெல் வெஸ்ட், தனதுபின்-நவீனத்துவம் மற்றும் கறுப்பு அமெரிக்காஎன்னும் கட்டுரையில் கறுப்பின அறிவுவாதிகள் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எனக் குறிப்பிடுகிறார். மேலும் கறுப்பின மற்றும் வெள்ளையினக் கலாச்சாரத்தை எதிர்கொள்வதில் அவர்கள் விரைவில் சோர்ந்து போகிறார்கள் அல்லது ஐரோப்பிய-அமெரிக்க வரையறைக்குள் முற்றிலும் கரைந்து போகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். அவரால் இந்தக் குழுவை, மாறுதலுக்குட்படும் பின்-நவீனத்துவச் சிந்தனைப் போக்கின் செயல்திறம் மிக்க படைப்பாளர்களாகக் காண முடியவில்லை. நான் பொதுவான இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்கையில், கறுப்பின அறிவுவாதிகள் விளிம்புகள் மீது பழி சுமத்துவதில்லை எனும் புரிதலுடன் முன் தொடர வேண்டும். எங்கள் படைப்புக்கள், ஒரு பரந்துபட்ட, கறுப்பின மக்களின் அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கிய வாசகர்களுக்கு அர்த்தப்பூர்வமானதாக இருக்குமா, இருக்காதா என்பதை நாங்கள் படைக்கும் மற்றும் செயல்படும் போக்கு தீர்மானிக்கும். கறுப்பின அறிவுவாதிகள், கறுப்பின வாழ்வுடனான உயிரியல் தொடர்பில் பின் தங்கி உள்ளனர் எனவும், மேலும், இந்தப் போதாமை, கறுப்பினப் பாதுகாப்பின் மதிப்புகளைச் சரித்து விடும் எனவும் கார்னெல் வெஸ்ட் ஆதங்கப்படுகிறார். இந்த அறிக்கை சாராம்சவியலின் அடையாளத்தைத் தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளதைப் பறை சாற்றுகிறது. இந்தப் போதாமையை உணராத கறுப்பின அறிவுவாதிகள் மீது நமது கவனத்தைத் திருப்புவது அவசியமாக உள்ளது - நமது இடையீடு அரிதாக இருந்த போதிலும். அவர்களின் படைப்புக்கள், ஆய்வுரீதியான கறுப்பினப் பிரக்ஞையின் மேம்பாட்டை நோக்கிய நெறிமுறைகளை முதன்மைப்படுத்துவதாகவும், அர்த்தப்பூர்வமான பாதுகாப்புநிலைப் போராட்டத்தில் பங்கு பெறும் நமது ஒட்டு மொத்தத் தகுதிப்பாட்டைப் பலப்படுத்துவதாகவும் உள்ளது. கோட்பாட்டு ரீதியான கருத்துருவாக்கங்கள் மற்றும் ஆய்வுரீதியான சிந்தனைப் போக்குகள் முற்றிலும் படைப்பாக்கங்களில் மட்டுமோ அல்லது முற்றிலும் பயில் நிறுவனங்களில் மட்டுமோ தனது ஊடுருவலை நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. செல்வாக்கு மிக்க வெள்ளையினக் கல்வி நிலையங்களில் பணி புரிகையில், கறுப்பின மக்களுடன் நேசத்துடனும் தீவிர உணர்வு நிலையிலும் இயங்கி வந்துள்ளேன். இது நான் மற்ற கல்வியியலாளர்கள் மற்றும் அறிவுவாதிகளுடன் பின்-நவீனத்துவம் குறித்த எழுத்து பற்றியும், சிந்தனைப் போக்கு பற்றியும் உரையாடப் போவது போல அல்ல. மேலும், கல்வியாளர்களல்லாத குடும்பத்தினர்களாக, நண்பர்களாக, தோழர்களாக இருக்கும் அடித்தள வகுப்பின் கறுப்பினப் பாடகர்களுடன் இந்தக் கருத்துருவாக்கங்கள் பற்றி கலந்துரையாடப் போவது போலவும் அல்ல. அடித்தள ஏழை கறுப்பினர்களுடன் கட்டுண்டு கிடக்கும் எனது உறவை நான் உடைக்கவில்லையாதலால், வாழ்நிலைக்குரிய தகுதிப்பாட்டைப் பலப்படுத்தவும், தினசரி வாழ்வை மேம்படுத்தவும் தேவைப்படும் அறிவின் பகிர்ந்து கொள்ளலை நான் உய்த்தறிந்தேன். அதாவது, விமர்சகர்கள், படைப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எழுதியும், கற்பித்தும், சொற்பொழிவாற்றியும், கறுப்பினர் மீதான நமது உறவுகளை வளப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் ஆய்வுரீதியான கவனம் செலுத்த வேண்டும். அறிவை, பல முன்னணிச் செயல்பாடுகளில் பரப்பக் கூடிய, பகிர்ந்தளிக்கக் கூடிய விழிப்புணர்வை நடைமுறைப்படுத்தும் இருத்தலின் பழக்க வழக்கங்களைச் செழுமைப்படுத்துவது பற்றி நான் மீண்டும் இங்கே உண்மையில் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். சற்று விரிவான தளத்திற்கு இந்த அறிவைக் கிடைக்கச் செய்வதும், அணுகச் செய்வதும் அரசியல் ரீதியான பொறுப்புணர்வைச் சார்ந்துள்ளது.

மையம் தவிர்த்த பாடுபொருளுடன் கூடிய பின்-நவீனத்துவக் கலாச்சாரம் தான் தளைகளை உடைக்கும் வெளிகளாக இருக்க முடியும் அல்லது ஒரு புதிய பலவகைப்பட்ட வடிவங்கள் அடங்கிய நிகழ்வைப் பரிசளிக்க முடியும். குறிப்பிட்ட எல்லை வரை உடைப்பு, சமதளம், உள்ளீடு மற்றும் நிகழ்வுகளின் விருந்து ஆகியன, தினசரி வாழ்வின் அர்த்தப்பூர்வத் தொடர்பின்மையுடன் கூடிய குறுகிய தனிமைப்பட்ட வடிவத்தினால் கட்டுண்ட அறிவுவாதிகள் தேவைப்படாத எதிர் நிலைச் செயல்பாடுகளுக்கான ஒரு இடைவெளியை உருவாக்குகின்றன. கலாச்சாரத்துடனான பின்-நவீனத்துவச் செயல்பாடு ஆசையிலிருந்து அறிவார்த்த படைப்பாக்கத்திற்கு உந்தித் தள்ளுகிறது. ஒரு பரந்துபட்ட மக்களின், அறிஞர்களின், எழுத்தாளர்களின் தினசரி வாழ்நிலையை உணர்த்தும் இருத்தலின் பழக்க வழக்கங்கள், கலைத்தன்மை மிக்க வெளிப்பாடுகளின் வடிவங்கள் மற்றும் அழகியல் உணர்வுகளுடன் தொடர்புள்ள அறிவார்த்த படைப்பாக்கத்திற்கு உந்தித் தள்ளுகிறது. கலாச்சாரப் பிரதேச வெளியில், அழகியல் பற்றி சிந்திக்கும் கல்வியறிவற்ற ஏழைக் கறுப்பின அடித்தள மக்களுடன் ஆய்வுரீதியான உரையாடலில் ஒருவர் பங்கு பெற முடியும். நாம் என்ன காண்கிறோமோ, என்ன சிந்திக்கிறோமோ, எதைக் கருத்தில் கொள்கிறோமோ அதைப் பற்றி உரையாட முடியும். ஆய்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான வெளி அங்குள்ளது. பொதுவான கலாச்சாரத்துடன் உணர்வுரீதியான செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் கலை வடிவத்தைப் பற்றிச் சிந்திப்பது, எழுதுவது, உரை நிகழ்த்துவது மற்றும் படைப்பது கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஏனெனில் அது பாதுகாப்பு நிலைப் போராட்ட மையமான எதிர்கால நிகழ்விடமாக இருக்கலாம், புதிய மாறுதலுக்குட்பட்ட செயல்பாடுகள் நிகழும் ஒரு சந்திப்பு முனையாகவும் இருக்கலாம்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக