மனிதனையும் விலங்கையும் விட அதிக உயரமாக
நான் வளர்ந்தேன்;
இப்பொழுது நான் பேசும் பொழுது-
என்னுடன் யாரும் பேசுவதில்லை.
அதிக உயரமாகவும் அதிகத் தனிமையிலும் நான் வளர்ந்தேன் –
நான் காத்திருக்கிறேன்: எதற்காக நான் காத்திருப்பதில் மட்டும்
ஆழ்ந்திருக்கிறேன்?
மிக நெருக்கமாக, மேகங்கள் அமர்ந்திருக்கின்றன:
முதல் மின்னலுக்காக நான் காத்திருக்கிறேன்.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக