அவன் தலையால் இல்லையென்று சொல்கிறான்
ஆனால் இதயத்தால் ஆம் என்கிறான்
அவன் விரும்புவதற்கு ஆம் சொல்கிறான்
பேராசிரியருக்கு இல்லை என்கிறான்
அவன் எழுகிறான்
அவர்கள் சோதிக்கிறார்கள்
அனைத்துக் கணக்குகளும் புதிர்கள்
திடுக்கென பைத்தியச் சிரிப்புடன் வெல்கிறான்
ஒவ்வொன்றையும் தேய்த்தழிக்கிறான்
எண்களையும் சொற்களையும்
தேதிகளையும் பெயர்களையும்
வாக்கியங்களையும் கண்ணிகளையும்
ஆசிரியரின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல்
அதியற்புதக் குழந்தைமையின் சீற்றத்தில்
வண்ணச்சுண்ணாம்புத் துண்டுகளால்
துயரக் கரும்பலகை மீது வரைகிறான்
மகிழ்ச்சியின் முகத்தை.
*
#Monetization#:
https://shareasale.com/r.cfm?b=1662368&u=2859698&m=103309&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1772141&u=2859698&m=110488&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1741000&u=2859698&m=108514&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1689334&u=2859698&m=104872&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1531977&u=2859698&m=96940&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1626256&u=2859698&m=101580&urllink=&afftrack=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக